கையில பணம் வச்சிருந்தா வர 14ம் தேதி இதை வாங்கி போடுங்க! லாபம் கிடைக்க ஏகப்பட்ட வாய்ப்பு இருக்குது!
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனம் தற்போது இந்திய மார்க்கெட்டில் புதிய ஐபிஓ ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகள் எல்லாம் நடந்து வருகின்றன. இதன்படி வரும் 14ஆம் தேதி இதற்கான புக்கிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹுண்டாய் நிறுவனம் இந்த ஐபிஓவை எதற்காக வெளியிடுகிறது? யார் யாருக்கெல்லாம் இந்த ஐபிஓ கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை சந்தித்து வருகின்றன. இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் மார்கெட்டாக மாறி உள்ள நிலையில், வாகனத்தை தயாரிக்கும் நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன. இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி தென்கொரியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்து நீண்ட ஆண்டுகளாக வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனம் ஹூண்டாய் நிறுவனம் இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் மொத்தம் 19 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிறுவனமாக மாறியுள்ளது. இந்நிறுவனம் தற்போது 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணத்தை மீண்டும் பொது மக்களிடம் இருந்து பெற்று முதலீடு செய்ய திட்டமிட்டு வருகிறது.
இதற்காக இந்திய பங்குச்சந்தையில் இந்நிறுவனம் ஐபிஓ வை அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன்படி வரும் 14ஆம் தேதி முதல் ஹுண்டாய் நிறுவனத்தின் ஐபிஓ புக்கிங் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 17ம் தேதி முதல் புக்கிங் முடிவடைகிறது. அதன் பிறகு இது லிஸ்ட் செய்யப்படும் தேதிகள் அறிவிக்கப்படும். அதற்கு முன்னர் புக்கிங் செய்தவர்களுக்கு ஐபிஓ ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்த தகவல் தெரிவிக்கப்படும்.

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் ஐபிஎல் அறிமுகப்படுத்தும் நிலையில் ஒரு ஷேர் ரூபாய் 1865 முதல் 1960 என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஓ வாங்க முதலீட்டாளர்கள் பலர் ஆர்வமாக இருந்து வருகிறார்கள். புக்கிங் செய்வதற்கான யுக்திகளை யோசித்து வருகிறார்கள். எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான புக்கிங்கை ஹூண்டாய் நிறுவனம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்திற்கான கார்கள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தங்கள் தொழிலை விரிவு படுத்துவதற்காக இந்த முதலீட்டை நிறுவனம் தெரிகிறது. இதை வைத்து புதிய கார்களை தயாரிப்பதற்கான செலவுகளை அந்நிறுவனம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து இந்நிறுவனத்தின் வாகனங்கள் அதிகமாக விற்பனையாகும் போது இந்நிறுவனத்தின் மதிப்பு உயரும். இதனால் தற்போது ஐபிஓவை வாங்கியவர்கள் குறைந்த நாட்களிலேயே அதிக விலையில் விற்கக் கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். இதனால் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் தற்போது மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற்ற நிறுவனமாக இருப்பதால் நீண்ட முதலீட்டிற்கு இது ஏற்றதாக இருக்கும்.
இந்நிறுவனம் இந்தியாவில் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது எடுக்கப் போகும் முடிவை போது தான் அடுத்த சில ஆண்டுகளுக்கான வளர்ச்சி இருக்கிறது. இந்நிலையில் தற்போது அறிமுகம் ஆகும் ஐபிஓ டிரெண்ட் தான் எதிர்காலத்தில் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காக இருக்கும் . மேலும் அந்நிறுவனம் முதலீட்டு திட்டங்களை மறுசீரமைப்பு செய்யவும் இது வசதியாக இருக்கும்.
மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களும் விரைவில் பங்குச்சந்தையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐபிஓ-வை அறிமுகப்படுத்த கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்நிறுவனம் இதில் வெற்றி பெறும் பட்சத்தில் நிச்சயம் இப்படியான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் நிறுவனத்தில் ஐபிஓ-வில் லிஸ்ட் செய்யப்பட்ட பிறகு இருக்கும் விலை மிக முக்கிய பங்கு வகிக்கும்.
டிரைவிங்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் தற்போது இந்தியாவில் ஐபிஓவை அறிமுகப்படுத்த உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் இதில் ஆர்வமாக இருக்கிறார்கள். இதனால் மிகப்பெரிய அளவில் பங்குச்சந்தையில் டிரெண்ட் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த ஐபிஓ குறித்த உங்கள் கருத்துகளையும் ஹூண்டாய் நிறுவனம் குறித்த உங்கள் கருத்துக்களையும் கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








