புதுசா வாங்கிய காரின் நிறத்தால் மொத்த குடும்பமும் செம்ம ஷாக்!! ஹூண்டாயில் எந்த மாடல் கார் தெரியுமா இது?

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் கார்களிலேயே பார்ப்போரை உடனடியாக கவரக்கூடியது வெர்னா (Verna) ஆகும். அத்தகைய வெர்னா கார் ஒன்று மேலும் கண்ணை கவரக்கூடிய இளம் பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த வெர்னா கார் குறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் நான்காம் தலைமுறை வெர்னா காரை கடந்த 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. முந்தைய 3ஆம் தலைமுறை வெர்னா காரை காட்டிலும் மேம்படுத்தப்பட்டதாக கொண்டுவரப்பட்ட புதிய வெர்னா அதன் கூர்மையான எட்ஜ் டிசைனால் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

hyundai verna in neon green colour wrap

குறிப்பாக, புதிய வெர்னா கார் மிகவும் அட்வான்ஸான தோற்றத்தை கொண்டுள்ளதாக பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் சூழலில், யுடியூபர் ஒருவர் தனது புத்தம் புதிய ஹூண்டாய் வெர்னா காருக்கு கண்ணை பறிக்கக்கூடிய நியான் பச்சை நிற பெயிண்ட்டை வழங்கியுள்ளார். ஹிரென் அமின் என பெயர் கொண்ட இந்த நபர் தனது யுடியூப் சேனலில் தனது வெர்னா காருக்கு எவ்வாறு இந்த நியான் பச்சை நிற வ்ராப் கொடுக்கப்பட்டது என்பதை விரிவாக விளக்கும் வகையில் வீடியோவை காட்சிப்படுத்தி, பதிவிட்டுள்ளார்.

இந்த நபர் வெர்னா காரை வாங்கிய கையோடு இந்த வ்ராப் ஒட்டும் பணிகளை மேற்கொண்டுள்ளார். புதிய வெர்னா காரை வாங்கியுள்ளதாக ஏற்கனவே தனது குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்த ஹிரென் அமின் இத்தகைய பளிச்சிடும் நிறத்தில் காரை காட்டிய பின் அவர்களது ரியாக்‌ஷன் எவ்வாறு இருந்தது என்பதையும் காட்சிப்படுத்தி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

hyundai verna in neon green colour wrap

நியான் பச்சை நிற வ்ராப் ஆனது இந்த குறிப்பிட்ட ஹூண்டாய் வெர்னா காரின் பொனெட், முன் & பின் பம்பர்கள், பூட் லிட், ஃபெண்டர்கள் மற்றும் கதவு பேனல்களில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த இளம் பச்சை நிறத்திற்கு ஏற்ப காரின் மேற்கூரை, வெளிப்பக்க கதவு கைப்பிடிகள் மற்றும் ரியர் வியூ மிரர்கள் உள்ளிட்டவை கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. அதேநேரம், சிவப்பு நிறத்தை முன்பக்க பம்பரின் ஸ்கிர்ட்ஸ் பகுதியில் பார்க்கப்படுகிறது.

பொதுவாக செடான் கார்களை பெரும்பாலானோர் பளபளப்பான அடர் நிறத்திலேயே வாங்க விரும்புபவர். ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் கூட வெர்னா காருக்கு டார்க் ஷெட்களிலேயே அதிக பெயிண்ட் தேர்வுகளை வழங்குகிறது. இவ்வாறான நியான் பச்சை நிறத்தில் செடான் காரை விரும்புபவர்கள் மிகவும் குறைவே. நாம் இந்த செய்தியில் பார்க்கும் ஹிரென் அமின் அத்தகைய அரிதானவர்களுள் ஒருவராக இருக்கிறார்.

hyundai verna in neon green colour wrap

இந்தியா, வாகன மாடிஃபிகேஷன்களில் சமீப காலங்களில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. இருப்பினும் அந்த கடுமையான கட்டுப்பாடுகள் யாவும், வாகனங்களில் இயந்திர ரீதியாக மாற்றங்களை கொண்டுவரக்கூடாது என்பதற்காகவே உள்ளன. மற்றப்படி, காரின் நிறத்தை உரிமையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப மாற்றி கொள்ளலாம். குறிப்பிட்ட நபரையோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தினரையோ இழிவுப்படுத்துவது போல் இருக்க கூடாது அவ்வளவுதான்...

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சாலையில் தனது கார் மற்ற வாகனங்களில் இருந்து வித்தியாசப்பட்டு, தனித்து தெரிய வேண்டும் என விரும்புபவர்கள் இவ்வாறான நிறத்தில் வ்ராப்பை ஒட்டலாம். ஆனால் இவ்வாறான பிரத்யேக நியான் பச்சை நிற வ்ராப்பை காரில் ஒட்டுவதற்கு சற்று அதிக செலவாகும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 10, 2023, 21:31 [IST]
English summary
Hyundai verna car in neon green colour wrap
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X