எப்படி சார் காரை அங்கே பார்க் பண்ணீங்க!! ஆச்சிரியத்தை பாருங்களேன்... கேரளாவில் நடந்துள்ள சம்பவம்!
ஹூண்டாய் கோனா இவி (Hyundai Kona EV) எஸ்யூவி கார் ஒன்று சாலையின் நடுவே இருந்த டிவைடரில் மோதி விபத்திற்கு உள்ளாகி உள்ளது. டிவைடரின் மீது கோனா எலக்ட்ரிக் கார் அந்தரத்தில் தொங்குவது போல் நிற்கும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. எவ்வாறு இந்த விபத்து நடைபெற்றுள்ளது? கார் இவ்வாறு டிவைடரின் மீது ஏறி நிற்பதற்கு வாய்ப்புள்ளதா? என்பது போன்றதான கேள்விகளுக்கு பதில்களை இனி பார்க்கலாம்.
உலகளவில் சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெறக்கூடிய நாடுகளில் நம் இந்தியாவும் ஒன்று. இதற்கு முக்கிய காரணம், நம் மக்களிடத்தில் போதிய சாலை விழிப்புணர்வு இல்லை என்பதாகும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, சோர்வாக இருக்கும் போது வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவை நம் நாட்டில் அதிகளவில் சாலை விபத்துகள் நடப்பதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன.

அதேபோல், முறையாக இண்டிகேட்டர் போடாமல் வாகனத்தை திருப்புவது, எதிர்திசையில் வாகனம் ஓட்டுவது போன்றவையும் சாலை விபத்துகளை விளைவிக்கின்றன. இதன் எதிரொலியாகவே, தினந்தோறும் சாலை விபத்துகள் குறித்து குறைந்தது ஒரு செய்தியை ஆவது செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து வருகிறோம். சாலை விபத்துகளில் அதிகம் உட்படுவது கார்கள் தான் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மற்ற சாலை விபத்துகளை போல், கார் விபத்துகளும் அதில் சிக்குவோரும் பரிதாபத்திற்கு உரியவர்களே. அதேநேரம், ஒரு சில கார் விபத்துகள் இணையத்தில் வைரலாகும் அளவிற்கு சுவாரஸ்யமானவை ஆக அமைகின்றன. அவ்வாறான ஒரு சாலை விபத்தை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். இந்த சாலை விபத்தில் சிக்கி இருப்பது ஹூண்டாய் கோனா இவி என்ற எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும்.

இந்த குறிப்பிட்ட கோனா கார் சாலையின் மத்தியில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது. எவ்வாறு இந்த விபத்து நடைபெற்றது என்பது தெரியவில்லை. இந்த விபத்து குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள படங்களில் கார் டிவைடரின் மீது ஏறி நிற்பதை காணலாம். கார் அந்தரத்தில் தொங்குவது போல் இருக்கும் இந்த படங்கள் இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளன.
ஏனெனில், எவ்வாறு ஒரு கார் இவ்வாறு டிவைடரின் மீது பேலன்ஸ் தவறாமல் நிற்க முடியும் என்பது பலருக்கு கேள்வியை எழுப்பி உள்ளது. இணையத்தில் வெளியாகியுள்ள படங்களில், டிவைடரின் முன்பும், அருகேயும் கற்கள் உடைந்து கிடப்பதை பார்க்க முடிகிறது. ஒருவேளை கார் மோதிய வேகத்தில், ஒருபக்க சக்கரங்கள் இந்த கற்களின் மீது ஏறியதில், கார் டிவைடரின் மீது ஏறியிருக்கலாம்.

இருப்பினும் இதில் ஆச்சரியம் என்னவென்றால், கார் எவ்வாறு பேலன்ஸ் தவறாமல் நிற்கிறது என்பதே. காரின் நம்பர் பிளேட்டை வைத்து பார்க்கும்போது, இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது கேரளாவில் ஆகும். பழைய ஹூண்டாய் கோனா இவி காரில் அடாஸ் வசதி இல்லை. ஆனால், 2ஆம் தலைமுறை கோனா இவி-இல் அடாஸை ஹூண்டாய் வழங்கியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு விபத்தின்போது கார் ஒன்று பறந்து, விசித்திரமான ஓர் இடத்தில் சிக்கிக் கொள்வது ஒன்றும் புதியது அல்ல. சமீபத்தில் கூட அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் டொயோட்டா கரோல்லா கார் ஒன்று பறந்து சென்று வீட்டின் மேற்கூரையில் சொருகி நின்றது. அந்த அளவிற்கு இல்லையென்றாலும், கேரளாவில் நடைபெற்றுள்ள இந்த கோனா இவி விபத்தும் கவனத்தை பெற்றுள்ளது.
Image Source: Cartoq


Click it and Unblock the Notifications









