19 மணி நேரத்தில் 1030 கீ.மீ பயணம் ! அதுவும் இப்படி ஒரு கார்லயா?
ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில்இந்த காரை வாங்கி பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர் ஒருவர் 19 மணி நேரத்தில் இ்நத காரில் 1030 கி.மீ பயணத்துள்ளார். இந்த அனுபவத்தை சமூகவலைத்தளங்களில் அவர் பகிர்ந்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பெங்களூருவை சேர்ந்த ஒருவர் ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வருகிறார். இவர் ரெட்டிட் தளத்தி்ல தனது காரின் பயன அனுபவம் குறித்த வெளியிட்டுள்ளார். இதன்படி இவர் 19 மணி நேரத்தில் இந்த காரில் 1030 கி.மீ பயணத்துள்ளார். அதுவும் கடும் மழை, சேதமான ரேஆடுகள், என தனது பயணத்தை தொடர்ந்துள்ளார். இதற்காக அவர் தனது எக்ஸ்டர் ஏஎம்டி காரை பயன்படுத்தியுள்ளார்.

இவர் அதிகாலை 4.25 மணிக்கு பெங்களூருவிலிருந்து தனது பயணத்தை துவக்கியுள்ளார். பெங்களூருவிலிருந்து -கோக்யக் - பெலகாம் - தாவங்கரே சென்று மீண்டும் பெங்களுரு திரும்பியுள்ளார். இதற்காக மொத்தம் 22 மணி நேரம் எடுத்துக்கொண்டது. அதில் அவ்வப்போது சின்ன சின்ன பிரேக் எடுத்துள்ளார். மொத்தம் 1030 கி.மீ பயணம் செய்துள்ளார். இதற்காக 17.5 கி.மீ மைலேஜ் இவரது காருக்கு கிடைத்துள்ளது மோசமான சாலைகளில் கூட நல்ல மைலேஜ் கிடைத்துள்ளது.
இந்த பயணத்தின் போது இவர் 15 மணி தொடர்ந்து கடும் மழையில் பயணம் செய்துள்ளார். இந்த மோசமான வானிலையிலும் இவருக்கு வசதியான பயணம் கிடைத்துள்ளது. மழையில் வேகமாக செல்லும் போது ஸ்டெபிளிிட்டி, சிறப்பான ரைடு குவலிட்டி, ஆகிய விஷயங்கள் கிடைத்துள்ளது. இந்த எக்ஸ்டர் கார் பயணம் முழுவதும் சிறப்பாக வேலை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் சேரும் போது ஹைவேயில் அவருகஅக அழகான பயணம் கிடைத்துள்ளது. மேலும் தேவைப்படும் போது கியரை மாற்ற பெடல் ஸ்விஃப்டர்கள் இருந்ததால் இந்தகார் சிறப்பாக வேலை செய்துள்ளது. முக்கியமாக ஓவர்டேக் செய்யும் போது பெரிய அளவில் உதவியுள்ளது. இந்த காரின் உள்ளே ஏர் கன்டிஷனும் வெளியே பெய்த மழையால் குளிருக்கு ஏற்ப இவர்களை இதமாக வைத்துள்ளது.
காருக்குள் 4 பெரியவர்கள் லக்கேஜ் உடன் அமர தாராரளாக கிடைத்துள்ளது. மேலும் இவர்கள் காருக்குள் பயணிக்கும் போது கம்ஃபோர்டாக உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 5 பயணிகள் அமர்ந்து பூட் பகுதி முழுவதும் லக்கேஜ் இருந்தும் சஸ்பென்சன் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இவர் இந்த காரை வாங்கியது முதல் இதுவரை 11,500 கி.மீ இதை பயன்படுத்தியுள்ளார். இதில் 9500 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துளு்ளார்.,
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எக்ஸ்டர் காருக்க நல்ல மார்கெட் வளர்ந்துவரும் நிலையில்இப்படியாக கார் வாங்கிய ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளது. இப்படியாக கார் வைத்திருப்பருக்கு ஒரு நம்பிக்கையை தரும். அது மட்டுமல்லாமல் கார் குறித்த நம்பிக்கையை புதிய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி கார் விற்பனையை அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications








