டீசலும் போடவேணாம், சார்ஜூம் போட வேணாம், கடற்படைக்கு ஐஓசி கொடுத்த ஸ்பெஷல் பஸ் பற்றி தெரியுமா?
இந்தியன் ஆயில் நிறுவனம் இந்திய கடற்படைக்காக தற்போது ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பஸ்ஸை வழங்கியுள்ளது. இந்த பஸ்ஸை சோதனை ஓட்டம் செய்ய தற்போது இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் கனரக வாகனங்கள் மீதான கவனத்தை கொண்டு வருவதற்காக இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பெட்ரோல்,டீசலுக்கு எதிராக மாற்று எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு இந்தியாவில் மவுசு அதிகரித்து வருகிறது. அரசும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு இல்லாத வகையில் செயல்படும் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கவும் அதன் பயன்பாட்டை அதிகரிக்கவும் பல்வேறு விதமான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. தற்போது பெட்ரோல்,டீசலுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மிக அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.

இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாடும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஹைட்ரஜன் வாகனங்களை பொருத்தவரை இரண்டு விதமான செயல்பாட்டில் இயங்கும் வகையில் இது உருவாக்கப்படுகிறது. பெட்ரோல் கார் போல கம்பஷன் இன்ஜின் பொருத்தப்பட்ட காரில் ஹைட்ரஜன் என்ற வாயுவை உள்ளே செலுத்தி அதை எரிய வைப்பதன் மூலம் வாகனத்தை இயக்கும் தொழில்நுட்பம் ஒரு வகை.
மற்றொரு வகை தொழில்நுட்பம் என்றால் அது ஹைட்ரஜன் மூலம் மின் சக்தியை உருவாக்கி அந்த மின்சக்தி மூலம் எலெக்ட்ரிக் மோட்டாரை இயக்க வைத்து எலெக்ட்ரிக் வாகனம் எப்படி இயங்குமோ அது போலவே, இந்த வாகனத்தை இயக்க வைப்பது மற்றொரு முறை. இதில் நேரடியாக ஹைட்ரஜன் வாயுவை கம்பேஷன் இன்ஜின் முறையிலும் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் என்ற முறையை மின்சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பொருத்தப்பட்ட தொழில்நுட்பத்திலும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் தற்போது டில்லி மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பஸ்களை இயக்கி வருகிறது. மொத்தம் 15 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன அதாவது ஃப்யூயல் செல் மூலம் எலெக்ட்ரிக் மோட்டார் மின் சக்தி செலுத்தப்பட்டு அதன் மூலம் எலெக்ட்ரிக் பஸ்கள் போல இந்த பஸ்கள் எல்லாம் இயங்கி வருகின்றன.
இதில் ஒவ்வொரு பஸ்களும் சுமார் 20 ஆயிரம் கிலோமீட்டர் வரை இயங்கும் அளவிற்கு இது ப்யூயல் செல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் எல்லாம் மொத்தம் சேர்ந்து 3 லட்சம் கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்ட தற்போது செயல்பாட்டில் இருக்கின்றன. இந்நிலையில் இப்படியான ஒரு பஸ்களை இந்திய கடற்படையும் பயன்படுத்தினால் இது பயனுள்ளதாக இருக்கும். அதேநேரம் மாசு குறையும் என்ற நோக்கத்தில் இதற்கான முயற்சி கையில் எடுக்கப்பட்டது.
எதிர்காலத்தில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அரசு பயன்பாட்டுக்காக இவ்வாறான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டால் அது மெல்ல மெல்ல வளர்ச்சியை பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அரசு மிகக் குறைவான தேவை இருக்கும் இடங்களில் இப்படியான வாகனங்களை பயன்படுத்தி சோதனை செய்து வருகிறது.
இப்படியாக தான் கடற்படையில் மிக குறைவான தேவை மற்றும் குறிப்பிட்ட பகுதியில் மட்டும், பாதுகாப்பு சூழலுடன் கூடிய இடத்தில் மட்டும் இயங்குவதற்கான பஸ்களை ஹைட்ரஜன் பஸ்களாக இயக்குகிறது. இந்த பஸ்கள் இயக்கப்படும்போது இதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதை மேம்படுத்துவதற்கான பணிகளை இந்தியன் ஆயில் நிறுவனம் செய்வதற்காக இந்த முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது.
இந்தியாவில் எதிர்காலத்தில் ஹைட்ரஜன் பஸ்களில் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக நகர் பகுதிகளில் தரமான சாலை மற்றும் பாதுகாப்பான சூழலில் இருக்கும் இடங்களில் இந்த பஸ்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு இந்த தொழில்நுட்பம் மேம்பட மேம்பட அனைத்து பஸ்களும் ஹைட்ரஜன் பஸ்களாக மாறக்கூட வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது ஹைட்ரஜன் பஸ்கள் அதிக பயன்பாட்டிற்கு வருவதற்கு முக்கியமான காரணம் அதன் எரிபொருள் செலவுதான் தற்போது ஹைட்ரஜன் விலை அதிகமாக இருக்கிறது. அதேபோல ஹைட்ரஜன் புயல் செல் விலையும் அதிகமாக இருக்கிறது. இந்த விலையை குறைப்பதற்கான தொழிற்நுட்பம் வந்துவிட்டால் எலெக்ட்ரிக் வாகனங்கள் போல ஹைட்ரஜன் வாகனங்களும் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வரும்.


Click it and Unblock the Notifications








