தாறுமாறு நம்பர் பிளேட்களுக்கு அபராதம் இல்லை! போலீஸின் புது ட்ரீட்மெண்ட் இதுதான்... என்னனு தெரியுமா?

தாறுமாறான நம்பர் பிளேட்களை பொருத்தியுள்ள வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக போலீசார் புதிய ட்ரீட்மெண்ட்டை கொடுத்து வருகின்றனர்.

தாறுமாறு நம்பர் பிளேட்களுக்கு அபராதம் இல்லை! போலீஸின் புது ட்ரீட்மெண்ட் இதுதான்... என்னனு தெரியுமா?

இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பான நம்பர் பிளேட்களுடன் ஏராளமான வாகனங்கள் உலா வந்து கொண்டுள்ளன. நம்பர் பிளேட்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் பொருட்படுத்துவது கிடையாது. அதற்கு மாறாக தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நம்பர் பிளேட்களை டிசைன் செய்து கொள்கின்றனர்.

தாறுமாறு நம்பர் பிளேட்களுக்கு அபராதம் இல்லை! போலீஸின் புது ட்ரீட்மெண்ட் இதுதான்... என்னனு தெரியுமா?

அதிலும் குறிப்பாக பலர் ஒற்றை இலக்கத்தில் நம்பர் பிளேட்களில் பதிவு எண்ணை குறிப்பிடுகின்றனர். அதாவது 0009 என்றால் வெறும் 9 என்று மட்டும் குறிப்பிடுகின்றனர். நம்பர் பிளேட்களில் இதுபோல் விதிமுறை மீறல்களை செய்யும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கும் அதிகாரத்தை மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள விதிகள் போலீசாருக்கு வழங்கியுள்ளன.

தாறுமாறு நம்பர் பிளேட்களுக்கு அபராதம் இல்லை! போலீஸின் புது ட்ரீட்மெண்ட் இதுதான்... என்னனு தெரியுமா?

ஆனால் ஐதராபாத் போலீசார் அபராதம் விதிப்பதற்கு பதிலாக தற்போது புதிய நடைமுறையை பின்பற்றுகின்றனர். இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். இதன்படி சட்டத்திற்கு புறம்பான நம்பர் பிளேட் உடன் வந்த ஒரு வாகனத்தை பஞ்சகட்டா போக்குவரத்து போலீசார் நேற்று (பிப்ரவரி 11) பிடித்தனர்.

தாறுமாறு நம்பர் பிளேட்களுக்கு அபராதம் இல்லை! போலீஸின் புது ட்ரீட்மெண்ட் இதுதான்... என்னனு தெரியுமா?

இது டொயோட்டா பார்ச்சூனர் கார் ஆகும். இதில், பதிவு எண் ஒற்றை இலக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது 9 என்ற எண் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. நம்பர் பிளேட்டில் இருந்த மற்ற அனைத்து எழுத்து, எண்களை காட்டிலும் அது பெரிதாக இருந்தது. பொதுவாக இவ்வாறான விதிமுறை மீறல்களுக்கு போலீசார் சலான் வழங்குவார்கள்.

தாறுமாறு நம்பர் பிளேட்களுக்கு அபராதம் இல்லை! போலீஸின் புது ட்ரீட்மெண்ட் இதுதான்... என்னனு தெரியுமா?

ஆனால் அதற்கு பதிலாக இந்த டொயோட்டா பார்ச்சூனர் காரில், விதிமுறைகளுக்கு இணக்கமான புதிய நம்பர் பிளேட்டை போலீசார் பொருத்தினர். அத்துடன் விதிமுறைகளுக்கு இணக்கமான நம்பர் பிளேட்டை பொருத்துவதற்கு முன்பும், பின்பும் போட்டோ எடுத்து சமூக வலை தளங்களில் வைரல் ஆக்கினர். இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என போலீசார் தெரிவித்தனர்.

தாறுமாறு நம்பர் பிளேட்களுக்கு அபராதம் இல்லை! போலீஸின் புது ட்ரீட்மெண்ட் இதுதான்... என்னனு தெரியுமா?

ஆனால் புதிய நம்பர் பிளேட்டிற்கான தொகையை அந்த காரின் உரிமையாளர் வழங்கினாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் இதற்கான செலவை போக்குவரத்து போலீசார்தான் ஏற்று கொண்டது போல் தெரிகிறது. ஸ்பாட்டிலேயே அவர்கள் உடனடியாக நம்பர் பிளேட்டை மாற்றி தக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தாறுமாறு நம்பர் பிளேட்களுக்கு அபராதம் இல்லை! போலீஸின் புது ட்ரீட்மெண்ட் இதுதான்... என்னனு தெரியுமா?

எனினும் அனைத்து நேரங்களிலும் போலீசார் இவ்வாறு மென்மையாக நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் மன நிலையில் போலீசார் இருப்பது போல் தெரிகிறது. எனவேதான் டொயோட்டா பார்ச்சூனர் காரின் உரிமையாளரை அவர்கள் செல்ல அனுமதித்து விட்டனர்.

தாறுமாறு நம்பர் பிளேட்களுக்கு அபராதம் இல்லை! போலீஸின் புது ட்ரீட்மெண்ட் இதுதான்... என்னனு தெரியுமா?

ஆனால் நம்பர் பிளேட் விதிமுறைகளை போலீசார் கடுமையாக அமல்படுத்த தொடங்கினால், ஆவணங்களை அவர்களால் பறிமுதல் செய்ய முடியும். மேலும் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு போலீசாரால் அபராதமும் விதிக்க முடியும். எனவே உங்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்டில், அரசால் வகுக்கப்பட்ட விதிமுறைகளை எப்போதும் பின்பற்றுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hyderabad Traffic Cops Bust Toyota Fortuner SUV Owner For Faulty Numberplate. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X