ஊரே கண்ணு வைக்கும் அளவுக்கு சொத்து இருக்கு! செகண்ட்-ஹேண்ட் காரை பிடிவாதமாக வாங்கியுள்ள தொழிலதிபர்!!

பிஎம்டபிள்யூ (BMW) கார்களுக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு உள்ளது. ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம், இந்தியாவில் விலையுயர்ந்த சொகுசு கார்களை விற்பனை செய்வதில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்துக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் இருந்து அதிக பேரால் வாங்கப்படும் கார்களுள் 5-சீரிஸ் (5-Series) ஒன்றாகும். இந்த பிரபலமான பிஎம்டபிள்யூ காரை மின்சாரத்தை உருவாக்கக்கூடிய எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனர் (MD) வாங்கியுள்ளார். இந்த தொழிலதிபரின் பெயர், கிறிஸ்டோ ஜார்ஜ் (Christo George) ஆகும்.

hycon company md buys bmw

ஆற்றலை வழங்கக்கூடிய எலக்ட்ரானிக் பாகங்கள் மட்டுமின்றி, சூரிய ஒளியின் மூலம் செயல்படும் சாதனங்கள் மற்றும் லித்தியம்-இரும்பு பேட்டரிகளையும் உற்பத்தி செய்யும் 'ஐகான்' (Hycon) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக கிரிஸ்டோ சார்ஜ் உள்ளார். இவ்வளவு ஏன், ஐகான் நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்கள் கூட உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

ஹெட்டோ எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷா போன்ற எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்களை ஐகான் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இன்னும் சொல்லப்போனால், இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் லித்தியம்-இரும்பு பேட்டரிகள் எலக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்படுபவை ஆகும். எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டும் இல்லாமல், பிற தொழில்களிலும் ஐகான் நிறுவனத்தின் லித்தியம்-இரும்பு பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன.

hycon company md buys bmw

லித்தியம் ஃபெர்ரோ பாஸ்பேட் (LiFePO4) டெக்னாலஜியில் லித்தியம்-இரும்பு பேட்டரிகளை ஐகான் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. மேலும் கேரளாவின் திரிச்சூரை சேர்ந்த இந்த நிறுவனம், மருத்துவ துறை, தொழிற்நுட்ப துறை மற்றும் பசுமை எரிவாயு துறை என பல துறைகளில் கால்பதித்துள்ளது. இந்த அளவிற்கு பிரம்மாண்டமான நிறுவனமாக விளங்கும் ஐகானின் அலுவலகம் சென்னையிலும் சைதாப்பேட்டையில் உள்ளது.

இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டோ ஜார்ஜ், பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரை குடும்பத்தினருடன் ஷோரூமுக்கு சென்று டெலிவிரி பெற்றுள்ளார். தொழிலதிபர் கிறிஸ்டோ ஜார்ஜ் வாங்கியிருப்பது பிராண்ட்-நியூ 5-சீரிஸ் கார் கிடையாது. ஏற்கனவே ஒருவரால் பயன்படுத்தப்பட்ட செகண்ட்-ஹேண்ட் 5-சீரிஸ் கார் ஆகும். அதனை பளபளப்பானதாக மாற்றி கிறிஸ்டோ ஜார்ஜிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கொச்சியில் 8 வருடங்களாக செயல்படும் செகண்ட்-ஹேண்ட் கார் ஷோரூம் ஒன்று இவ்வாறு பழைய 5-சீரிஸ் காரை புத்தம் புதியது போல் மாற்றி, கிறிஸ்டோ ஜார்ஜிடம் விற்றுள்ளது. ஆனால், டெலிவிரி பெறும்போது எடுக்கப்பட்ட வீடியோவில் கிறிஸ்டோ ஜார்ஜ் வாங்கியிருப்பது செகண்ட்-ஹேண்ட் கார் போன்றே தெரியவில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு கார் பளபளப்பானதாக காட்சியளிக்கிறது.

கிறிஸ்டோ ஜார்ஜ் வாங்கியிருப்பது எந்த வருடத்தில் உருவாக்கப்பட்ட பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் கார் என்பது தெரியவில்லை. புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிப்பதால், சமீபத்தில்தான் இந்த காரை வாங்கியிருக்க கூடும். இந்திய மார்க்கெட்டில் தற்சமயம் இரு விதமான வேரியண்ட்களில் 5-சீரிஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது. அவை இரண்டின் விலையும் ஒரே அளவில் உள்ளது.

பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.72.90 லட்சம் ஆகும். பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கும் இந்த பிஎம்டபிள்யூ கார் இந்தியாவில் லாங் வீல்-பேஸ் வெர்சனில் மட்டுமே விற்பனை செய்யப் படுகிறது. அதாவது, காரின் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தொலைவு அதிகமாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: செகண்ட்-ஹேண்ட் கார் என்பதினால்தான் ஷோரூமில் காரை டெலிவிரி பெறும்போது தொழிலதிபர் கிறிஸ்டோ ஜார்ஜ் குடும்பத்தினரிடம் பெரியதாக எந்த கொண்டாட்டமும் இல்லை. இவ்வளவு பெரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என்கிற உயரிய பதவியில் இருந்தும் செகண்ட்-ஹேண்டில் காரை வாங்கியிருப்பது ஆச்சிரியமாக உள்ளது. சமீப காலமாக பெரும் செல்வந்தர்கள் விலையுயர்ந்த கார்களை செகண்ட்-ஹேண்டில் வாங்கவே விரும்புகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 30, 2025, 20:26 [IST]
English summary
Hycon company md christo george buys second hand bmw 5 series car
மேலும்... #pre owned car business #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+