சாண்ட்ரோ காரை 2 கிமீ தூரத்திற்கு இழுத்து சென்ற லாரி! என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க!

இந்திய சாலைகளில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் நடைபெற்று கொண்டுள்ளன. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது, சாலைகள் மோசமான நிலையில் இருப்பது என இதற்கு பல்வேறு காரணங்களை கூற முடியும். அத்துடன் இந்திய சாலைகளில் வினோதமான நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.

லாரி ஒன்றின் பின்னால் ஹூண்டாய் சாண்ட்ரோ (Hyundai Santro) கார் சிக்கி கொண்டது. இது லாரியின் டிரைவருக்கு தெரியவில்லை. எனவே அவர் லாரியை நிறுத்தவில்லை. இதன் காரணமாக ஹூண்டாய் சாண்ட்ரோ கார் சுமார் 2 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது.

Hyundai Santro Dragged For 2 KM

இந்த சம்பவத்தின் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஹூண்டாய் சாண்ட்ரோ கார் எதிர்பாராத விதமாக லாரியின் பின் பகுதியில் மோதி சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் லாரியின் டிரைவருக்கு தெரியவில்லை. எனவே அவர் லாரியை தொடர்ந்து ஓட்டி கொண்டு சென்றார்.

இந்த சமயத்தில் ஹூண்டாய் சாண்ட்ரோ காருக்கு உள்ளே பயணிகள் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு லாரியை எப்படி நிறுத்துவது? என்பது தெரியவில்லை. நல்லவேளையாக அந்த வழியாக மற்றொரு வாகனத்தில் வந்த ஒரு சிலர் லாரியை நிறுத்தும்படி கூச்சலிட்டனர். இதனால் ஒரு வழியாக சுமார் 2 கிலோ மீட்டர்கள் பயணத்திற்கு பின் லாரி நின்றது.

அதிர்ஷ்டவசமாக ஹூண்டாய் சாண்ட்ரோ காருக்கு உள்ளே இருந்தவர்களுக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அவர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். சமூக வலை தளங்களில் இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதை காண்பவர்கள் பலரும் இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்பாக கார்களின் பானெட் மீது தொங்கியபடியே பலர் பயணம் செய்த நிகழ்வுகளை நாம் பார்த்துள்ளோம். குறிப்பாக போக்குவரத்து காவலர்கள்! இந்த சம்பவங்கள் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டவை ஆகும். அபராதம் செலுத்த மறுத்த ஒரு சிலர் போக்குவரத்து காவலர்கள் மீது காரை மோதியுள்ளனர்.

இதனால் போக்குவரத்து காவலர்கள் நிலைதடுமாறி காரின் மீது விழ, அதன் டிரைவர்கள் காரை நிறுத்தாமல் அப்படியே ஓட்டி சென்றுள்ளனர். இதனால் போக்குவரத்து காவலர்கள் பல கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு காரின் பானெட் மீது தொங்கி கொண்டே பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த சம்பவத்தில், ஒரு காருடன் வைத்தே மனிதர்கள் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சியான விஷயம். மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள் சத்தம் போட்டு லாரியை நிறுத்தியதால், அவர்கள் காயங்கள் இன்றி உயிர் பிழைத்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு பின்னால் பயணம் செய்யும்போது, போதுமான இடைவெளி விட்டு பயணிப்பது நல்லது என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. கனரக வாகனங்கள் திடீரென பிரேக் பிடித்தாலும் கூட, உங்களுக்கும் பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்த போதுமான நேரம் இருக்கும். எனவே இடைவெளி விட்டு பயணம் செய்யுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 19, 2023, 17:18 [IST]
English summary
Hyundai santro dragged for 2 km viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+