2030க்கு முன்னரே வரும் ஹூண்டாயின் பறக்கும் கார்... சொன்னது யார் தெரியுமா? இதோ முழு விபரம்!

2030ம் ஆண்டிற்கு முன்னரே ஹூண்டாயின் (Hyundai) பறக்கும் கார் நடைமுறை பயன்பாட்டிற்கு வரும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

2030க்கு முன்னரே வரும் ஹூண்டாயின் பறக்கும் கார்... சொன்னது யார் தெரியுமா? இதோ முழு விபரம்!

எதிர்பார்த்ததை விட மிக விரைவில் பறக்கும் கார்கள் நிஜ உலகில் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றன. இதற்கான சாத்தியக் கூறுகள் அனைத்தும் தற்போது உருவாகியிருக்கின்றது. முன்னணி நிறுவனங்கள் தொடங்கி ஆரம்ப நிலை வாகன உற்பத்தி நிறுவனங்கள் வரை பல இப்பணியில் களமிறங்கியிருக்கின்றன.

2030க்கு முன்னரே வரும் ஹூண்டாயின் பறக்கும் கார்... சொன்னது யார் தெரியுமா? இதோ முழு விபரம்!

இதன் அடிப்படையில் பல பறக்கும் கார் மாதிரிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஏன், ஐரோப்பா போன்ற உலக நாடுகள் சில பறக்கும் கார்களுக்கு அனுமதியே வழங்கிவிட்டன. ஆகையால், நிர்ணயிக்கப்பட்டதை காட்டிலும் மிகவும் விரைவில் பறக்கும் கார்கள் வானில் வட்டமடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2030க்கு முன்னரே வரும் ஹூண்டாயின் பறக்கும் கார்... சொன்னது யார் தெரியுமா? இதோ முழு விபரம்!

இந்த எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் தனது பறக்கும் கார் மிக விரைவில் பறக்கும் என கூறி ஒட்டுமொத்த வாகன உலகையுமே ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது. ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் முதல் பறக்கும் கார் மாடலான எஸ்-ஏ1 (S-A1) எனும் கான்செப்ட் மாடலை 2020ம் ஆண்டிலேயே காட்சிப்படுத்திவிட்டது. இது காட்சிக்குள்ளாவது இதுவே முதல் முறையாகும்.

2030க்கு முன்னரே வரும் ஹூண்டாயின் பறக்கும் கார்... சொன்னது யார் தெரியுமா? இதோ முழு விபரம்!

இந்த பறக்கும் காரை 2028ம் ஆண்டிற்குள் நடைமுறையில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தி குவார்டியன் இடத்தில் ஹூண்டாய் ஐரோப்பிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மைக்கேல் கேல் கூறியதாவது, "இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் பறக்கும் கார்கள் உண்மையாகிவிடும் என நாங்கள் நம்புவதாக" சூசகமான கருத்தை தெரிவித்தார்.

2030க்கு முன்னரே வரும் ஹூண்டாயின் பறக்கும் கார்... சொன்னது யார் தெரியுமா? இதோ முழு விபரம்!

இதன் வாயிலாக நிறுவனம் முன்னதாக முன்னெடுத்த வந்த நடவடிக்கைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், நிறுவனத்தின் முதல் வணிக பறக்கும் காரான எஸ்-ஏ1 ஏர்கார் 2028ம் ஆண்டிற்குள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இருப்பதும் தெரிய வந்திருக்கின்று. இதை இலக்காகக் கொண்டே நிறுவனம் தற்போது இயங்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2030க்கு முன்னரே வரும் ஹூண்டாயின் பறக்கும் கார்... சொன்னது யார் தெரியுமா? இதோ முழு விபரம்!

இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஹூண்டாய் நிறுவனத்தின் ஐரோப்பிய நடவடிக்கைகளுக்கான அதிகாரி வெளியிட்டிருக்கும் தகவலும் அமைந்திருக்கின்றது. நகர்புறங்களில் நிலவும் சாலை நெரிசல், அதிக மாசு ஆகியவற்றைக் குறைக்க இந்த பறக்கும் கார் பெருமளவில் உதவ இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

2030க்கு முன்னரே வரும் ஹூண்டாயின் பறக்கும் கார்... சொன்னது யார் தெரியுமா? இதோ முழு விபரம்!

ஹூண்டாய் நிறுவனம் எஸ்-ஏ1 உருவாக்கத்திற்கென பிரத்யேக குழுவை நிர்ணயித்திருக்கின்றது. இந்த குழுவே பறக்கும் காரின் உருவாக்கம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது. அவர்கள் விமானம் போன்ற அமைப்பு உடைய பறக்கும் காரை உருவாக்கி வருகின்றனர். அது மணிக்கு 300 கிமீ வேகத்தில் பறக்கக் கூடியது.

2030க்கு முன்னரே வரும் ஹூண்டாயின் பறக்கும் கார்... சொன்னது யார் தெரியுமா? இதோ முழு விபரம்!

இந்த வாகனம் பறக்கும்போது விமானத்தைப் போன்றும், சாலையில் இயங்கும்போது இறக்கையை ஒடுக்கிக்கொண்டு ஓர் காரை போன்று செயல்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆகையால், இந்த ஏர்கார் பறக்கும் வாகன சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2030க்கு முன்னரே வரும் ஹூண்டாயின் பறக்கும் கார்... சொன்னது யார் தெரியுமா? இதோ முழு விபரம்!

பறக்கும் கார்களை உருவாக்கும் பணிகள் இப்போது நேற்று என மேற்கொள்ளப்படவில்லை. இப்பணிகள் 1940ம் ஆண்டில் இருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால், இப்போதுதான் இந்த பணிகள் மிக தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. இவை சாலையில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் வகையில் பயன்பாட்டிற்கு வந்தாலும், காலப் போக்கில் வானத்தில் இதனால் நெரிசல் ஏற்படலாம் என வாகன விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

2030க்கு முன்னரே வரும் ஹூண்டாயின் பறக்கும் கார்... சொன்னது யார் தெரியுமா? இதோ முழு விபரம்!

தனிப்பட்ட பறக்கும் கார்களில் பறக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கின்றது. எனவே உலகளவில் ஏர்காரின் மீதான எதிர்பார்ப்பு கோலோச்சிக் காணப்படுகின்றது. இதன் காரணத்தினாலேயே எதிர்காலத்தில் தற்போது சாலையில் நிலவுவதைப் போல வானத்திலும் நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்படலாம் என கூறப்படுகின்றது.

Most Read Articles
English summary
Hyundai s flying car might take first take off before 2030
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X