போர் விமானத்தை தரையிறக்கும் வசதி கொண்ட இந்தியாவின் முதல் சாலை பற்றியத் தகவல்கள்!

டெல்லி அருகேயுள்ள, நொய்டாவிலிருந்து ஆக்ராவை இணைக்கும் யமுனா அதிவிரைவு சாலையில், இன்று காலை போர் விமானத்தை தரையிறக்கி வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.

இதன்மூலம், போர் விமானத்தை தரையிறக்கும் வசதி கொண்ட இந்தியாவின் முதல் பொது பயன்பாட்டு சாலை என்ற பெருமையை யமுனா எக்ஸ்பிரஸ் சாலை பெற்றிருக்கிறது. இதுகுறித்த ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பை ஸ்லைடரில் காணலாம்.

ஹை- வே ஸ்ட்ரிப்

ஹை- வே ஸ்ட்ரிப்

அவசர சமயங்களில் விமானப் படை தளங்கள் மற்றும் இதர விமான ஓடுபாதைகளில் போர் விமானத்தை தரையிறக்க முடியாத சூழல் ஏற்படும்பட்சத்தில், இதுபோன்று பொது பயன்பாட்டு சாலையை தற்காலிமாக ஓடுபாதையாக பயன்படுத்தி போர் விமானத்தை தரையிறக்கப்படும். இதற்காக, யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பல்வேறு சிறப்பு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனை ஆங்கிலத்தில் Highway Strip என்று குறிப்பிடுகின்றனர்.

ஓடுபாதை நீளம்

ஓடுபாதை நீளம்

சாதாரண பயன்பாட்டு சாலையில் சுமார் 2 கிமீ முதல் 3.5 கிமீ வரையிலான தூரத்தை ஹை- வே ஸ்ட்ரிப்பாக தேர்வு செய்து, அதனை விசேஷமாக கட்டமைக்க வேண்டியிருக்கும். இந்த ஹே- வே ஸ்ட்ரிப் பாதையில் இருபுறத்திலும் மின் கம்பங்கள், செல்போன் டவர்கள், பாலங்கள் உள்ளிட்ட எதுவும் இருக்கக்கூடாது.

அதுமட்டுமா..

அதுமட்டுமா..

போர் விமானத்தை தரையிறக்க வேண்டிய சாலை நேராக இருக்க வேண்டும் என்பதுடன், சரிவுகளும் இருக்கக்கூடாது. அந்த சாலையின் நிலம் மற்றும் அடித்தளம் நீரினால் பாதிக்கப்படாத வகையில், மிகவும் வலுவானதாக இருக்க வேண்டும். நடுவில் அமைக்கப்படும் தடுப்புகளை எளிதாக அகற்றும்படியும் இருக்க வேண்டும். குறைந்தது 24 மணிநேரத்திலிருந்து 48 மணிநேரத்திற்குள் அந்த பாதையை மாற்றுபடியான வசதிகளை கொண்டிருக்கும்.

செலவீனம்

செலவீனம்

யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் போர் விமானத்தை தரையிறக்குவதற்கான வசதியுடன் கட்டமைப்பதற்கு ரூ.13,000 கோடி செலவுபிடிக்கும். மேலும், போர் விமானங்களுக்கு தரையிறங்க ஏதுவாக விளக்குகள் மூலம் தற்காலிகமாக சமிக்ஞை கொடுக்கும் இடமும் உடனடியாக ஏற்படுத்தக்கூடிய வசதியுடன் யமுனா எக்ஸ்பிரஸ் வே மாற்றப்பட உள்ளது. இந்த செலவீனத்தை இந்திய விமானப்படை ஏற்கும்.

 விமானப்படையின் திட்டம்

விமானப்படையின் திட்டம்

போர் சமயங்களில் இதுபோன்ற ஹை- வே ஸ்ட்ரிப் கட்டமைப்பு கொண்ட சாலை, அத்தியாவசியமானதாக கருதப்படுகிறது. எனவே, இந்தியாவின் பல முக்கிய நெடுஞ்சாலைகளில் இதுபோன்று போர் விமானத்தை தரையிறக்குவதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போர்..

இரண்டாம் உலகப் போர்..

இரண்டாம் உலகப்போரிலிருந்தே இதுபோன்று பொது பயன்பாட்டுச் சாலையில், அவசரமாக போர் விமானங்களை தரையிறக்குவதற்கான கட்டமைப்பு வசதிகளை ஜெர்மனி ஏற்படுத்தியது. இதனை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பல உலக நாடுகள் இந்த திட்டத்தை செயல்படுத்தின. ஆனால், இப்போதுதான் இந்தியாவில் இந்த திட்டத்தை கெயிலெடுத்துள்ளனர்.

பாகிஸ்தான், சீனாவுக்கு பின்னர்...

பாகிஸ்தான், சீனாவுக்கு பின்னர்...

கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் இதுபோன்று பொது பயன்பாட்டு நெடுஞ்சாலையை போர் விமான ஓடுபாதையாக பயன்படுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக சோதனை நடத்தியது. இஸ்லாமாபாத்- லாகூர் எக்ஸ்பிரஸ் சாலையில் இரண்டு போர் விமானங்களை அந்த நாடு தரையிறக்கி சோதனை நடத்தியது. இதுதவிர, சீனா, வடகொரியா, ஸ்வீடன் போன்ற பல நாடுகள் இதுபோன்று பொது சாலைகளில் விமான ஓடுபாதைக்கு தகுந்தாற்போல் கட்டமைத்துள்ளன.

ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு

மதுரா மற்றும் ஆக்ரா போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரின் ஒத்துழைப்புடன் இன்று மிராஜ் 2000 விமானத்தை யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை செய்யப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

போக்குவரத்துக்கு தடை

போக்குவரத்துக்கு தடை

இன்று காலை 6.40 மணிக்கு மிராஜ் 2000 விமானம் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தரையிறக்கி சோதனை செய்யப்பட்டது. அப்போது, அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், சுற்றுலாப் பயணிகளும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்தனர்.

Photo credit: Sitanshu Kar/Twitter
@SpokespersonMoD
Principal Spokesperson, Ministry of Defence, Government of India

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The Indian Air Force has carried out a successful trial of landing a combat jet on a road runway.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X