வாங்கிய ஓரு மாதத்திலேயே விபத்தில் சிக்கிய ஐ10 கார்! ரூ2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
புதிதாக வாங்கிய கார் ஒரே மாதத்தில் ரிப்பேர் ஆகி விபத்தில் சிக்கியதால் காயின் உரிமையாளருக்கு ஹூண்டாய் நிறுவனம் ரூபாய் 2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என டில்லி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு குறித்த விரிவான தகவல்களை நாம் இங்கே காணலாம் வாருங்கள்.
டெல்லியை சேர்ந்தவர் மீனா இவர் கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொந்தமாக ஹூண்டாய் ஐ10 கார் ஒன்றை வாங்கி உள்ளார். இவர் காரை வாங்கி பயன்படுத்தி வந்த நிலையில் கார் வாங்கி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இவர் காரில் சென்று கொண்டிருக்கும்போது இவர் காரின் பின் டயரும், ரிம்மும் திடீரென கழன்று சென்றது. இதனால் அவர் பயணித்த கார் விபத்தில் சிக்கியது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்த போது காரின் பின்பக்க டயரும் ரிம்மும் கழன்று சென்றது தான் காரணம் என தெரிகிறது. இதற்கு கார் தயாரிக்கப்படும் போது செய்யப்பட்ட கவனக் குறைவான வேலை தான் காரணம் என்பதும் தெரியவந்தது.
இந்த கார் விபத்தில் சிக்கும் போது அது வெறும் 6200 கிலோமீட்டர் மட்டுமே பயணம் செய்திருந்தது. மேலும் விபத்து நேரத்தில் வெறும் 65 கிலோ மீட்டர் வேகத்தில் தான் இந்த கார் பயணித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த விபத்திற்கு உண்டாய் நிறுவனத்தின் கவனக்குறைவு தான் காரணம் என அந்நிறுவனத்தின் மீது மீனா நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஹுண்டாய் நிறுவனத்தின் மீதுதான் தவறு இருப்பதாக உத்தரவிடப்பட்டு மீனாவிற்கு ரூபாய் 80 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த நஷ்ட ஈடு போதுமானதாக இல்லை என கருதிய மீனா இந்த வழக்கை மேல்முறையீடு செய்தார் மேல்முறையீட்டில் இந்த வழக்கை நீதிபதிகள் சங்கீதா பின்ரா சேகர் மற்றும் பிங்கி ஆகியோர் விசாரித்தனர்.
இந்த வழக்கில் வாதாடிய ஹூண்டாய் நிறுவனம் குறிப்பிட்ட விபத்து மீனாவின் கடுமையான டிரைவிங் மற்றும் மோசமான டிரைவிங் பழக்கவழக்கத்தால் ஏற்பட்டது என்றும் மேலும் பல வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்கள் வாங்கிய பின்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்ய வருவதில்லை எனவும் வாதாடியது.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள் குறிப்பிட்ட விபத்து என்பது கார் 6248 கிலோமீட்டர் பயணத்தின் போது கார் வாங்கிய ஒரே மாதத்தில் நிகழ்ந்த விபத்தாகும். இதற்கு நுகர்வோர் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவித்தனர். அவர்கள் இந்த விபத்திற்கான எந்த தவறையும் செய்யவில்லை எனவும் கூறியுள்ளனர்.
மேலும் நுகர்வோர்க்கு ஏற்பட்ட விபத்திற்கு முழுமையாக ஹூண்டாய் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்றும். இதனால் நுகர்வோர் பட்ட நஷ்டம் மற்றும் மன உளைச்சலுக்கு ரூபாய் இரண்டு லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஹுண்டாய் நிறுவனம் ரூபாய் 2 லட்சம் நஷ்ட ஈடை மீனாவிற்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நுகர்வு நீதிமன்றம் தற்போது ஹூண்டாய் நிறுவனத்திற்கு வைக்கப்பட்டுள்ள இந்த அபராதம் அந்நிறுவனம் வாகனத்தை தயாரிக்கும் போது செய்த பிழையால் வந்த பலனாகும். வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அவ்வப்போது இப்படியாக மோசமான பெட்டிகளை செய்து விடுகின்றனர். இது வாகன தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் செய்யும் தவறாகும்.
இதனால் நீங்கள் புதிதாக கார் வாங்கும்போது அதன் ஃபிட்டிங் சரியாக இருக்கிறதா என ஒரு முறை சோதனை செய்துவிட்டு கார் வாங்குவது தான் நல்லது. இல்லை என்றால் புதிய கார் உங்களை சோதனை செய்துவிடும் கார் வாங்கிய உடனே அது ரிப்பேர் ஆகி உங்களுக்கு அதிக செலவை இழுத்து வைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் நீங்கள் புதிதாக கார் வாங்கும்போது அதை நன்கு சோதனை செய்து பார்த்து வாங்குவது நல்லது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அவ்வப்போது இப்படியாக கவனக்குறைவாக இருப்பதை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். வாகனத்தை தயாரிக்கும் போது அனைத்து வாகனங்களும் சரியான ஃபிட்டிங்கில் இருக்கிறதா என்பதை அவர்கள் சோதனை செய்ய வேண்டும் இப்படியாக சரியான பிட்டிங் இல்லாத வாகனங்கள் தான் அவ்வப்போது வாடிக்கையாளர்கள் கைக்கு கிடைத்து அவர்கள் இதனால் சிரமப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications









