மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் பேராசிரியர்... எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

பேராசிரியர் ஒருவர் மிகவும் மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்து வருகிறார். அதன் விலை எவ்வளவு? அதனை எப்படி தயாரிக்கிறார்? என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் மூழ்குவது உறுதி.

மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் பேராசிரியர்... எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

கச்சா எண்ணெய்யில் இருந்துதான் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கச்சா எண்ணெய்தான் பெட்ரோல், டீசலின் மூலப்பொருள். ஆனால் இந்தியாவிடம் தேவையான அளவிற்கு கச்சா எண்ணெய் வளம் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்கு பெரும்பாலும் இறக்குமதியையே நம்பியுள்ளது.

மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் பேராசிரியர்... எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் இறக்குமதியின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் தேவைக்காக அதிகப்படியான தொகையை செலவிடுவதால், இந்தியாவிற்கு பொருளாதார ரீதியிலான பிரச்னைகளும் ஏற்படுகின்றன.

மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் பேராசிரியர்... எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

அத்துடன் பெட்ரோல், டீசலின் விலையும் இந்தியாவில் மிக அதிகமாகவே உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி (ஜூலை 3) ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 73.20 ரூபாய். அதே சமயம் ஒரு லிட்டர் டீசல் இன்று 67.97 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்தே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் பேராசிரியர்... எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

கச்சா எண்ணெய் வளம் மிக்க நாடுகள் உற்பத்தியை திடீரென குறைத்து விட்டால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து விடுகிறது. சில சமயங்களில் உற்பத்தி வேண்டுமென்றே குறைக்கப்பட்டு செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் எதிர்பாராத காரணங்களால் இயல்பாகவே குறைந்து விடுகிறது.

மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் பேராசிரியர்... எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

எதுவாயினும் பாதிக்கப்படுவது என்னவோ நம்மை போன்ற சாமானிய வாகன ஓட்டிகள்தான். இதுதவிர மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்பு முறைகளாலும், பெட்ரோல், டீசலின் விலை அதிகமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் சதீஷ் குமார் என்ற பேராசிரியர் ஒருவரின் கண்டுபிடிப்பு தற்போது ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் பேராசிரியர்... எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

சதீஷ் குமார் ஐதராபாத்தை சேர்ந்தவர். அடிப்படையில் இவர் மெக்கானிக்கல் இன்ஜினியர். சதீஷ் குமாருக்கு தற்போது 45 வயதாகிறது. பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை சதீஷ் குமார் உருவாக்கி வருகிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு எப்படி பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறதோ, அதேபோல் பிளாஸ்டிக்கும் இன்று பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது.

மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் பேராசிரியர்... எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

குறிப்பாக பிளாஸ்டிக் மூலம் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே உலகின் பல்வேறு நாடுகளும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில் பிளாஸ்டிக் இன்று நமது தினசரி வாழ்வுடன் பின்னி பிணைந்து விட்டது.

மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் பேராசிரியர்... எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

ஆனால் பேராசிரியர் சதீஷ் குமாரின் கண்டுபிடிப்பு மேற்கண்ட 2 பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்வதாக உள்ளது. பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களை தயாரிக்கும் பிளாண்ட்டை ஒன்றை பேராசிரியர் சதீஷ் குமார் கட்டமைத்துள்ளார். இதற்கென தனியாக நிறுவனம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.

மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் பேராசிரியர்... எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகத்தில், பேராசிரியர் சதீஷ் குமாரின் நிறுவனம் பதிவும் செய்யப்பட்டுள்ளது. ''பிளாஸ்டிக் பைரோசிலிஸ்'' (Plastic Pyrolysis) என்ற முறையின் மூலம் பேராசிரியர் சதீஷ் குமார் பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றம் செய்கிறார். இந்த வழிமுறையின் மூலம் மூன்று படிநிலைகளில் பிளாஸ்டிக் எரிபொருளாக மாற்றப்படுகிறது.

மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் பேராசிரியர்... எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

இதுகுறித்து பேராசிரியர் சதீஷ் குமார் கூறுகையில், ''பிளாஸ்டிக்கை பெட்ரோல், டீசல் மற்றும் விமானத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருளாக மறுசுழற்சி செய்ய இந்த செயல்முறை உதவி செய்கிறது. 500 கிலோ கிராம் பிளாஸ்டிக்கில் இருந்து சுமார் 400 லிட்டர் எரிபொருளை உருவாக்க முடியும். இது மிகவும் எளிதாக செயல்முறைதான்.

மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் பேராசிரியர்... எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

இதற்கு தண்ணீர் தேவையில்லை. எனவே இந்த செயல்முறை கழிவு நீரையும் வெளியிடாது. இந்த செயல்முறை வெற்றிடத்தில்தான் (Vacuum) செய்யப்படுகிறது. எனவே இந்த செயல்முறை காற்று மாசுபாட்டையும் ஏற்படுத்தாது. சுற்றுச்சூழலுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த பிளாண்ட்டை தொடங்கியுள்ளோம்.

மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் பேராசிரியர்... எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

இதன் மூலமாக வணிக ரீதியில் நாங்கள் எந்த நன்மையையும் எதிர்பார்க்கவில்லை. சுத்தமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக எங்களால் இயன்ற பங்களிப்பை இதன் மூலமாக வழங்கி வருகிறோம். இதில், ஆர்வம் உள்ள எந்தவொரு தொழில் முனைவோரிடமும் எங்கள் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றார். நியூஸ்18 ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் பேராசிரியர்... எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

பேராசிரியர் சதீஷ் குமார் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 50 டன் பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றம் செய்துள்ளார். தற்போதைய நிலையில் பேராசிரியர் சதீஷ் குமாரின் நிறுவனம் ஒரு நாளைக்கு 200 கிலோ கிராம் பிளாஸ்டிக்கில் இருந்து சுமார் 200 லிட்டர் பெட்ரோலை உற்பத்தி செய்து வருகிறது.

மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் பேராசிரியர்... எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

அத்துடன் உள்ளூரை சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு பேராசிரியர் சதீஷ் குமாரின் நிறுவனம் அதனை விற்பனையும் செய்து வருகிறது. விலை என்ன தெரியுமா? ஒரு லிட்டரின் விலை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மட்டுமே. மிகவும் மலிவான விலையில் கிடைப்பதால் உள்ளூர் தொழில் நிறுவனங்கள் இதனை ஆர்வமுடன் பயன்படுத்தி வருகின்றன.

மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் பேராசிரியர்... எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

பிவிசி எனப்படும் பாலிவினைல் குளோரைடு (PVC - polyvinyl chloride) மற்றும் பிஇடி எனப்படும் பாலிஎத்திலீன் டெரெப்தாலேட் (PET - polyethylene terephthalate) ஆகியவற்றை தவிர எஞ்சிய அனைத்து வகையான பிளாஸ்டிக்குகளில் இருந்தும் எரிபொருள் தயாரிக்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிக மலிவான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் பேராசிரியர்... எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்

ஆனால் இந்த எரிபொருளை வாகனங்களில் பயன்படுத்த முடியுமா? என்பது இன்னும் சோதனை செய்து பார்க்கப்படவில்லை. பேராசிரியர் சதீஷ் குமார் அதனை விரைவில் செய்வார் என நம்பலாம். வாகனங்களுக்கு இவ்வளவு குறைவான விலையில் எரிபொருள் கிடைத்தால், வாகன ஓட்டிகளின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hyderabad Professor Made Petrol, Diesel From Plastic. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X