முதல் நாளே இவ்வளவு பேர் புக் பண்ணிட்டாங்களா? ஹூண்டாய் காரை விட ஐபிஓ வாங்கினால் இவ்வளவு லாபமா?
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் மக்களிடமிருந்து முதலீடுகளை பெறுவதற்காக ஐபிஓவை தற்போது அறிவித்துள்ளது. நேற்று முதல் பொதுமக்கள் புக்கிங்காக ஐபிஓ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் நாளே எதிர்பார்க்கப்பட்ட அளவைவிட அதிகமான அளவு புக்கிங் குவிந்துள்ளது. இதனால் ஹூண்டாய் நிறுவனத்தின் பங்குகளின் விலை அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. தற்போது வரை எவ்வளவு புக்கிங் வந்துள்ளது. புக்கிங் செய்தவர்களுக்கு எப்பொழுது அலாட்மென்ட் கிடைக்கும் என்ற விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய பங்குச் சந்தையில் பொதுமக்களிடமிருந்து முதலீடுகளை பெறுவதற்காக புதிய ஐபிஓக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நேற்று முதல் பொதுமக்கள் புக்கிங்காக இந்த ஐபிஓக்கள் ஓப்பன் செய்யப்பட்டன. இந்தியாவில் இந்த ஹூண்டாய் நிறுவனத்தின் ஐபிஓவை வாங்க வேண்டும் என்றால் 1865 முதல் 1960 வரை ஒரு பங்கிற்காக செலவு செய்ய வேண்டும்.

இந்தியாவில் இந்த பங்குகள் எல்லாம் லாட் முறையில் தான் விற்பனை செய்யப்படுகின்றன. ஹுண்டாயின் ஒரு லாட் என்பது 7 பங்குகள் ஆகும். 7 பங்குகளை சேர்த்து தான் ஒருவரால் வாங்கவோ விற்கவோ முடியும். நேற்று முதல் இந்த பங்குகளுக்கான புக்கிங் துவங்கிய நிலையில் இதுவரை 18 சதவீதம் பங்குகளுக்கான புக்கிங் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இந்த பொதுமக்கள் முதலீட்டை பெறுவதன் மூலம் மொத்தம் ரூபாய் 27,870.16 கோடியை பெற முயற்சி செய்து வருகிறது. இது இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான பணமாகும். இதற்கு முன்னர் எல்ஐசி நிறுவனம் தனது பங்குகளை கொண்டு வரும் போது ரூ 21,000 கோடிக்கு ஐபிஓவை வெளியிட்டது. தற்போது இது அதைவிட கூடுதலான மதிப்பாக இருக்கிறது.

ஒட்டுமொத்த பங்குகள் பிரிக்கப்பட்டு பொதுமக்கள் வாங்கக்கூடிய அளவிலான பங்குகளில் இதுவரை 26 சதவீதமான பங்குகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தொடர்ந்து இந்த புக்கிங் என்பது பெறப்படுகிறது. இந்த இரு நாட்களிலும் பெறப்படும் பூக்கள் வைத்து மொத்தமாக புக்கிங் செய்யப்பட்ட பங்குகள் அதற்கு பிறகு பிரித்து வழங்கப்படும்.
வரும் 18ம் தேதி பங்குகள் பிரித்து வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. பங்கு சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் கடைசி நாளில் தான் தங்கள் புக்கிங்கை மேற்கொள்வார்கள். முதல் இரண்டு நாளில் டிரெண்ட் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து பொதுமக்கள் மத்தியில் எப்படியான ஆர்வங்கள் இருக்கிறது? என்பதை பார்த்து அவர்கள் புக்கிங் செய்வார்கள்.
இதனால் நாளை பங்குச்சந்தை நேரம் முடிவதற்குள் 100 சதவீத பங்குகளும் புக்கிங் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதிகபட்சமாக ஒரு பங்குக்கு ரூபாய் 2000 வரை புக்கிங் செய்யப்படலாம் என தெரிகிறது. இதனால் நீங்கள் இந்த ஹூண்டாய் நிறுவனத்தின் பங்கை வாங்கினால் உங்களுக்கு ஒரு பங்கிற்கு ரூபாய் 2000 இருந்தால் போதும்.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. மாருதிக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது பெட்ரோல் டீசல் வாகனங்கள் மட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களை தயாரிக்கும் சிந்தனையிலும் இருக்கிறது. அந்நிறுவனத்தின் தயாரிப்பில் எலெக்ட்ரிக் வாகனங்கள் கூட மார்கெட்டிற்கு வந்துவிட்டன.
ஹூண்டாய் நிறுவனம் தென்கொரியாவை தலைமையிடமாக கூட நிறுவனமாக இருந்தாலும், இந்தியன் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் நீடித்த உழைப்பை தரும் என மக்கள் நம்புகிறார்கள். அதன் காரணமாகவே இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை நம்பி வாங்குகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு என்று மிகப்பெரிய நல்ல பெயர் இருக்கிறது. அந்த பெயரை முதலீடாக வைத்து அதன் காரணமாகவே பெரிய அளவிலான முதலீடுகளை அந்நிறுவனம் பெற்று வருகிறது. நிச்சயம் எதிர்காலத்தில் இந்நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சி அடைவதற்கு இந்த முதலீடு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








