ரூ.2.5 கோடியில் மாமனார் வாங்கிக் கொடுத்த கார்! பழைய இரும்பு கடையில் எடுத்துப்பார்களானு கூட தெரியல!!
விலையுயர்ந்த கார்களில் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. சில மாதங்களுக்கு முன் 17 வயது இளைஞன் காஸ்ட்லீயான போர்ஷே (Porsche) காரில் இருவர் மீது மோதி அவர்களை உயிரிழக்க செய்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வரிசையில், ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்டேண்ட்-அப் காமெடியன் ஒருவர் தனது விலையுயர்ந்த போர்ஷே காரில் விபத்தில் சிக்கி உள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
போர்ஷே போன்றதான விலையுயர்ந்த கார்களில் விபத்தில் சிக்குவதால், உடலில் காயங்கள் ஏற்படுவதுடன், கோடி ரூபாய் மதிப்பிலான காரும் சேதமடைகிறது. ஆதலால், அவ்வாறான சம்பவங்கள் பலரது நெஞ்சில் நீங்காத வடுவாய் மாறிவிடுகிறது. ஆனால், விலையுயர்ந்த கார்களில் விபத்தை ஏற்படுத்துபவர்கள் பெரும்பாலும் அந்த சமயத்தில் மது போதையில் இருக்கின்றனர். அல்லது, அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்துகின்றனர்.

இதனால், விபத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கு மத்தியில் போலீசாரின் நடவடிகைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறுதான் இங்கு ஒரு ஸ்டேண்ட்-அப் காமெடியன் பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளார். இவரது பெயர், உட்சவ் தீக்ஷித் (Utsav Dixit) ஆகும். மேடை பேச்சுகளை நகைச்சுவை உடன் கலந்து பேசுவதால், உட்சவ் தீக்ஷித்துக்கு என தெலுங்கு மக்களிடையே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த இவரிடம் 2.5 கோடி மதிப்பிலான போர்ஷே டைகன் என்கிற எலக்ட்ரிக் கார் சிவப்பு நிறத்தில் உள்ளது. இந்த காரில் சிலமுறை உட்சவ் தீக்ஷித் காட்சி தந்துள்ளார். இந்த நிலையில், கடந்த நவம்பர் 1ஆம் தேதி, வெள்ளிக்கிழமை நடந்த சம்பவம் உட்சவ்வின் வாழ்க்கையில் பெரும் கரும்புள்ளியாக அமைந்துள்ளது. சம்பவ தினத்தின்போது, உட்சவ் தீக்ஷித் தனது போர்ஷே டைகன் காரில் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் என்கிற பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென கண்ட்ரோலை இழந்த கார் சாலைக்கு அருகே இருந்த நடைபாதையின் மீது ஏறியதோடு, தடுப்புகளை உடைத்துக் கொண்டு அருகாமையில் இருந்த கேபிஆர் தேசிய பூங்காவினுள் அதிவேகத்தில் நுழைந்து, மோதலுக்கு உள்ளாகி நின்றுள்ளது. இது அந்த பகுதியில் சற்று நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த விபத்துக்காக உட்சவ் தீக்ஷித் மீது அதிவேக பயணம், பொது சொத்தை சேதப்படுத்தியது என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து உட்சவ் தீக்ஷித் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது ஓட்டுனர் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசாரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விரைவில் உட்சவ் தீக்ஷித் நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு நிறுத்தப்பட உள்ளார். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஸ்டேண்ட்-அப் காமெடியன் உட்சவ் தீக்ஷித் அவரது நண்பர்களை சந்தித்துவிட்டு திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்து நவம்பர் 1ஆம் தேதி அதிகாலை 5:30 மணியளவில் நடந்துள்ளது. அந்த சமயத்தில் உட்சவ் மது அருந்தி இருந்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில், விபத்து குறித்த தகவலை கேட்டறிந்த பின் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்க்கையில், காருக்கு உள்ளேயும், வெளியேயும் யாரும் இல்லை. விபத்தில் உட்சவ்விற்கு எந்த காயமும் ஏற்பட்டதுபோல் தெரியவில்லை என்பதால், காரை வேண்டுமென்றே தானாக இயங்க வைத்து உட்சவ் மோத வைத்திருக்கலாம் என்கிற கருத்தும் உள்ளது.
மேலும், போலீசார் விபத்தை வந்து பார்வையிடும்போது காரில் நம்பர் பிளேட்கள் இல்லாததால், காரின் உரிமையாளரை உடனடியாக கண்டறிய முடியவில்லை. இருப்பினும், போர்ஷே போன்ற விலையுயர்ந்த காரின் உரிமையாளரை கண்டறிவது ஒன்றும் கடினமான விஷயம் இல்லையே. அதன்படி, சம்பவத்தின்போது உட்சவ் ஓட்டிய போர்ஷே கார் அவரது மாமனாரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதை போலீசார் கண்டறிந்தனர். இது அவரது மனைவியின் பரிசாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்டேண்ட்-அப் காமெடியன் உட்சவ் தீக்ஷித்தின் இந்த விபத்து இன்னும் மர்மமாகவே உள்ளது. அதாவது, எதிர்பாராத விதமாக அவர் விபத்தை ஏற்படுத்தினாரா அல்லது வேண்டுமென்றே விபத்தை உண்டாக்கினாரா என்பது உறுதியாக தெரியவில்லை. இதற்கெல்லாம் அவர் வாய் திறந்தால் மட்டுமே உண்மை தெரியவரும். ஆக மொத்தத்தில், இந்த விபத்தில் ரூ.2.5 கோடி மதிப்பிலான போர்ஷே கார் ஒன்று சேதாரமாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








