சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதித்த 26 பெற்றோர்களுக்கு ஜெயில்..! போலீசார் அதிரடி நடவடிக்கை

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதித்த பெற்றோர்கள் 26 பேருக்கு ஐதராபாத் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

By Balasubramanian

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதித்த பெற்றோர்கள் 26 பேருக்கு ஐதராபாத் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் பைக் ஓட்டியதால் 26 பெற்றோர்களுக்கு ஜெயில் தண்டனை..! போலீசார் அதிரடி நடவடிக்கை

இந்தியா முழுவதும் சிறுவர் வாகனம் ஓட்டுவது என்பது சாதாரணமாக மாறிவிட்டது. பலர் பள்ளி சீருடைகளிலேயே பைக்குகளை ஓட்டி செல்வதை பார்க்க முடிகிறது.

சிறுவர்கள் பைக் ஓட்டியதால் 26 பெற்றோர்களுக்கு ஜெயில் தண்டனை..! போலீசார் அதிரடி நடவடிக்கை

லைசன்ஸ் பெற தகுதியே இல்லாத வயதில் இவர்கள் வாகனம் ஓட்டுவதில் விபத்துக்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இது இவர்களை மட்டுமல்லாமல் ரோட்டில் செல்லும் மற்றவர்களையும் இது பாதித்து வருகிறது.

சிறுவர்கள் பைக் ஓட்டியதால் 26 பெற்றோர்களுக்கு ஜெயில் தண்டனை..! போலீசார் அதிரடி நடவடிக்கை

இந்நிலையில் லைசன்ஸ் இல்லாத மைனர்கள பைக் ஓட்டினால் அவர்களை பைக் ஓட்ட அனுமதித்த பெற்றோர்களுக்கு தண்டனை வழங்க சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு அமலில் உள்ளது.

சிறுவர்கள் பைக் ஓட்டியதால் 26 பெற்றோர்களுக்கு ஜெயில் தண்டனை..! போலீசார் அதிரடி நடவடிக்கை

இந்நிலையில் ஏற்கனவே தமிழ்நாட்டில் இது போன்ற இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளது. அதில் மைனர் பைக் ஓட்டியதால் அவர்களின் பெற்றோருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் பைக் ஓட்டியதால் 26 பெற்றோர்களுக்கு ஜெயில் தண்டனை..! போலீசார் அதிரடி நடவடிக்கை

இதற்கிடையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இச்சட்டம் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்., 23ம் தேதி வரையில் 273 வழக்குகள் மைனர்கள் பைக் ஓட்டியது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறுவர்கள் பைக் ஓட்டியதால் 26 பெற்றோர்களுக்கு ஜெயில் தண்டனை..! போலீசார் அதிரடி நடவடிக்கை

இது குறித்து ஐதராபாத் டிராபிக் போலீஸ் கூடுதல் கமிஷ்னர் அணில் குமார் இது குறித்து கூறுகையில் :"கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் மைனர்கள் பைக் ஓட்டியது தெடர்பாக 273 வழக்குகளை பதிவு செய்துள்ளளோம்.

சிறுவர்கள் பைக் ஓட்டியதால் 26 பெற்றோர்களுக்கு ஜெயில் தண்டனை..! போலீசார் அதிரடி நடவடிக்கை

அதில் மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பைக் ஓட்டிய மைனர்களின் பெற்றோர்கள் 20 பேருக்கும், ஏப்ரம் மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 6 பேரின் பெற்றோர்களுக்கும் தண்டனை வழங்கியுள்ளோம். அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

சிறுவர்கள் பைக் ஓட்டியதால் 26 பெற்றோர்களுக்கு ஜெயில் தண்டனை..! போலீசார் அதிரடி நடவடிக்கை

தொடர்ந்து மைனர் டிரைவிங் தொடர்பாக பல அதிரடி நடவடிக்களை எடுக்கவுள்ளோம். அதே நேரத்தில் மைனர் டிரைவிங் தொடர்பாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்.

சிறுவர்கள் பைக் ஓட்டியதால் 26 பெற்றோர்களுக்கு ஜெயில் தண்டனை..! போலீசார் அதிரடி நடவடிக்கை

முறையான லைசன்ஸ் இல்லாமல் மைனர்கள் பைக் ஓட்டுவது அவர்களது உயிருக்கு மட்டுமல்ல மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இனி மைனர்கள பைக் ஒட்டினால் அதற்கு அவர்களின் பெற்றோர்கள் தான் பொறுப்பு " என கூறினார்.

சிறுவர்கள் பைக் ஓட்டியதால் 26 பெற்றோர்களுக்கு ஜெயில் தண்டனை..! போலீசார் அதிரடி நடவடிக்கை

போலீசாரின் இந்த கடுமையான நடவடிக்கை முற்றிலும் வரவேற்க்க கூடியதே பைக் மீது உள்ள மோகத்தால் சிறு வயதிலேயே முறையான பயிற்சியும், லைசன்ஸ்சும் இல்லாமல் பைக்குளை ரோட்டில் ஓட்டி வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.

சிறுவர்கள் பைக் ஓட்டியதால் 26 பெற்றோர்களுக்கு ஜெயில் தண்டனை..! போலீசார் அதிரடி நடவடிக்கை

மைனர்கள் பைக் ஓட்டினால் போலீஸ் பிடிப்பார்கள் என தெரிந்த சிலர் மெயின் ரோட்டில் பைக் ஓட்டாமல் தெருக்கள் மற்றும் சந்துகள் வழியாக புகுந்து பைக்குளை ஓட்டி வருகின்றனர். இதனால் விபத்துக்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது. இதை தடுக்க கடும் நடவடிக்கை தேவை தான்.

சிறுவர்கள் பைக் ஓட்டியதால் 26 பெற்றோர்களுக்கு ஜெயில் தண்டனை..! போலீசார் அதிரடி நடவடிக்கை

ஆனால் இந்த மாதிரியான கடும் நடவடிக்கைகள் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு இல்லை பலருக்கு மைனர்கள் பைக் ஓட்டுவதால் வரும் சிக்கல்கள் குறித்து தெரிவது இல்லை. இந்த விழிப்புணர்வை முதலில் பெற்றோர்கள மத்தியில் ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

சிறுவர்கள் பைக் ஓட்டியதால் 26 பெற்றோர்களுக்கு ஜெயில் தண்டனை..! போலீசார் அதிரடி நடவடிக்கை

இதற்காக போலீசாார் சார்பில் பள்ளிகளில் பெற்றோர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தி பெற்றோர்களையும் குழந்தைகளையும் ஒன்றாக வைத்து மைனர்கள் பைக் ஓட்டினால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றியும். அதற்கான தண்டனை பற்றியும் எடுத்துரைக்க வேண்டும்.

சிறுவர்கள் பைக் ஓட்டியதால் 26 பெற்றோர்களுக்கு ஜெயில் தண்டனை..! போலீசார் அதிரடி நடவடிக்கை

மைனர்கள் பைக் ஓட்டினால் பெற்றோர்களுக்கு தான் தண்டனை கிடைக்கும் என்ற சட்ட திருத்தம் குறித்த தகவல் பெற்றோர்களிடம் சென்றாலே மைனர்கள் பைக் ஓட்டுவது குறையும். மாறாக நேரடியாக பெற்றோர்களுக்கு தண்டனை வழங்குவது அவர்களுக்கு சங்கடத்தையும் மனவேதனையையுமே அதிகம் உருவாக்கும்.

சிறுவர்கள் பைக் ஓட்டியதால் 26 பெற்றோர்களுக்கு ஜெயில் தண்டனை..! போலீசார் அதிரடி நடவடிக்கை

வீட்டில் சிறுவர்கள் எவ்வளவு அடம் பிடித்தாலும் அவர்களை பைக் ஓட்ட அனுமதிப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் வேறு ஏதாவது ஒரு விதத்தில் பைக் டிரைவிங்கில் ஈடுபடுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பு தான்.

Note: Images are for symbolic/representative purpose only. Images via Bangalore Traffic Police.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Hyderabad: 26 parents jailed for letting children drive. Read in Tamil
Story first published: Monday, April 30, 2018, 10:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X