கியரை கூட மாத்த தெரியல! புத்தம் புது காரை விபத்தில் நொறுக்கிய பெண் அவங்களா! உண்மை தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க!

உலகின் பல்வேறு நாடுகளிலும் டிரைவிங் லைசென்ஸ் (Driving License) பெறுவது என்பது கடினமான ஒரு விஷயமாக உள்ளது. ஆனால் இந்தியாவிலோ நிலைமை அப்படியே தலைகீழ். பணம் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் மிக எளிதாக டிரைவிங் லைசென்ஸை வாங்கி விட முடியும்.

முறையான சோதனை எதுவும் மேற்கொள்ளப்படாமலேயே, பலருக்கும் இங்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படுகிறது. அப்படிப்பட்டவர்களால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிறைய சாலை விபத்துக்கள் (Road Accidents) நடைபெறுகின்றன. ஏனெனில் அவர்களுக்கு உண்மையிலேயே கார் (Car), பைக் (Bike) ஆகிய வாகனங்களை ஓட்ட தெரியாது.

Hyundai Creta-Volkswagen Virtus Accident

இதை உண்மை என நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று உத்தர பிரதேச (Uttar Pradesh) மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தை விளக்கும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) கார் ஒன்று, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) காரின் மீது மோதி நிற்பதை இந்த சம்பவத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.

விபத்திற்கு காரணமான ஹூண்டாய் க்ரெட்டா காரை, பெண் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். ஆனால் அவருக்கு கியர்களை மாற்ற கூட தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், ஹூண்டாய் க்ரெட்டா காரின் கோ-பாசஞ்சர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர்தான், கியர்களை மாற்ற உதவி செய்கிறார்.

அத்துடன் ஒரு கட்டத்தில் அந்த பெண்ணால் மேற்கொண்டு காரை இயக்க முடியவில்லை என்பது தெரிந்ததும், அவரே டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்டுகிறார். இது சிறிய அளவிலான விபத்துதான். ஆனால் விபத்தில் பாதிக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் புத்தம் புதிய ஆகும். இந்த கார் வாங்கப்பட்டு சுமார் ஒரு மாதம் மட்டுமே ஆவதாக கூறப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் யூ-டர்ன் எடுக்க முயன்றபோது, ஹூண்டாய் க்ரெட்டா கார் வந்து மோதியுள்ளது. இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், விபத்திற்கு காரணமான ஹூண்டாய் க்ரெட்டா காரை ஓட்டிய பெண்ணிடம் ஏற்கனவே டிரைவிங் லைசென்ஸ் இருக்கிறது. ஆனால் கியர்களை மாற்ற கூட அவர் தடுமாறியுள்ளார்.

விபத்து நடைபெற்ற பதற்றத்தில் உருவான குழப்பத்தால் அவர் இப்படி தடுமாறினாரா? அல்லது உண்மையிலேயே அவருக்கு கியர்களை மாற்ற கூட தெரியவில்லையா? என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் அனேகமாக அவருக்கு சரியாக கார் ஓட்ட தெரியவில்லை என்பதுதான் இதற்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

நாங்கள் ஏற்கனவே கூறியபடி இந்தியாவில் கார் ஓட்டவே தெரியாத பலரிடமும், லைசென்ஸ் உள்ளது என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். போதாக்குறைக்கு விபத்திற்கு காரணமான பெண், காவல் துறையில் டிஎஸ்பி-ஆக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி லைசென்ஸ் வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கார் ஓட்டி பழகுவதாக இருந்தால், வாகன போக்குவரத்து இல்லாத இடங்களில் பயிற்சி பெறலாம். அது மற்றவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஆனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பரபரப்பான சாலைகளில் கார் ஓட்டி பழக வேண்டாம். இதை மீறினால், இது போன்ற விபத்துக்களில் சிக்க நேரிடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Article Published On: Sunday, November 12, 2023, 18:18 [IST]
English summary
Hyundai creta volkswagen virtus accident viral video all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+