ஆந்திராவை வேற லெவலுக்கு கொண்டு போகும் ஜெகன் அண்ணா! இப்படி ஒரு சிஎம் கிடைக்க குடுத்து வெச்சுருக்கணும்

ஆந்திர மாணவர்களின் மனதில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.

ஆந்திராவை வேற லெவலுக்கு கொண்டு போகும் ஜெகன் அண்ணா! இப்படி ஒரு சிஎம் கிடைக்க குடுத்து வெச்சுருக்கணும்

இந்தியாவில் தற்போது அனைவராலும் விரும்ப கூடிய ஒரு முதல்வராக ஜெகன் மோகன் உருவெடுத்துள்ளார். தமிழகத்தில் கூட இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருப்பதை சமூக வலை தளங்களில் பார்க்க முடிகிறது. ஆந்திர மாநிலத்தின் முதல்வர் அரியணையில் ஏறிய உடனேயே ஜெகன் மோகன் பல்வேறு அதிரடியான திட்டங்களை கொண்டு வந்தார்.

ஆந்திராவை வேற லெவலுக்கு கொண்டு போகும் ஜெகன் அண்ணா! இப்படி ஒரு சிஎம் கிடைக்க குடுத்து வெச்சுருக்கணும்

அவற்றுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக மாணவர்களுடைய திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிக்காக ஆந்திராவில் தனியாக ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என வெளியான அறிவிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இது மாணவர்களுக்கு உதவக்கூடிய திட்டம் என்பதால், பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆந்திராவை வேற லெவலுக்கு கொண்டு போகும் ஜெகன் அண்ணா! இப்படி ஒரு சிஎம் கிடைக்க குடுத்து வெச்சுருக்கணும்

மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிக்காக ஆந்திரா முழுவதும் புது கல்லூரிகள் தொடங்கப்பட்டு, புதிதாக அமைக்கப்படவுள்ள பல்கலைகழகத்துடன் அவை இணைக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் பணிகளை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் தற்போது தீவிரப்படுத்தியுள்ளார்.

ஆந்திராவை வேற லெவலுக்கு கொண்டு போகும் ஜெகன் அண்ணா! இப்படி ஒரு சிஎம் கிடைக்க குடுத்து வெச்சுருக்கணும்

மாணவர்களுக்கு வேலை சார்ந்த திறன்களை வழங்குவதற்காக ஆந்திராவில் மொத்தம் 30 திறன் மேம்பாட்டு கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளன. 1,210 கோடி ரூபாய் மதிப்பில் இந்த கல்லூரிகள் உருவாக்கப்படுகின்றன. இந்த 30 கல்லூரிகளுடனும் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட்டணி அமைக்கவுள்ளதாக ஆந்திர பிரதேச அரசு தற்போது அறிவித்துள்ளது.

ஆந்திராவை வேற லெவலுக்கு கொண்டு போகும் ஜெகன் அண்ணா! இப்படி ஒரு சிஎம் கிடைக்க குடுத்து வெச்சுருக்கணும்

இதன்படி ஹூண்டாய், கியா மோட்டார்ஸ், வால்வோ என்று முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் இந்த திறன் மேம்பாட்டு கல்லூரிகள் கூட்டணி அமைக்கவுள்ளன. இந்த 3 நிறுவனங்களும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றன என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

ஆந்திராவை வேற லெவலுக்கு கொண்டு போகும் ஜெகன் அண்ணா! இப்படி ஒரு சிஎம் கிடைக்க குடுத்து வெச்சுருக்கணும்

இதில், ஹூண்டாய், கியா ஆகிய இரண்டு கார் நிறுவனங்களும் தென் கொரியாவை சேர்ந்தவைதான். தென் கொரிய தலைநகர் சியோலில்தான் அவற்றின் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ளன. ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் மிக நீண்ட காலமாகவே கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு உரிய கார் நிறுவனங்களில் ஹூண்டாயும் ஒன்று.

ஆந்திராவை வேற லெவலுக்கு கொண்டு போகும் ஜெகன் அண்ணா! இப்படி ஒரு சிஎம் கிடைக்க குடுத்து வெச்சுருக்கணும்

இதனால் இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு அடுத்தபடியாக அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக ஹூண்டாய் திகழ்கிறது. மறுபக்கம் கியா மோட்டார்ஸ் சமீபத்தில்தான் இந்திய மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்தது. இந்தியாவில் அந்த நிறுவனத்தின் முதல் காராக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட செல்டோஸ் எஸ்யூவி காருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆந்திராவை வேற லெவலுக்கு கொண்டு போகும் ஜெகன் அண்ணா! இப்படி ஒரு சிஎம் கிடைக்க குடுத்து வெச்சுருக்கணும்

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கியா செல்டோஸ் எஸ்யூவி கார் விற்பனையில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. ஆந்திர மாநிலம் அனந்த்ப்பூர் பகுதியில்தான் கியா நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்கப்பட்டு, கார்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவை வேற லெவலுக்கு கொண்டு போகும் ஜெகன் அண்ணா! இப்படி ஒரு சிஎம் கிடைக்க குடுத்து வெச்சுருக்கணும்

இப்படி முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் மட்டுமல்லாது, ஐடிசி, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களுடனும் ஆந்திராவில் அமைக்கப்படவுள்ள திறன் மேம்பாட்டு கல்லூரிகள் கூட்டணி ஏற்படுத்தவுள்ளன. இந்த கல்லூரிகளில், திறன் மேம்பாடு குறித்து மாணவர்களுக்கு சுமார் 120 கோர்ஸ்கள் வழங்கப்படவுள்ளன.

ஆந்திராவை வேற லெவலுக்கு கொண்டு போகும் ஜெகன் அண்ணா! இப்படி ஒரு சிஎம் கிடைக்க குடுத்து வெச்சுருக்கணும்

இது தொடர்பாக ஆந்திர முதல் அமைச்சர் ஜெகன் மோகன் கூறுகையில், ''நல்ல முடிவுகளை பெறுவதற்காக நிறுவனங்களும், திறன் மேம்பாட்டு கல்லூரிகளும் இணைந்து செயல்பட வேண்டும். தொழில்துறையின் தேவைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்துடன் தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப பொருந்தி செல்ல கூடிய வகையில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும்'' என்றார்.

ஆந்திராவை வேற லெவலுக்கு கொண்டு போகும் ஜெகன் அண்ணா! இப்படி ஒரு சிஎம் கிடைக்க குடுத்து வெச்சுருக்கணும்

தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு திறன் சார்ந்த இத்தகைய பயிற்சிகள் உண்மையிலேயே அவசியம். வேலைவாய்ப்பை அளிக்கும் நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கின்றன? என்பதற்கு ஏற்ப, மாணவர்களுக்கு முன்கூட்டியே பயிற்சி அளித்து, அவர்களை தயார் செய்து விட்டால், வேலையில் அவர்களால் ஜொலிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hyundai And Kia To Partner With Skill Development Colleges In Andhra: Jagan Mohan. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X