போதையில் வாகனம் ஓட்டினால் வேலை காலி: ஹைதராபாத்தின் அதிரடி...

தெலுங்கானா மாநில ஹைதராபாத்தில் அம்மாநகர போக்குவரத்து காவல்துரையினர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் பணிபுரியம் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்புகின்றனர்.இந்த நடவடிக்கை ஹைதராபாத் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

போதையில் வாகனம் ஓட்டினால் வேலை காலி: ஹைதராபாத்தின் அதிரடி...

இந்தியாவில் நாளுக்கு நாள் வாகன விபத்துக்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதி வேகமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்தி வாகனம் ஓட்டுதல் போன்ற பல்வேறு விதி மீறல்களால் சாலை விபத்துகளும், விபத்துகளில் உயிர் இழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனை தடுக்க அனைத்து மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

போதையில் வாகனம் ஓட்டினால் வேலை காலி: ஹைதராபாத்தின் அதிரடி...

குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிக அளவு விபத்துகள் நடப்பதாக கருதப்படுகிறது, மேலும் இந்திய வாகன தடுப்பு பிரிவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மாபெரும் குற்றமென குறிப்பிட்டுள்ளனர். இந்திய போக்குவரத்து துறை சாலைகளில் எச்சரிக்கை பலகைகள் வைத்தும், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், விளம்பரங்கள் செய்தும் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை குறையவில்லை.

போதையில் வாகனம் ஓட்டினால் வேலை காலி: ஹைதராபாத்தின் அதிரடி...

ஓட்டுநர் உரிமம் ரத்து, வாகன பறிமுதல் போன்ற பல்வேறு கடுமையான சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தியும் அதை சரியாக நடைமுறைப்படுத்தாத காரணத்தால் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

போதையில் வாகனம் ஓட்டினால் வேலை காலி: ஹைதராபாத்தின் அதிரடி...

சமீபத்தில் பல்வேறு பிரபலங்கள் மது அருந்தி வாகனம் ஒட்டியது ஊடகங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.போக்குவரத்து காவலர்களின் மெத்தனம், லஞ்சம் போன்ற பல்வேறு முறைகேடுகளால் சாலை விபத்துக்கள் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

போதையில் வாகனம் ஓட்டினால் வேலை காலி: ஹைதராபாத்தின் அதிரடி...

இந்நிலையில் தெலுங்கானா மாநில ஹைதராபாத்தில் அம்மாநகர போக்குவரத்து காவல்துரையினர் மது அருந்தி வாகனம் ஒட்பவர்களை கட்டுப்படுத்த அதிரடியான புது முயற்சியை எடுத்துள்ளது. ஹைதராபாத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டுபவர்களை பிடித்து அபராதம் விதிப்பதோடு விட்டுவிடாமல், அவர்கள் பணிபுரியும் நிறுவன முகவரியை வாங்கி, இவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினார் என குறிப்பிட்டு நிறுவனத்திற்கு கடிதம் அனுப்புகின்றனர். இந்த நடவடிக்கையால் அம்மாநகர மது பிரியர்கள் பீதியில் உள்ளனர்.

போதையில் வாகனம் ஓட்டினால் வேலை காலி: ஹைதராபாத்தின் அதிரடி...

ஹைதராபாத் போலீசார் அனுப்பும் கடிதங்களில் நிறுவன பெயர் மட்டும் குறிப்பிடாமல் ஊழியர் மேலாண்மை அதிகாரிகளுக்கு நேரடியாக செல்லும் வகையில் கடிதங்களை அனுப்புகின்றனர். இதன்மூலம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் அல்லது அவர்கள் வேலை போவதற்கு கூட வாய்ப்புகள் அதிகம்.

போதையில் வாகனம் ஓட்டினால் வேலை காலி: ஹைதராபாத்தின் அதிரடி...

ஹைதராபாத் போக்குவரத்து காவல்துரையினரின் இந்த கடிதம் அனுப்பும் திட்டத்திற்கு அங்கு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் மற்ற மாநில போலிசாரும் நடைமுறைபடுத்தினால் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்தலாம் என கருதப்படுகிறது. இதை ஒரு சட்டமாக கொண்டு வரலாம் என மூத்த வல்லுனர்கள் கூறிவருகின்றனர்.

Most Read Articles
English summary
Hyderabad Cops Sending letters To Work Place: Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X