இதை விட வேற என்னங்க வேணும்? காவல் துறை எடுத்த திடீர் முடிவு... சந்தோஷத்தில் திக்குமுக்காடி போன வாகன ஓட்டிகள்!
காவல் துறையினர் எடுத்துள்ள அதிரடி முடிவால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக போக்குவரத்து விதிமுறைகளை காவல் துறையினர் தற்போது தீவிரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளனர். போக்குவரத்து விதிமுறைகள் மீறப்பட்டால், அதற்கு காரணமான வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராத்தை காவல் துறையினர் விதித்து வருகின்றனர்.

ஆனால் அனைத்து வாகன ஓட்டிகளும் அபராத தொகையை முறையாக செலுத்துவதில்லை. நிறைய பேர் அபராத தொகையை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இந்த சூழலில், அபராத தொகையை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்களுக்கு, தற்போது மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம், அபராத தொகைகளில் (Fines) தள்ளுபடிகளை ( Discount) வழங்குவதற்கு, காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். வாகன ஓட்டிகள் மத்தியில் இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பலரது வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டு விட்டது. இந்த பிரச்னை காரணமாக பலரும் தற்போது கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே வாகன ஓட்டிகளின் சுமையை குறைக்கும் வகையில், அபராத தொகைகளில் தள்ளுபடிகளை வழங்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இது வாகன ஓட்டிகளுடன் காவல் துறைக்கும் நன்மை பயப்பதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம், தள்ளுபடி காரணமாக நிலுவையில் உள்ள அபராத தொகை வசூலாகும் என காவல் துறையினர் நம்புகின்றனர்.

ஐதராபாத் போக்குவரத்து காவல் துறையினர்தான் (Hyderabad Traffic Police) அபராத தொகைகளில் தள்ளுபடிகளை வழங்க தற்போது திட்டமிட்டுள்ளனர். ஐதராபாத் நகரில் செலுத்தப்படாமல் உள்ள அபராத தொகை 600 கோடி ரூபாயை தொட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 600 கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை என்பதில் சந்தேகமில்லை.

இவ்வளவு பெரிய தொகையை வாகன ஓட்டிகள் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். அதனை வசூல் செய்வதற்கும் இந்த தள்ளுபடி நடவடிக்கை உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐதராபாத் நகரில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அதிவேகத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை கண்டறிய ஸ்பீடு கன்களை (Speed Guns) அதிகளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அத்துடன் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐதராபாத் நகர் முழுமைக்கும் செக் போஸ்ட்களை அமைத்து காவல் துறையினர் இதனை கண்காணிக்கின்றனர்.

மேலும் ஐதராபாத் நகரில் ஆட்டோ ரிக்ஸாக்களுக்கான மீட்டர் கட்டணமும் விரைவில் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு கடந்த பல வருடங்களாக ஆட்டோ ரிக்ஸாக்களுக்கான மீட்டர் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. இதனை கண்டித்து நிறைய ஆட்டோ டிரைவர்கள் மீட்டர் போட்டு ஓட்டுவதில்லை.

கட்டணம் மிகவும் குறைவாக இருப்பதால்தான், மீட்டர் போடுவதில்லை என ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இது பயணிகளுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. ஆட்டோ டிரைவர்கள் ஒரு சிலர் அதிக கட்டணம் வசூலிப்பதுடன், பயணிகளுடன் தேவையில்லாமல் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்டர் இல்லாத காரணத்தால் ஆட்டோ டிரைவர்களிடம் பயணிகள் பேரம் பேச வேண்டியுள்ளது. இது பல்வேறு வகைகளிலும் அசௌகரியங்களை ஏற்படுத்துவதால், விரைவில் ஆட்டோ ரிக்ஸாக்களுக்கான கட்டணம் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருவதால், மீட்டர் கட்டணங்களை மாற்றியமைக்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காவல் துறையினரே இந்த கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே ஐதராபாத் நகரில், ஆட்டோ மீட்டர் பிரச்னைக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோ பயணிகள் மத்தியில் இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








