சோமாடோ டெலிவிரி மேனுக்கு அடித்த ‘பம்பர்’ பரிசு!! இப்படி நடக்கும்னு அவர் சத்தியமா நெனைச்சு பாத்திருக்க மாட்டார்

9கிமீ தொலைவை வெறும் 20 நிமிடங்களில் சைக்கிளில் பயணம் செய்துவந்த சோமாடோ டெலிவிரி இளைஞருக்கு அவரது சேவையை பாராட்டி பைக் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சோமாடோ டெலிவிரி மேனுக்கு அடித்த ‘பம்பர்’ பரிசு!! இப்படி நடக்கும்னு அவர் சத்தியமா நெனைச்சு பாத்திருக்க மாட்டார்

ஹைதராபாத்தை சேர்ந்தவர் மொஹமத் அகீல். பிரபல பன்னாட்டு ஆன்லைன் உணவக ஒருங்கிணைப்பு நிறுவனமான சோமாடோவில் டெலிவிரி மேனாக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று நள்ளிரவில் இவருக்கு உணவகத்தில் இருந்து 9 கிமீ தூரத்தில் உள்ள பகுதிக்கு உணவு டெலிவிரி செய்யும் பணி கொடுக்கப்பட்டுள்ளது. அகீல் எப்போதும் தனக்கு தரப்படும் டெலிவிரி பணிகளை சைக்கிளில் சென்று தான் முடிப்பார் என தெரிகிறது.

சோமாடோ டெலிவிரி மேனுக்கு அடித்த ‘பம்பர்’ பரிசு!! இப்படி நடக்கும்னு அவர் சத்தியமா நெனைச்சு பாத்திருக்க மாட்டார்

நள்ளிரவில் கொடுக்கப்பட்ட இந்த பணியினையும் செய்து முடிக்க சைக்கிளில் சென்றுள்ளார். சோமாடோவில் டெலிவிரி மேனாக பணிபுரியும் பலர் சைக்கிளை தனது பணிக்காக பயன்படுத்துகின்றனர்.

ஆனால் அகீலை மட்டும் குறிப்பாக இந்த செய்தியில் பார்ப்பதற்கு காரணம், நள்ளிரவில் 9 கிமீ தூரத்தை சைக்கிளில் அவர் வெறும் 20 நிமிடங்களில் கடந்து உணவை ஆர்டர் செய்த ஹைதராபாத்தின் கிங் கோடி பகுதியை சேர்ந்தவர் ராபின் முகேஷ் என்பவரிடம் டெலிவிரி செய்துள்ளார்.

இவ்வளவு விரைவாக ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு வீட்டிற்கு வரும் என எதிர்பார்க்காத ராபின் முகேஷ், அகீலின் வேகமான சேவையை பார்த்து பிரம்மிப்பாகியுள்ளார். அகீலை சைக்கிளுடன் போட்டோ எடுத்துக்கொண்ட ராபின் முகேஷ் அதனை தனது சமூக வலைத்தள பக்கங்களில் அவரது வேகமான சேவையை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

சோமாடோ டெலிவிரி மேனுக்கு அடித்த ‘பம்பர்’ பரிசு!! இப்படி நடக்கும்னு அவர் சத்தியமா நெனைச்சு பாத்திருக்க மாட்டார்

இதுதொடர்பான ராபின் முகேஷின் பதிவில், எனது ஆர்டரை மின்னல் வேகத்தில் மொஹமத் அகீல் வழங்கினார். எனது உணவு ஆர்டரை நிலோஃபர் லக்திகாபுல் (ஹைதராபாத்தில் உள்ள ஓர் உணவகம்) உறுதிசெய்து, கிங் கோட்டியில் உள்ள என்னிடம் வழங்க ஒப்புக்கொண்ட போது அகீல் மெஹதிபுட்னத்தில் இருந்தார்.

மொஹமத் அகீல், பொறியியல் துறையில் இளங்கலை படித்து வருகிறார். இதெல்லாம் நான் கேட்க, அவர் என்னிடம் கூறிய விபரங்கள். நீங்கள் அவரை பார்க்க நேர்ந்தால் தயவுசெய்து உதவி செய்யுங்கள். பின்குறிப்பு: நான் தேநீர் ஆர்டர் செய்தேன். அது மிகவும் சூடாக இருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ராபின் முகேஷின் இந்த பதிவு இணையத்தில் வைரலானது. இதன் மூலம் அகீலிற்கு கொடுத்து உதவ சிலர் தங்களால் முடிந்த பணத்தை ராபின் முகேஷிடம் கொடுத்துள்ளனர். அந்த பதிவு பதிவிடப்பட்ட 10 மணிநேரத்திற்குள் ரூ.60,000 சேர்ந்துவிட்டதாக முகேஷ் தெரிவித்துள்ளார்.

சோமாடோ டெலிவிரி மேனுக்கு அடித்த ‘பம்பர்’ பரிசு!! இப்படி நடக்கும்னு அவர் சத்தியமா நெனைச்சு பாத்திருக்க மாட்டார்

அதன்பின் சிலர் பணம் வழங்க, ஒட்டுமொத்தமாக ரூ.73,370 சேர்ந்துள்ளது. இந்த பணத்தில் அகீலிற்கு டிவிஎஸ் எக்ஸ்.எல் பைக் ஒன்றை புக் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.65,000 எனவும், மீதி பணத்தில் அகீலிற்கு ஹெல்மெட், ரெயின்கோட் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்தோம் எனவும் ராபின் முகேஷ் செய்திதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இவைப்போக அகீலிற்காக சேகரிக்கப்பட்ட பணத்தில் சிறிய தொகை இருந்துள்ளது. அதனை கல்லூரி கட்டணங்களுக்காக அகீலிடமே வழங்கியுள்ளனர். கஷ்டப்படும் நேரத்திலும் கல்லூரிக்கு சென்றப்படி பகுதிநேர வேலை பார்க்கும் அகீல் சிறந்தவர் என்றால், அவரை பார்த்த சில நிமிடங்களிலேயே அவரது நிலைமையை உணர்த்து அவருக்காக உதவி செய்துள்ள ராபின் முகேஷும் சிறந்த மனிதரே.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hyderabadis run campaign to gift bike to food delivery boy.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X