இது காரா இல்ல சொகுசு பங்களாவா? பெட்ரூம், பாத்ரூம்,கிச்சன் எல்லாமே இதுல இருக்குது!
ஹூண்டாய் கிரெட்டா காரை ஒரு சொகுசு பங்களா போல மாடிஃபிகேஷன் செய்து அதில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதை அவர்கள் வீடியோவாக எடுத்து யூடியூபில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
காரை மாடிஃபிகேஷன் செய்வது என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. மாடிஃபிடிகேஷன் என்றாலே பலருக்கும் ஹூண்டாய் காரின் வெளிப்புறத்தில் தான் அதிகமாக மாடிஃபிகேஷன் செய்வார்கள். ஆனால் உட்புறத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்யமாட்டார்கள். வெகு சிலரே காரின் உட்புறத்தில் செய்வார்கள். இப்படியாக ஒருவர் காரின் உள்ளே மாடிஃபிகேஷன் செய்து காரை ஒரு சொகுசு வீடாகவே மாற்றியுள்ளார்.

Ghumakkad bugz என்ற யூடிப் சேனலில் ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு ஜோடி தங்கள் ஹூண்டாய் கிரெட்டா காரை விடப் போல மாற்றி அதில் வாழ்ந்து வருகின்றனர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களும் தாராளமாக இதில் வாழ்ந்து வருகின்றனர். இதை இந்த குடும்பத்தினர் சுற்றுலா செல்லும் போது மட்டும் ஒரு வீடாக இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த காரில் இவர்கள் கிச்சன் வசதி ஏற்படுத்தியுள்ளனர். இதற்காக 5 கிலோ கேஸ் சிலிண்டரை வாங்கி கேஸ் அடுப்பாகப் பயன்படுத்துகின்றனர். அதே நேரம் கழிப்பறைக்கு ஒரு டென்ட் ஒன்றை வைத்துள்ளனர். இதை அவர்கள் செல்லும் இடத்தில் டென்ட் போட்டுப் பயன்படுத்துகின்றனர். அதை தங்கள் உடை மாற்றும் அறைக்காகவும் கூட பயன்படுத்துகின்றனர்.

கணவன், மனைவி, குழந்தைகள் எல்லோரும் படுத்துக்கொள்ள பெட் வசதியும் செய்துள்ளனர். மேலும் தண்ணீர் வசதிக்காக ஒரு கண்டைனரையும் வாங்கி காருக்குள்ளேயே பொருத்தியுள்ளனர். இது மட்டுமல்ல இவர்கள் காருக்குள்ளேயே சமையலுக்கான பாத்திரங்கள், பலசரக்கு பொருட்கள், பாத்திரம் கழுவும் இடம், பொருட்கள் வைக்கும் இடம் ஆகியவற்றைப் பொருத்தியுள்ளனர்.
இந்த காரில் காய்கறி வெட்டவும் தனியாக வசதி செய்யப்பட்டுள்ளது. கிச்சனை பொருத்தவரை மாடுலர் கிச்சன் டைப்பில் வழங்கப்பட்டுள்ளது. இது எல்லாம் கிரெட்டா காரில் உள்ள 433 லிட்டர் பூட் ஸ்பெஸ் இருப்பதால் வசதியாக வழங்கப்பட்டுள்ளது. இது பின்பக்க சீட்டை மடித்துப் போட்டு இந்த செட்டப்பை வடிவமைத்துள்ளனர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை போல தங்கள் காரை எப்படி மாற்ற வேண்டும் எனப் பலர் ஆலோசனை கேட்டு வருகின்றனர். இது போன்று உங்கள் காரையும் ஒரு சொகுசு வீடு போல மாற்ற விருப்பம் இருக்கிறதா? உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு காரை வீடு போல செட்டப் செய்வது சிறப்பு தான் ஆனால் இந்த செட்டப்பை காரை நிறுத்தும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். காரை ஓட்டும் போது சாதாரண சீட் போல மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த செட்டப் உடன் பயணித்தால் பாதுகாப்பு இருக்காது. நீங்கள் உங்கள் காரை இப்படி மாற்றினால் இந்த விஷயத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









