சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நிதி வழங்கிய ஹூண்டாய்! எத்தனை கோடி தெரியுமா?
மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவ ஹுண்டாய் நிறுவனம் ரூபாய் 3 கோடியை வழங்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் சென்னையில் தனது ஆலையை வைத்து கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், சென்னை மக்களுக்கு உதவ முன்வந்துள்ளது. கார்ப்பரேட்டுகளின் சமூக அக்கறை திட்டத்தின் கீழ் இந்த உதவியை அந்நிறுவனம் செய்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த திங்கட்கிழமை சென்னை பகுதியில் கன மழை பெய்ய துவங்கியது. நிச்சயம் புயல் காரணமாக பெய்த கனமழையால் பல இடங்கள் தற்போது தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சென்னையில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தால் தற்போது சென்னை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மக்களுக்கு உதவ பல்வேறு நிறுவனங்கள் தன்னார்வலர்கள் தொண்டு அமைப்புகள் எல்லாம் முன்வந்து வரும் நிலையே தற்போது சென்னையிலேயே ஆலை அமைத்து கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் ஹூண்டாய் நிறுவனம் சென்னை மக்களுக்கு உதவ முன்வந்துள்ளது. இதன் மூலம் சென்னை மக்கள் மிகப்பெரிய அளவில் பலனை பெற உள்ளார்கள்.
ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் சமூகப் பொறுப்பு என்ற பெயரில் குறிப்பிட்ட அளவு பணத்தை சமூகத்திற்கு செலவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. அந்த விதிமுறையின் கீழ் நிறுவனம் ரூபாய் மூன்று கோடி பணத்தை சென்னை வெள்ள நிவாரண தொகையாக செலவு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

இதற்காக ஹூண்டாய் நிறுவனம் தமிழக அரசுடன் இணைந்து தனிக்குழுவை அமைத்து அதன் மூலம் உணவு தண்ணீர் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை சேகரித்து தேவையான மக்களை தேடி சென்று அவர்களுக்கு உதவி செய்து வருகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாக அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஹூண்டாய் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
இது மட்டுமல்லாமல் ஹுண்டாய் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக ரோடு சைடு அசிஸ்டென்ட்ஸ் சேவையை வழங்க முன் வந்துள்ளது. இதற்காக டோல் ஃப்ரீ எண்ணையும் (1800-102-4645) வழங்கியுள்ளது. ஹூண்டாய் வாடிக்கையாளர்கள் அவர்களது கார் இதுபோன்ற மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டால் இந்த டோல்ஃப்ரீ என்னை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான உதவியை பெற முடியும். இதன் மூலம் ஹூண்டாய் நிறுவனம் வாடிக்கையாளர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச் சென்று உதவ முன் வந்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ கிம் கூறும் போது:" இந்த சோதனையான காலகட்டத்தில் தமிழக மக்களுக்கு உதவ ஹுண்டாய் நிறுவனம் தனது தோழை கொடுக்கிறது. உலகம் முழுவதும் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் பார்வையே மனிதத் தன்மையை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதுதான். அதற்கு ஈடு செய்யும் வகையில் தற்போது சிரமப்படும் சென்னை மக்களுக்கு உதவ நாங்கள் முன்வந்துள்ளோம்.
இதற்கான நிவாரண நிதியாக ரூபாய் 3 கோடியை ஒதுக்கி உள்ளோம் இதன் மூலம் உடனடியாக மக்களுக்கு உதவிகள் கிடைக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளோம். வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று உதவுகிறோம். இதற்காக பிரத்தியேகமாக குழு ஒன்றை அமைத்துள்ளோம். சென்னை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த உதவிகளை செய்து வருகிறோம்.
இது மட்டுமல்லாமல் ஹுண்டாய் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் விதமாக சென்னை பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹுண்டாய் வாடிக்கையாளர்கள் அவர்களது கார்களை மீண்டும் சரி செய்ய உதவுகிறோம். இதற்காகவும் தனிப்பட்ட ஒரு குழுவை உருவாக்கி எங்கள் பணிகளை துவங்கி உள்ளோம். இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி கிடைக்கும் என உறுதி அளிக்கிறோம்" என்று கூறினார்.
ஹூண்டாய் நிறுவனம் இது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தார்ப்பாய் சீட்டுகள், பெட் சீட்டுகள், பாய் உள்ளிட்ட வசதியையும் உடல் நலம் குன்றிய மக்களுக்கு உதவி செய்ய மெடிக்கல் கேம்ப்களையும் பாதிக்கப்பட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள சேதாரத்தை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை மக்கள் தற்போது மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சென்னை மக்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இருக்கிறது. இதற்காக தான் அரசு கார்ப்பரேட் சமூக பொறுப்பு என்ற திட்டத்தை வைத்துள்ளது. அதன் கீழ் ஹுண்டாய் நிறுவனம் ரூபாய் 3 கோடி உதவி செய்ய வந்தது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே. இது போன்ற மற்ற நிறுவனங்களும் உதவ முன்வரும். நம்ம எதிர்பார்க்கலாம்


Click it and Unblock the Notifications









