எல்லாரும் இதுமாதிரி இருந்துவிட்டால் விபத்தே நடக்காது!! ‘பூமர் அங்கிள்’ என கிண்டல் செய்ய வேண்டாம்!
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 (Hyundai Grand i10) காரில் ஆக்ரோஷமாக சென்ற இளைஞரை வழியில் மடக்கி, ஒருவர் தோப்புக்கரணம் போட வைத்துள்ளார். எங்கு இந்த சம்பவம் நடந்துள்ளது? இவ்வளவு தைரியமாக நடுரோட்டில் உடனுக்குடன் தண்டனையை வழங்கியுள்ள நபர் யார்? என்பது உள்பட இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
நம் இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகளவில் நடப்பதற்கு முக்கிய காரணம், நம் நாட்டில் வாகன ஓட்டிகள் பலர் சாலை விழிப்புணர்வுடன் வாகனங்களை ஓட்டுவது இல்லை என்பதாகும். குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் வேகமாக பைக் & கார்களை ஓட்டுபவர்களை தினந்தோறும் பரவலாக பார்க்க முடிகிறது.

அத்தகையவர்களுக்கு போலீஸார் தகுந்த அபராதங்களை விதித்தாலும், இவ்வாறான விதிமீறல்கள் குறைந்த பாடில்லை. ஏனெனில், விதிமீறல்களில் ஈடுப்படும் வாகன ஓட்டிகள் அனைவரையும் போலீஸாரால் எப்போதும் அடையாளம் காண முடிவதில்லை. ஏனெனில், நம் இந்திய நாடு அந்த அளவிற்கு அளவில் பெரியது.
இதனால், போலீஸார் தான் போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க வேண்டும் என்று ஒதுங்கி போகாமல், நாட்டு மக்களாகிய நாம் தைரியமாக முன்வந்து இத்தகைய செயல்களில் ஈடுப்படுவோரை தடுக்க வேண்டும். அவ்வாறு, ஆக்ரோஷமாக கார் ஓட்டியவரை வழியில் மடக்கி தைரியமாக தண்டனையை வழங்கியுள்ள நபரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இதுதொடர்பான வீடியோ பிரதீக் சிங் என்கிற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது, மேற்கு வங்காள மாநிலத்தின் அசன்சோல் நகரத்திற்கு அருகே ஆகும். தப்பை தட்டிக் கேட்ட பிரசன்ஜித் என்பவரது காரின் டேஸ்போர்டில் இருந்த கேமராவின் மூலமாக இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வீடியோவை பின்னர் பிரசன்ஜித் இணையத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
அசன்சோல் நகரத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் மணிக்கு 60கிமீ வேகத்தில் பிரசன்ஜித் தனது காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, ஒரு வளைவில் திரும்பும்போது வேறொரு கார் ஓட்டி பிரசன்ஜித்திற்கு கொஞ்ச நேரத்தில் மரண பயத்தை காட்டியுள்ளார். பொதுவாக, வளைவுகளில் திரும்பும்போது, எதிரே வரும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக ஹார்ன் அடிப்பது வழக்கம். அவ்வாறே பிரசன்ஜித்தும் அந்த வளைவில் திரும்பும்போது ஹார்ன் அடித்தப்படி சென்றுள்ளார்.

அப்போது அந்த வளைவின் எதிர்பார்க்கத்தில் இருந்து லாரி ஒன்று வந்துள்ளது. லாரி ஓட்டுனரின் மீது எந்த தவறும் இல்லை. லாரிக்கு பின்னால் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரில் வந்தவர் அந்த வளைவில் லாரியை முந்த முயன்றுள்ளார். எதிரே கார் வருவதை பிரசன்ஜித் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், எப்படியோ கஷ்டப்பட்டு விபத்தை தவிர்த்து பிரசன்ஜித் தனது காரை நிறுத்தி உள்ளார்.
அந்த ஒரு கண நேரத்தில் எல்லாமே முடிந்துவிட்டது என்கிற அளவுக்கு அந்த ஹூண்டாய் கார் ஓட்டுனர் பிரசன்ஜித்துக்கு மரண பயத்தை காட்டிவிட்டார். இதனால், அவருக்கு தக்க பாடத்தை புகட்ட வேண்டும் என விரும்பிய பிரசன்ஜித் அந்த ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரை பின்தொடர்ந்து, ஒரு கட்டத்தில் மடக்கி நிறுத்தி உள்ளார். அதன்பின், அந்த காரினுள் இருந்து டிரைவரை வெளியே வர செய்த பிரசன்ஜித், அந்த நபரை நடுரோட்டிலேயே தோப்புக்கரணம் போட வைத்து தண்டனை வழங்கியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிராம புற சாலைகளில் ஓவர்டேக் செய்வதே மிகவும் ஆபத்தானது. அதிலிலும் இந்த ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் ஓட்டுனர் டர்னிங்கில் லாரியை முந்த முயன்றுள்ளார். இது முற்றிலும் ஆபத்தானது ஆகும். ஏனெனில், லாரியை ஓவர் டேக் செய்ய வேண்டுமென்றில், நீண்ட நேரத்துக்கு எதிர்திசையில் செல்ல வேண்டியிருக்கும். இந்த சம்பவத்தின்போது, பிரசன்ஜித்தின் மனைவியும் உடன் இருந்தார்.


Click it and Unblock the Notifications








