விஜய் மாநாட்டில் காரை இழந்தவருக்கு அடிச்ச லக்! மத்த கட்சிக்காரங்க இதை பாத்து கத்துக்கணும்!

நடிகர் விஜய்யின் (Vijay) தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் (TVK - Tamilaga Vettri Kazhagam) மாநாடு, மதுரையில் (Madurai) கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி (நேற்று முன் தினம்) நடைபெற்றது. முன்னதாக மாநாட்டை முன்னிட்டு, 100 அடி கொடி கம்பம் நடுவதற்கு, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால் அந்த பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது துரதிருஷ்டவசமாக கொடி சம்பம் சரிந்து விழுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த டொயோட்டா இன்னோவா (Toyota Innova) கார் மீது கொடி கம்பம் விழுந்ததில், கார் சுக்குநூறாக நொறுங்கியது. அந்த வைரல் வீடியோ சமூக வலை தளங்களில் காட்டு தீ போல் பரவியது.

Dinesh Kumar

இது உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான கார் ஆகும். இந்த டொயோட்டா இன்னோவா கார்தான், தினேஷ் குமாரின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கார் நொறுங்கிய காரணத்தால், தினேஷ் குமார் கண் கலங்கி நின்றார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், தினேஷ் குமாருக்கு, நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் புதிய கார் ஒன்றை வாங்கி தர வேண்டும் என சமூக வலை தளங்களில் கருத்து தெரிவித்தனர். இந்த சூழலில், தினேஷ் குமாரின் காரை சொந்த செலவில் சரி செய்து தருவதற்கு விஜய் ரசிகர் ஒருவர் முன் வந்துள்ளார்.

Prince

அவரின் பெயர் பிரின்ஸ் என்பதாகும். கோவை (Coimbatore) உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த இவர், மெக்கானிக் ஷாப் வைத்துள்ளார். இவர் டொயோட்டா இன்னோவா காரை சரி செய்வதில் ஸ்பெஷலிஸ்ட் ஆவார். சிறு வயது முதலே விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வரும் இவர், விஜய் கட்சியின் மாநாட்டிற்கு வந்த ஒருவருக்கு இப்படி ஆகி விட்டதே என நினைத்து, தினேஷ் குமாரின் காரை முற்றிலும் இலவசமாக சரி செய்து தருவதற்கு முன் வந்துள்ளார்.

கொடி கம்பம் விழுந்ததில் டொயோட்டா இன்னோவா கார் சேதமடைந்த நிலையில், பிரின்ஸ் சமூக வலை தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், ''டொயோட்டா இன்னோவா காரை முற்றிலும் இலவசமாக சரி செய்து தருகிறேன்'' என பிரின்ஸ் பேசியிருந்தார். தற்போது அவரிடம் தந்தி டிவி பேட்டி ஒன்றை எடுத்துள்ளது.

அதில், பிரின்ஸ் கூறியிருப்பது பின்வருமாறு: நான் சிறு வயது முதலே விஜய் ரசிகன். விஜய் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அதனால் அந்த காரை சரி செய்து தர நான் முடிவு செய்துள்ளேன். நாங்கள் பழைய டொயோட்டா இன்னோவா காரை லேட்டஸ்ட் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காராக மாற்றி தந்து கொண்டுள்ளோம்.

நான் இந்த தொழிலில் உள்ளதால், டொயோட்டா இன்னோவா காரை என்னால் சரி செய்ய முடியும். எனவேதான் அதற்கான செலவை நான் ஏற்றுக்கொள்வதாக கூறி வீடியோ வெளியிட்டிருந்தேன். இவ்வாறு அவர் கூறினார். ஆனால் பாதிக்கப்பட்ட டொயோட்டா இன்னோவா காரை, பிரின்ஸ் இன்னும் பார்க்கவில்லை.

எனினும் வீடியோக்களில் பார்த்ததை அடிப்படையாக கொண்டு, அந்த டொயோட்டா இன்னோவா காரை சரி செய்ய சுமார் 3 லட்ச ரூபாய் செலவு ஆகும் என அவர் தந்தி டிவி-யின் பேட்டியில் தெரிவித்துள்ளார். அத்துடன் பணம் ஒரு பொருட்டு அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரின்ஸ் கூறுகையில், ''விஜய் அண்ணாவின் மாநாட்டிற்கு வந்தவருக்கு இப்படி ஒரு சூழ்நிலையா? என என் மனம் வருந்தியது.

இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகவே அந்த டொயோட்டா இன்னோவா காரை இலவசமாக சரி செய்து தருகிறேன் என உடனடியாக வீடியோ வெளியிட்டேன்'' என கூறினார். இதற்காக சமூக வலை தளங்களில் பிரின்சுக்கு நெட்டிசன்கள் தற்போது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் மற்ற கட்சியினர் இதை பார்த்து கற்று கொள்ள வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு கொண்டுள்ளனர்.

இதற்கிடையே மாநாட்டு திடலிலேயே தினேஷ் குமாருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகள் உறுதி அளித்திருப்பதாக பிரின்ஸிடம், அவரை பேட்டி எடுத்த நிருபர் தெரிவித்துள்ளார். எனவே வரக்கூடிய நாட்களில் அவருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புதிய கார் வாங்கி தரப்படுமா? அல்லது அதே கார் மறுசீரமைப்பு செய்து தரப்படுமா? என்பது தெரியும் எனவும் நிருபர் கூறியதை நம்மால் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தந்தி டிவி-யின் நிருபர் கூறியுள்ளதை வைத்து பார்க்கும்போது, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பிலேயே தினேஷ் குமாருக்கு உதவி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் அதுவரை காத்திருக்காமல் பிரின்ஸ் தாமாக முன்வந்து, அந்த டொயோட்டா இன்னோவா காரை சொந்த செலவில் சரி செய்து தருகிறேன் என கூறியிருப்பது பெரிய விஷயம்தான்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 23, 2025, 18:46 [IST]
English summary
I will fix damaged toyota innova in vijays madurai tvk conference coimbatore mechanic viral video
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+