அலைகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட ஐ20 கார்!! உள்ளே ஆள் வேற இருக்காங்க போலயே - ஷாக்கிங் வீடியோ!

ஹூண்டாய் ஐ20 கார் ஒன்று அலைகள் மிகுந்த கடற்கரை பகுதியில் அலையில் சிக்கி கொண்டுள்ளது. இது தொடர்பான வீடியோவினையும், இந்த நிகழ்வினை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

அலைகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட ஐ20 கார்!! உள்ளே ஆள் வேற இருக்காங்க போலயே - ஷாக்கிங் வீடியோ!

ஹேட்ச்பேக் கார்களையோ அல்லது 2-சக்கர-ட்ரைவ் கொண்ட கார்களையோ கடற்கரைக்கு எடுத்து செல்லுவது எப்போதும் சிறிது ஆபத்து நிறைந்ததாகும். ஏனெனில் அவற்றால் கடற்கரை மணல் பகுதியில் அவ்வளவாக முழு திறன் உடன் செயல்பட முடிவதில்லை.

அலைகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட ஐ20 கார்!! உள்ளே ஆள் வேற இருக்காங்க போலயே - ஷாக்கிங் வீடியோ!

இதற்கு உதாரணமாக பல கடற்கரை மற்றும் ஆற்று மணலில் சிக்கி கொண்ட கார்களை பற்றி நமது செய்திதளத்தில் பலமுறை பார்த்துள்ளோம். இருப்பினும் இவ்வாறான பயணங்களை மேற்கொள்வோர் ஒருபக்கம் மேற்கொண்டவாறு தான் உள்ளனர். அத்தகையவர்களில் ஒருவர் தான் கீழே உள்ள வீடியோவில் உள்ளவரும்.

ஆனால் என்ன... இவர் தனது ஹூண்டாய் ஐ20 ஃபேஸ்லிஃப்ட்டிற்கு முந்தைய மாடலை கடலுக்குள்ளும் எடுத்து சென்றுள்ளார். இந்த வீடியோவை யார் பதிவிட்டது என்பதை கண்டறிய முடியவில்லை. ஆதலால் இது எந்த பகுதியில் நிகழ்ந்தது என்பதும் தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் அலைகளுக்கு நடுவில் இந்த ஐ20 கார், கடல் மணலில் சிக்கிய பின்னரில் இருந்து தான், வெறும் 37 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அலைகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட ஐ20 கார்!! உள்ளே ஆள் வேற இருக்காங்க போலயே - ஷாக்கிங் வீடியோ!

ஆதலால் இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதும் தெரியவில்லை. அலைகள் கிட்டத்தட்ட காரை பாதி மூழ்கடித்துவிட்டன. இத்தகைய சூழ்நிலையில் இருந்து ஹூண்டாய் ஐ20 போன்ற 2-சக்கர-ட்ரைவ் கொண்ட ஹேட்ச்பேக் கார் தன்னிச்சையாக மீண்டு வருவதற்கு வாய்ப்பே இல்லை.

வீடியோவில், பெரிய அலைகள் வரும்போது கார் மொத்தமும் கடலுக்குள் இழுத்து செல்லப்படுவது போல் மிகவும் பயங்கரமாக உள்ளது. மீட்க வரும் வாகனத்தில் இருந்தவாறு தான் இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என நினைக்கிறேன். வீடியோவின் இறுதியில், சேற்றில் சிக்கிய காருக்கு அருகே நிற்கும் நபர் ஜன்னல் கண்ணாடி வழியாக உள்ளே பார்த்து பேசுகிறார்.

அலைகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட ஐ20 கார்!! உள்ளே ஆள் வேற இருக்காங்க போலயே - ஷாக்கிங் வீடியோ!

