லிட்டருக்கு 3 கிமீ கூட மைலேஜ் கிடைக்கல! ஹூண்டாய் கார் ஓனர் சொன்ன விஷயத்தை கேட்டதும் தூக்கி வாரி போட்றுச்சு!
முன்பெல்லாம் கார் வைத்திருப்பவர்களுக்கு சமூகத்தில் தனி அந்தஸ்து கிடைத்து வந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில், சொந்தமாக ஒரு கார் வைத்திருப்பது என்பது பெரும் தலைவலியாக மாறி கொண்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் பார்க்கிங் பிரச்னை ஆகியவைதான் இதற்கு மிக முக்கியமான காரணங்கள்.
சென்னை (Chennai) மற்றும் பெங்களூர் (Bangalore) போன்ற பெரு நகரங்கள் மட்டுமல்லாது, கோவை (Coimbatore), திருச்சி (Trichy) மற்றும் மதுரை (Madurai) போன்ற 2ம் கட்ட நகரங்களில் கூட தற்போது போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலைவிரித்தாடி வருகிறது. இங்கெல்லாம் காரில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று விட்டு வருவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது.

போக்குவரத்து நெரிசல் பிரச்னை காரணமாக கார்களில் மைலேஜ் (Mileage) குறைந்து, அது தனியாக மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இன்னும் சொல்லப்போனால் தற்போதெல்லாம் கார்களின் இன்ஜின்கள் அதிக மைலேஜ் வழங்க கூடிய வகையில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. அப்படி இருந்தும் மைலேஜ் குறைகிறது என்றால், அதற்கு போக்குவரத்து நெரிசல் பிரச்னை மிக முக்கியமான காரணம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இந்த சூழலில் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்ற பெங்களூர் நகரில் தற்போது அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) கார் உரிமையாளர் ஒருவருக்கு ஒரு லிட்டருக்கு வெறும் 2.8 கிலோ மீட்டர் மைலேஜ் மட்டுமே கிடைத்துள்ளது.

நாம் இங்கே பேசி கொண்டுள்ள ஹூண்டாய் வெனியூ காரின் உரிமையாளர் சம்பவத்தன்று கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வெறும் 2.9 கிலோ மீட்டர் தொலைவை கடப்பதற்கு அவருக்கு 52 நிமிடங்கள் ஆகியுள்ளது. அதாவது சுமார் 3 கிலோ மீட்டர் பயணம் செய்வதற்கு அவருக்கு 1 மணி நேரம் ஆகியுள்ளது.
போக்குவரத்து நெரிசல் இவ்வளவு மோசமாக இருந்த காரணத்தால், அந்த ஹூண்டாய் வெனியூ கார் ஒரு லிட்டருக்கு வெறும் 2.8 கிலோ மீட்டர் மைலேஜை மட்டுமே வழங்கியுள்ளது. காரின் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் புகைப்படத்தை வெளியிட்டு, பாதிக்கப்பட்ட நபர் தனது மன குமுறலை கொட்டியுள்ளார்.
இத்தனைக்கும் அந்த நபர் ஈக்கோ மோடில்தான் காரை ஓட்டியுள்ளார். ஹூண்டாய் வெனியூ காரில், நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மேலும் 2 ரைடிங் மோடுகள் இருக்கின்றன. இந்த ரைடிங் மோடுகளில் காரை ஓட்டியிருந்தால், மைலேஜ் இன்னும் கூட குறைந்திருக்கலாம். இந்த சம்பவம் அனைவரையும் கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இத்தனைக்கும் ஹூண்டாய் வெனியூ கார் ஓரளவிற்கு நல்ல மைலேஜ் கொடுக்க கூடியதுதான். ஹூண்டாய் வெனியூ காரில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) என 2 வகையான இன்ஜின் ஆப்ஷன்களும் இருக்கின்றன. இதில் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு சுமார் 18 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
மறுபக்கம் டீசல் இன்ஜினோ ஒரு லிட்டருக்கு சுமார் 23 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறுகின்றனர். நிலைமை இப்படி இருக்கும்போது, நாம் இங்கே பேசி கொண்டுள்ள ஹூண்டாய் வெனியூ கார் ஒரு லிட்டருக்கு 2.8 கிலோ மீட்டர் மைலேஜை மட்டும் வழங்கியிருப்பதற்கு மிக முக்கியமான காரணம், நிச்சயமாக போக்குவரத்து நெரிசல்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முடிந்த வரை பெரு நகரங்களில் டூவீலர்கள் அல்லது பஸ், மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவது நல்லது. கார் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்றால், முடிந்த வரை நிறைய பேர் ஒரே காரில் பயணம் செய்யும் வகையில் பார்த்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் தனி தனி கார்களில் சாலைக்கு வந்தால், போக்குவரத்து நெரிசல் பிரச்னை தவிர்க்க முடியாததாகி விடும். எனவே முடிந்த வரை டூவீலர் அல்லது பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். இது போக்குவரத்து நெரிசல் பிரச்னை மட்டுமின்றி, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பிரச்னைகளையும் கட்டுப்படுத்த உதவும்.


Click it and Unblock the Notifications








