காரில் வந்து பூந்தொட்டிகளை திருடீட்டு போனது அவங்களா! வீடியோவை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இதில், 2 இளம்பெண்கள் கார் ஒன்றில் வந்து, பூந்தொட்டிகளை திருடி செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த சம்பவம் பஞ்சாப் (Punjab) மாநிலம் மொகாலி (Mohali) பகுதியில் நடைபெற்றுள்ளது.
இது உண்மையிலேயே மிகவும் விசித்திரமான ஒரு சம்பவம்தான். இதற்கு முன்பாக நகை மற்றும் பணம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் திருடி போனது குறித்த செய்திகளை நீங்கள் படித்திருக்கலாம். பெரும்பாலும் ஆண்கள்தான் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால் தற்போது பூந்தொட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

அதுவும் 2 பெண்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஒரு சேர ஏற்படுத்துவது போல் உள்ளது. இந்த திருட்டிற்கு உண்மையான காரணம் என்ன? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இது குறித்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 2 இளம்பெண்களும் பூந்தொட்டிகளை திருடுவதற்கு பயன்படுத்தியது, ஹூண்டாய் அவ்ரா (Hyundai Aura) கார் ஆகும். இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்தது. இந்திய சந்தையில் ஹூண்டாய் அவ்ரா, பிரபலமான கார்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் தற்போதைய நிலையில் ஒவ்வொரு மாதமும் சுமார் 4,500 ஹூண்டாய் அவ்ரா கார்கள் விற்பனையாகி கொண்டிருக்கின்றன.

ஹூண்டாய் அவ்ரா காரின் ஆரம்ப விலை (Price) 6.44 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இப்படிப்பட்ட ஒரு காரில் வந்து பூந்தொட்டிகளை திருடி சென்றிருப்பது, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்த கலவையாகவே உள்ளது.
ஹூண்டாய் அவ்ரா காரை பொறுத்தவரையில், பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரின் பெட்ரோல் வெர்ஷன்களில் பொருத்தப்பட்டிருப்பது, 1,197 சிசி இன்ஜின் ஆகும். இதன் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.
அதே நேரத்தில் இந்த காரின் சிஎன்ஜி வெர்ஷன்களிலும், 1,197 சிசி இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு வசதிகளும் வழங்கப்படுவதால், ஹூண்டாய் அவ்ரா வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு காராக திகழ்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பஞ்சாப் மாநிலம் மொகாலியில் பூந்தொட்டிகள் திருடப்பட்ட விவகாரத்தில், இன்னும் சரியாக காரணம் என்ன? என்பது நமக்கு தெரிய வரவில்லை. இருப்பினும் அடுத்தவர்களின் உடைமைகளை திருடுவது என்பது சரியான விஷயம் கிடையாது. காவல் துறையின் விசாரணைக்கு பின்னரே இது குறித்த முழுமையான தகவல்கள் நமக்கு தெரியவரும்.


Click it and Unblock the Notifications