அப்படியென்றால் உள்ளே ஆட்கள் இருக்கின்றனர். இது மிகவும் ஆபத்தமானது. இவ்வளவு நெருக்கமாக, தண்ணீர் மேலே படாமல் கடலை பார்ப்பதற்கு யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். ஆனால் அதேநேரம் கார் கடலுக்குள் இழுத்து செல்லப்படுவதற்கு வாய்ப்புள்ளதை மறந்துவிடாதீர்கள்.

வீடியோவில் கடைசி வரையில் காருக்குள் இருந்து யாரும் வெளியே வந்தது போல் தெரியவில்லை. கார் கேபினுக்குள் தண்ணீர் வந்துவிட கூடாது என்பதற்காக அவர்கள் கதவை திறக்காமல் இருந்திருக்கலாம். இதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான், ஏனெனில் இதற்கே எவ்வளவு செலவாகும் என்பது தெரியவில்லை.

அலைகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட ஐ20 கார்!! உள்ளே ஆள் வேற இருக்காங்க போலயே - ஷாக்கிங் வீடியோ!

கேபினுக்குள் தண்ணீர் வந்தால் செலவு இன்னும் அதிகமாகலாம். காரை கடலுக்கு மிக நெருக்கமாக கொண்டு சென்றதினாலேயே இந்த விபத்து நடத்திருக்க கூடும். ஏனெனில் அலைகள் காரை மொத்தமாக ஒருபக்கமாக திருப்பிவிடக்கூடியவை. இது நிகழ ட்ரைவிங்கில் ஒரு சிறிய தடுமாற்றம் போதும்.

கார் ட்ரைவிங்கில் திறமை கொண்ட ஓட்டுனராக இருந்து, கார் 4x4 ட்ரைவ் அமைப்பை கொண்டிருந்தாலும் இவ்வாறான விபத்து ஏற்படுவதை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க முடிந்திருக்குமே தவிர்த்து, கடல் அலைகளுக்கு அடியில் இருக்கும் மென்மையான மணலில் இருந்து காரை மீட்பது என்பது முடியாத காரியம்.

அலைகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட ஐ20 கார்!! உள்ளே ஆள் வேற இருக்காங்க போலயே - ஷாக்கிங் வீடியோ!

இந்த சம்பவத்தில் நல்ல வேளையாக மீட்பதற்கு உடனடியாக ஒரு வாகனம் வந்தது. ஒரு சில கடற்கரைகளில் இத்தகைய வசதி உடனடியாக கிடைப்பதில்லை. வாகனம் மீட்கப்பட்டதா என்பது தெரியவில்லை, வீடியோவில் காட்டப்படவில்லை. இந்தியாவில் கார் ட்ரைவிங்கிற்கு ஏற்ற கடற்கரை பகுதிகளும் உள்ளன. அவை சற்று தடிமனான மணல் துகள்களை கொண்டவை.

ஆதலால் கார் போன்ற சற்று எடை குறைவான வாகனங்களின் சக்கரங்கள் சிக்குவது அவ்வளவாக நிகழ்வது இல்லை. அத்தகைய கடற்கரையில் ஒன்று எனக்கு தெரிந்தவரையில் கேரளாவில், முழப்பிலங்காடு பகுதியில் உள்ளது. அங்கு அலைகளுக்கு அருகே வாகனத்தை இயக்க சிறிய கட்டணத்தை வசூலிப்பதுபோல் கேள்விப்பட்டேன்.

இருப்பினும் கடற்கரையில் எவ்வாறு கார்களை ஓட்டுவது என்பதை இவ்வாறான பயணங்களை மேற்கொள்ளும் முன் எவர் ஒருவரும் தெரிந்து வைத்திருத்தல் அவசியமாகும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இதனை அறிந்து கொள்வது சற்று கடுமையான காரியமே ஆகும். இதனால் தான் பெரும்பாலானோர்க்கு கடற்கரை மணல் பகுதியில் காரை இயக்குவது என்பது தெரிவது இல்லை, அது 4x4 ட்ரைவ் சிஸ்டம் கொண்ட காராக இருந்தாலும் சரி.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hyundai i20 owner goes driving on the beach Gets stuck in the sea.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X