ராயல் என்பீல்டு பைக் ஓனர்களுக்கு குறி வைத்த போலீஸ்... பக்கா ஸ்கெட்ச்... இனிமேல் ஒருத்தரும் தப்பிக்க முடியாது!
இந்தியாவில் பைக்குகளை மாடிஃபிகேஷன் (Bike Modification) செய்யும் பழக்கம் பலரிடமும் காணப்படுகிறது. குறிப்பாக பைக் உரிமையாளர்கள் பலரும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை (Aftermarket Silencer) பொருத்தி கொள்கின்றனர். இது விதிமுறைகளுக்கு எதிரானது ஆகும். ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களால் ஏராளமான பிரச்னைகள் ஏற்படுவதால்தான், அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களால் ஒலி மாசுபாடு (Noise Pollution) ஏற்படுகிறது. இவை எழுப்பும் அதிகப்படியான சப்தம், சாலையில் பலருக்கும் இடையூறாக இருக்கிறது. அத்துடன் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களால், சுற்றுச்சூழல் மாசுபாடும் (Environment Pollution) கூட ஏற்படுகிறது. இவை அபாயகரமான வாயுக்களை வெளியிடுவதுதான் இதற்கு காரணம். ஒட்டுமொத்தத்தில் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களால், ஏராளமான தீமைகளே ஏற்படுகின்றன. அவற்றில் நல்ல விஷயங்கள் என்று எதுவும் கிடையாது. எனவேதான் அவற்றை பயன்படுத்துவதற்கு அரசு தரப்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் அதிகப்படியான சத்தம், பைக் உரிமையாளர்கள் பலரையும் ஈர்க்கிறது.

சாலைகளில் மற்றவர்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப வேண்டும் என்று நினைக்க கூடிய பைக் உரிமையாளர்கள் பலரும் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை வாங்கி பொருத்தி கொள்கின்றனர். அத்தகைய நபர்கள் மீது போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அத்துடன் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களின் ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் கூட மேற்கொள்ளப்பட்டுதான் வருகின்றன. ஆனால் பைக் உரிமையாளர்கள் பலரும் மாறும் எண்ணத்தில் இல்லை. தொடர்ந்து ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தி கொண்டேதான் உள்ளனர். அவர்கள் மீது போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள், தற்போது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக ஹைதராபாத் (Hyderabad) நகரில், 1,000 ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. ரோடு ரோலர் (Road Roller) கொண்டு, ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை, காவல் துறை அதிகாரிகள் நசுக்கி அழிக்கும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தும் பைக் உரிமையாளர்களுக்கு இந்த வீடியோ, ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை தொடர்பாக ஹைதராபாத் நகரின் அதிகாரிகள் பல்வேறு முக்கியமான தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ''இது போன்ற அதிரடியான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பெரும்பாலும் ராயல் என்பீல்டு (Royal Enfield) பைக்குகளின் உரிமையாளர்கள்தான் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பயன்படுத்தி வருகின்றனர். எனவே ராயல் என்பீல்டு பைக்குகள் மீது தனி கவனம் செலுத்தப்படுகிறது'' என்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் ரோடு ரோலர் மூலம் ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் அழிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. வெகு சமீபத்தில் புனே (Pune) காவல் துறை அதிகாரிகள் கூட 500க்கும் மேற்பட்ட ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்களை பறிமுதல் செய்து ரோடு ரோலர் மூலம் அழித்திருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
எனவே உங்கள் பைக்குகளில், ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் இருந்தால், அவற்றை உடனடியாக அகற்றி விடுவது நல்லது. இது காவல் துறை அதிகாரிகள் அபராதம் விதிப்பதில் இருந்து உங்களை பாதுகாக்கும். இல்லாவிட்டால் தேவை இல்லாமல் அபராதம் போன்ற நடவடிக்கைகளில் சிக்கி, மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம்.


Click it and Unblock the Notifications








