ரூ2,000 இருந்தால் போதும் நாளைக்கே ஹூண்டாய் ஐபிஓ புக் பண்ணலாம்! எப்படி தெரியுமா?

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பயணிகள் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமான ஹுண்டாய் நிறுவனம் தங்களுக்கான ஐபிஓவை வெளியிட்டுள்ளது. இதை நாளை முதல் பொதுமக்கள் புக்கிங் செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி வரை இதற்கான புக்கிங் நடக்க உள்ள நிலையில் இந்த ஐபிஓவை வாங்க ஏராளமான மக்கள் காத்திருக்கிறார்கள். உங்களிடம் வெறும் ரூ 2000 இருந்தாலே இந்த ஐபிஓவை வாங்கிவிடலாம். எப்படி என்ற விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயார் நிறுவனமான ஐபிஓ தற்போது இந்தியாவில் தனது முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன் காரணமாக நிறுவனம் பங்குச்சந்தை மார்க்கெட்டில் புதிய ஐபிஓக்களை வெளியிட திட்டமிட்டுள்ளன. இந்நிறுவனம் ஆஃபர் செயலுக்குப் பிறகு தனது பங்கை 100 சதவீதத்திலிருந்து 82.5 சதவீதமாக குறைத்துள்ளது. பாக்கி உள்ள தொகையை முதலீட்டாக பெற நிறுவனம் விரும்புகிறது. எதிர்காலத்தில் இதை 75% ஆக குறைக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Hyundai IPO

இந்த ஐபிஓ வெளியீட்டின் மூலம் ஹுண்டாய் நிறுவனம் மொத்தம் ரூ 27,870 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. தற்போது ஒரு பங்கின் விலை ரூ1865 முதல் ரூ1960 வரை இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த ஐபிஓவை வாங்குபவர்கள் ஒரு லாட்டாக வாங்க வேண்டும். ஒரு லாட்டிற்கு 7 பங்குகள் வீதம் வழங்கப்படும்.

அதாவது ரூபாய் 2000 இருந்தாலே ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு பங்கை வாங்கி விட முடியும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை என்பது தற்காலிக விலை மட்டுமே லிஸ்ட் செய்யப்படும் போது இந்த விலை மாறுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எவ்வளவு நபர்கள் புக்கிங் செய்கிறார்கள் என்பதை பொறுத்து விலை மாறுபடும்.

Hyundai IPO

ஹுண்டாய் நிறுவனம் இந்தியாவில் அதிகமாக லாபம் ஈட்டும் ஒரு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த 2023ம் நிதியாண்டில் மொத்தம் 60,307.6 கோடியை வருமானமாக பெற்றுள்ளது. இதில் நிகர லாபம் மட்டும் ரூ4709.3 கோடியில் லாபமாக பெற்றுள்ளது. இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கிறது.

இதே போல கடந்த 2024ம் நிதியாண்டிலும் மொத்தம் ரூ 69,829.1 கோடியை அந்நிறுவனம் வருமானமாக பெற்றுள்ளது. இதில் ரூ6,060 கோடியை அந்நிறுவனம் லாபமாக பெற்றுள்ளது. லாபத்தில் மட்டும் அந்நிறுவனம் 28.7% அளவுக்கு ஒரே ஆண்டில் வளர்ச்சி அடைந்துள்ளது. இது மிகப்பெரிய வளர்ச்சியாக தான் பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கடந்த 1996ம் ஆண்டு தான் முதன்முதலில் தனது வர்த்தகத்தை துவங்கியது. சென்னையில் தான் நிறுவனம் முதன் முதலில் ஆலையை அமைத்தது இதுவரை ஆண்டிற்கு 8,24,000 வாகனங்களை நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திலும் புதிதாக ஒரு ஆலையை அமைத்து அங்கு வாகன தயாரிப்பில் ஈடுபடும் முயற்சியிலும் அந்நிறுவனம் இருக்கிறது.

மகாராஷ்டிரா ஆலையும் விரைவில் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்து விட்டால் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் அந்நிறுவனம் ஆண்டிற்கு 10 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை தயாரித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலத்திற்கு நல்ல லாபம் தரும் நிறுவனமாக நிறுவனம் இருப்பதால் பலர் அதில் முதலீடு செய்ய திட்டமிட்டு வருகிறார்கள்.

தற்போது ஆட்டோமொபைல் துறையில் பெட்ரோல் டீசல் வாகனங்களை தவிர்த்து ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் வருகை மிகப் பெரிய புரட்சியை செய்து வரும் நிலையில் ஹுண்டாய் நிறுவனமும் இதற்கு தயாராக மற்றும் ஹைபிரிட் காரர்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே எலக்ட்ரிக் கார்களை நிறுவனம் வெளியிட்டுள்ளன.

இந்த நிறுவனத்தின் ஐபிஓ நாளை பொதுமக்களுக்காக வெளியாகும் நிலையில் முதலீட்டாளர்கள் பலர் இந்த நிறுவன பங்குகளை வாங்க ஆர்வமாக காத்திருக்கிறார்கள். பலர் முன்னரே அப்ளை செய்து வைத்திருக்கிறார்கள் அந்நிறுவனம் எதிர்பார்த்ததை விட மிக அதிக அளவிலான புக்கிங் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோமொபைல் துறையில் நீண்ட ஆண்டுகளுக்கு முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த ஹுண்டாய் ஐபிஓ மிகப்பெரிய நல்ல வாய்ப்பாக இருக்கிறது. இந்நிறுவனம் தொடர்ந்து லாபத்தை சம்பாதிக்கும் நிறுவனமாக இருப்பதால் பலர் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் என தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, October 14, 2024, 17:06 [IST]
English summary
Hyundai ipo opens tomorrow what investors need to know
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+