இது புகையில்லாத வண்டி... ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் புதிய ரயில்!

Written By:

ரயிலுக்கு புகைவண்டி என்ற பெயரை மாற்றி எழுத வருகிறது ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்த புதிய ரயில். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அல்ஸ்டோம் நிறுவனத்தின் தயாரிப்புதான் இந்த புதிய புகையில்லாத ரயில் வண்டி.

டீசலில் இயங்கும் ரயில்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கை குறைக்கும் விதத்தில், இந்த புதிய ரயில் சரியான மாற்றாக அமையும் என அல்ஸ்டோம் தெரிவித்துள்ளது. விரிவானத் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் புதிய ரயில்!

அல்ஸ்டோம் கொரடியா லின்ட் 54 என்ற டீசலில் இயங்கும் ரயிலின் அடிப்படையில்தான் இந்த புதிய ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அல்ஸ்டோம் ஐலின்ட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் புதிய ரயில்!

வரும் 20ந் தேதி முதல் 23ந் தேதி வரை பிரான்ஸ் நாட்டில் நடைபெற இருக்கும் இன்னோடிரான்ஸ் என்ற புதுமையான போக்குவரத்து சாதன கண்காட்சியில் இந்த ரயில் அறிமுகம் செய்ய்பட இருக்கிறது.

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் புதிய ரயில்!

இந்த ரயிலில் அதிகபட்சமாக 300 பேர் வரை பயணிக்க முடியும். 150 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதியுடன் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. நகர்ப்புறம் மற்றும் நடுத்தர தூர பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும்.

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் புதிய ரயில்!

மின்பாதை இல்லாத ரயில் பாதைகளில் புகையில்லாத ரயில் வண்டியாக இதனை இயக்க முடியும். எனவே, மாசு உமிழ்வு பிரச்னை இல்லாத ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படை முயற்சியாக இந்த ரயில் பார்க்கப்படுகிறது.

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் புதிய ரயில்!

இந்த ரயிலின் மேற்கூரையில் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பப்பட்ட கலன்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து ஹைட்ரஜனை ஓர் சவ்வூடு ஊடகம் வழியாக செலுத்தி ஆக்சிஜனுடன் கலந்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் புதிய ரயில்!

லித்தியாம் அயான் பேட்டரிகளில் இந்த மின் சக்தி சேமிக்கப்பட்டு, சக்திவாய்ந்த மின்மோட்டார்கள் மூலமாக இந்த ரயில் இயக்கப்படும். இதனால், டீசல் ரயில்களைவிட மிக குறைவான இயக்குதல் மற்றும் பராமரிப்பு செலவீனம் கொண்டாதகவும் இருக்கும்.

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் புதிய ரயில்!

ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் கலக்கப்பட்டு மின் ஆக்கம் நடைபெறும்போது நீராவி மற்றும் நீர் மட்டுமே கழிவுப் பொருட்களாக வெளியேறும். மாசு உமிழ்வு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் புதிய ரயில்!

ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 600 கிமீ முதல் 800 கிமீ தூரம் வரை பயணிக்குமாம். எனவே, சிறப்பான போக்குவரத்து சாதனமாக இருக்கும்.

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் புதிய ரயில்!

வரும் 2018ம் ஆண்டிலிருந்து பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்ய அல்ஸ்டோம் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் புதிய ரயில்!

உலகின் அதிவேக டாப்- 10 ரயில்கள் விபரம்!

டால்கோ ரயிலை இழுத்துச் சென்ற WDP-4 டீசல் ரயில் எஞ்சினின் சிறப்புகள்!

மாக்லேவ் ரயில்... வேகத்தில் புதிய சாதனை!

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Hydrogen fuel cell-powered Alstom train Revealed. Read in Tamil.
Story first published: Wednesday, October 5, 2016, 16:18 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark