தண்ணீரில் இயங்கும் ரயில், சத்தமே வராது, செலவும் கம்மி, எந்த ரூட்ல வரப்போகுது தெரியுமா?
இந்திய ரயில்வே நிர்வாகம் தற்போது தண்ணீரில் இயங்கும் ரயில் இன்ஜினை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் உள்ள ரயில்கள் எல்லாம் எலvக்ட்ரிக் இன்ஜின் கொண்ட ரயில்களாக பெரும்பாலும் இயங்கும் நிலையில் தண்ணீரில் இயங்கும் ரயிலை வெற்றிகரமாக வடிவமைத்த இது மிகப் பெரிய சாதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்
உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கில் இந்திய ரயில்வேயும் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள நீண்ட தூர போக்குவரத்து பயணத்திற்கு இந்திய ரயில்கள் தான் முதுகெலும்பாக இருக்கிறது. குறைந்த விலையில் சொகுசுடன் நீண்ட தூரம் பயணிக்க ஏற்றதாக இது இருப்பதால் மக்கள் பலர் அதிகம் ரயில்களில் பயணிக்க விரும்புகிறார்கள்.

இந்தியாவை பொருத்தவரை தற்போது டீசல் மற்றும் எலெக்ட்ரிக் இன்ஜின்கள் தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தண்ணீரில் இயங்கும் ஹைட்ரஜன் ரயிலை உருவாக்க இந்திய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகள் எல்லாம் நடந்து வரும் நிலையில் இந்த ரயில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரயில்வே நிர்வாகத்தின் அடுத்த மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என பேசப்படுகிறது.
இந்தியாவில் ரயில் இன்ஜின்கள் பல்வேறு பரிணாமங்களை சந்தித்துள்ளன. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது ஸ்டீம் இன்ஜின் பயன்பாட்டில் இருந்தது. அதன் பிறகு நிலக்கரி மூலமாக இயங்கும் இன்ஜின் பயன்பாட்டிற்கு வந்தது. பின்னர் இந்த இன்ஜின்கள் எல்லாம் மாற்றப்பட்டு டீசல் இன்ஜின்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தற்போது இந்தியாவில் பெரும்பாலும் எலெக்ட்ரிக் இன்ஜின்கள் தான் பயன்பாட்டில் இருக்கிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே டீசல் இன்ஜின்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் இந்தியா தற்போது அடுத்த தொழில்நுட்பத்திற்கு நகர தயாராகிவிட்டது. இந்நிலையில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயிலை உருவாக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மேம்படுத்தப்பட்ட ஹைட்ரஜன் ஃப்யூயல் டெக்னாலஜியை உருவாக்கி அதை ரயில் இன்ஜினியரிங் கொடுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
இப்படியாக ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் தயாரானால் அந்த ரயிலுக்கு எரிபொருளாக தண்ணீர் தான் தேவைப்படும். வெறும் தண்ணீர் இல்லையே இந்த ரயில் இயங்கும் வகையில் உருவாக்கப்படும். தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தும் போது தண்ணீரில் உள்ள ஹைட்ரஜையும் ஆக்ஸிஜனையும் தனித்தனியாக பிரித்து இதில் ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்படுத்தி இன்ஜினை இயக்க திட்டமிடுகிறார்கள். மீதமுள்ள ஆக்ஸிஜனை தண்ணீராகவோ அல்லது ஆவியாகவோ வெளியேற்றிவிட வடிவமைக்கப்பட உள்ளது.
இந்த ஹைட்ரஜன் ரயில் இன்ஜினை தயாரிக்கும் திட்டம் வரும் டிசம்பர் மாதம் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மணிக்கு 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மூலம் இந்த ரயிலை இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக தனி தண்ணீர் சேமிப்பு மையங்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 35 ஹைட்ரஜன் ரயில் இன்ஜின்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகள் எல்லாம் ஏற்கனவே தயாராகிவிட்டன. ஹைட்ரஜன் பிளான்ட்களுக்கான ஒப்புதலும் வழங்கப்பட்டு விட்டது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயிலை தயாரிக்க 80 கோடி ரூபாய் செலவாகும் என திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முறையில் தயாரிக்கப்பட்டால் டீசல் மூலம் இயங்கும் ரயிலை விட 60 சதவீதம் குறைவான சத்தத்தையே வெளிப்படுத்தும். அதே நேரம் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். ஒரு முறை ஹைட்ரஜன் நிரப்பினால் ஆயிரம் கிலோமீட்டர் வரை இந்த ரயில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் இன்ஜினை உருவாக்க ரயில்வே நிர்வாக முடிவு செய்துள்ளது. நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயம் தான் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஹரியானா மாநிலத்தில் 90 கிலோ மீட்டருக்கு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் இன்ஜின் மலைப்பகுதிகளில் இயங்குவதற்கு முன்னுரிமை வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


Click it and Unblock the Notifications








