தனியார் ஜெட் விமானத்தில் இருக்கக்கூடிய அம்சங்களுடன் இனி ஹைப்பர்லூப் ஹோட்டலில் பயணிக்கலாம்..!

Written By:

டெஸ்லா நிறுவனத்தலைவர் எலான் மஸ்க் எண்ணத்தில் உருவானது ஹைப்பர்லூப் போக்குவரத்து சாதனம். விமானத்தின் வேகத்தை மிஞ்சும் வேகம் கொண்ட ஹைப்பர்லூப் போக்குவரத்தின் அடுத்த பரிமானமாக ஹைப்பர்லூப் ஹோட்டல்கள் உருவாக உள்ளது.

விரைவில் வரப்போகுது ஹைப்பர்லூப் ஹோட்டல்கள்..!!

மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்லூப் சாதனம் உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது கட்டமைப்பில் உள்ள இந்த போக்குவரத்து 2020ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது.

விரைவில் வரப்போகுது ஹைப்பர்லூப் ஹோட்டல்கள்..!!

இந்த அதிவேக ஹைப்பர்லூப் போக்குவரத்தை மையமாக வைத்து ஹைப்பர்லூப் ஹோட்டல் என்ற கான்செப்டை உருவாக்கியுள்ளார் அமெரிக்காவின் நெவடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பட்டதாரி மாணவர் ஒருவர்.

விரைவில் வரப்போகுது ஹைப்பர்லூப் ஹோட்டல்கள்..!!

பிராண்டன் சைப்ரெச்ட் என்ற அந்த மாணவர் ஆடம்பர ஹோட்டல்களின் சொகுசையும், அதிவேகத்தை இணைத்து புதுமையை புகுத்தியுள்ளார்.

விரைவில் வரப்போகுது ஹைப்பர்லூப் ஹோட்டல்கள்..!!

இதன் மூலம் பயணச் செலவும், தங்கும் செலவும் தனித்தனியாக இல்லாமல் ஒன்றினைக்கப்பட இருக்கிறது.

விரைவில் வரப்போகுது ஹைப்பர்லூப் ஹோட்டல்கள்..!!

ஒவ்வொரு ஆண்டும் ஹோட்டல் துறையில் புதுமையான அம்சங்களை உருவாக்குபவர்களுக்கான போட்டி நடத்தப்படுகிறது. இதில் சிறந்த கண்டுபிடிப்புக்கான உலகலாவிய ‘ரேடிகல் இன்னோவேஷன் அவார்ட்ஸ்' என்ற பதக்கமும் தரப்படுகிறது.

விரைவில் வரப்போகுது ஹைப்பர்லூப் ஹோட்டல்கள்..!!

இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் மாணவர் பிராண்டன் சைப்ரெச்ட் உருவாக்கிய ஹைப்பர்லூப் ஹோட்டல் கான்செப்ட் முதல் பரிசை பெற்றிருக்கிறது.

விரைவில் வரப்போகுது ஹைப்பர்லூப் ஹோட்டல்கள்..!!

டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் கடந்த 2013ல் முதல்முறையாக ஹைப்பர்லூப் கான்செப்டை கண்டறிந்தார்..

ஹைப்பர்லூப் என்றால் என்ன? எப்படி செயல்படுகிறது?

ஹைப்பர்லூப் என்றால் என்ன? எப்படி செயல்படுகிறது?

தூண்கள் மீது அமைக்கப்படும் வெற்றிடக் குழாய்கள் மூலம் போக்குவரத்து நடைபெறும் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில், கேப்சூல்கள் போன்ற சாதனங்களில் மக்கள் பயணிக்கலாம். சக்கரங்களில்லாமல், இதனுடைய நகர்வு காற்றின் எதிர்ப்பு விசையை பயன்படுத்தி உராய்வற்ற பயணச்சூழலை உருவாக்கி தருகிறது.

விரைவில் வரப்போகுது ஹைப்பர்லூப் ஹோட்டல்கள்..!!

மாணவர் பிராண்டன் சைப்ரெச்ட் தயாரித்துள்ள கான்செப்ட் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள சியாட்டில், போர்ட்லேண்ட், சான் ஃபிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்செல்ஸ், சிகாகோ, வாஷிங்டன் டிசி உள்ளிட்ட 13 நகரங்களில் ஹைப்பர்லூப் ஹோட்டல்கள் அமைக்கப்படும்.

விரைவில் வரப்போகுது ஹைப்பர்லூப் ஹோட்டல்கள்..!!

இந்த 13 ஹைப்பர்லூப் ஹோட்டல்களும் ஹைப்பர்லூப் போக்குவரத்தில் இணைக்கப்பட்டிருக்கும். படுக்கை அறை, வரவேற்பறை, ஃபிளாட் ஸ்கிரீன் டிவி, குளியலரை, அலுவலகம் என ஆடம்பர வசதிகள் நிறைந்த இந்த ஹோட்டல் அறையில் மிக சொகுசாகவும், அதிவேகத்திலும் பயணம் செய்வது மிகவும் புதுமையான ஒரு அம்சமாகவே பார்க்கப்படுகிறது.

விரைவில் வரப்போகுது ஹைப்பர்லூப் ஹோட்டல்கள்..!!

13 இடங்களில் அமையவிருக்கும் இந்த இந்த ஹைப்பர்லூப் ஹோட்டல்களுக்கு இடையில் ஒரே நாளில் பல இடங்களுக்கு பயணிக்கலாம்.

விரைவில் வரப்போகுது ஹைப்பர்லூப் ஹோட்டல்கள்..!!

லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, வாஷிங்டன் டிசி என இந்த ஒட்டுமொத்த 13 இடங்களுக்கும் பயணம் செய்ய 1,200 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக நிர்னயிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் வரப்போகுது ஹைப்பர்லூப் ஹோட்டல்கள்..!!

ஒரு மாடுலர் ஹைப்பர்லூப் ஹோட்டலை அமைக்க 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ( இந்திய மதிப்பில் சுமார் 65 கோடி ரூபாய் என்பது கவனிக்கத்தக்கது)

விரைவில் வரப்போகுது ஹைப்பர்லூப் ஹோட்டல்கள்..!!

இந்த ஒட்டுமொத்த ஹைப்பர்லூப் ஹோட்டல்களின் செயல்பாட்டையும் ஒரு மொபைல் அப்ளிகேஷன் வாயிலாக அனுக முடியும் என மாணவர் பிராண்டன் மேலும் தெரிவித்தார்.

விரைவில் வரப்போகுது ஹைப்பர்லூப் ஹோட்டல்கள்..!!

இந்த ஹைப்பர்லூப் ஹோட்டல்கள் செயல்வடிவம் பெருகையில் பிரீமியம் ஜெட் விமானத்தில் இருக்கக்கூடிய வசதிகளுடன் அதனை விஞ்சிய வேகத்தில் பல இடங்களுக்கும் பயணம் செய்வதை சாமானியர்களுக்கும் சாத்தியமாக்கும்.

English summary
Read in Tamil about Hyperloop hote concept. future of hotel technology
Story first published: Monday, June 19, 2017, 13:15 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark