பிரான்ஸிலிருந்து இந்தியா வரும் ரஃபேல் போர் விமானங்கள்... பயணம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்

இந்தியாவின் பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படும் ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த சில நாட்களில் இந்தியா வர இருக்கின்றன. இந்த விமானத்தின் வருகை இந்திய தேசத்தின் ஒவ்வொரு குடிமகனின் மனதிலும் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு ரஃபேல் போர் விமானம் மேற்கொள்ள இருக்கும் பயணம் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பிரான்ஸிலிருந்து இந்தியா வரும் ரஃபேல் போர் விமானங்கள்... பயணம் பற்றிய சுவாரஸ்யத் துளிகள்

எல்லையில் சீனா அத்துமீறி வரும் நிலையில், அதனை எதிர்ப்பதற்கு தகுதியான ஆயுதங்களில் ஒன்றாக பிரான்ஸிடம் இருந்து வாங்கப்படும் ரஃபேல் போர் விமானம் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. டஸ்ஸால்ட் ஏவியேஷன் தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்கள் தற்காலத்தில் அதிநவீன போர் விமாங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

பிரான்ஸிலிருந்து இந்தியா வரும் ரஃபேல் போர் விமானங்கள்... பயணம் பற்றிய சுவாரஸ்யத் துளிகள்

மொத்தம் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ரூ.58,000 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், முதல் தொகுப்பில் 4 முதல் 6 போர் விமானங்கள் வரும் 29ந் தேதி இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப் படை தளத்தில் முதல் தொகுப்பில் வரும் 6 ரஃபேல் போர் விமானங்களின் முதல் ரஃபேல் விமான படையணி அமைக்கப்பட உள்ளது.

பிரான்ஸிலிருந்து இந்தியா வரும் ரஃபேல் போர் விமானங்கள்... பயணம் பற்றிய சுவாரஸ்யத் துளிகள்

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானப் படை விமானிகளே இந்தியாவிற்கு இயக்கி வர இருக்கின்றனர். ஏற்கனவே, இவர்கள் பிரான்ஸ் நாட்டில் உள்ள டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் பயிற்சி விமானிகளின் உதவியுடன் முழுமையான பயிற்சி பெற்றுவிட்டனர்.

பிரான்ஸிலிருந்து இந்தியா வரும் ரஃபேல் போர் விமானங்கள்... பயணம் பற்றிய சுவாரஸ்யத் துளிகள்

ரஃபேல் போன்ற தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் போர் விமானங்கள் அதிக எரிபொருளை உறிஞ்சித் தள்ளும். இதனால், ஒருமுறை எரிபொருள் முழுமையாக நிரப்பும்போது அதன் பயணிக்கும் தூரம் குறைவாக இருக்கும். ஆயுதங்கள் தரிக்காமல் செல்லும்போது ரஃபேல் போர் விமானங்கள் அதிகபட்சமாக 3,700 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று டஸ்ஸால்ட் நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், ஆயுதங்கள் தரித்து வரும்போது இதன் ரேஞ்ச் வெகுவாக குறையும்.

பிரான்ஸிலிருந்து இந்தியா வரும் ரஃபேல் போர் விமானங்கள்... பயணம் பற்றிய சுவாரஸ்யத் துளிகள்

எனவே, பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு மிக நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளும்போது, எரிபொருளை சுமந்து செல்லும் விசேஷ டேங்கர் விமானங்கள் மூலமாக நடுவானிலேயே எரிபொருள் நிரப்பப்படும். அதாவது, எரிபொருள் குறைந்தால் பின்தொடர்ந்து வரும் டேங்கர் விமானத்தில் இருந்து உடனடியாக எரிபொருள் நிரப்பப்படும்.

பிரான்ஸிலிருந்து இந்தியா வரும் ரஃபேல் போர் விமானங்கள்... பயணம் பற்றிய சுவாரஸ்யத் துளிகள்

பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வரும் வழியில் ஐக்கிய அமீரகத்தின் அபுதாபி நகர் அருகே உள்ள அல் தாஃப்ரா விமானப் படை தளத்தில் ரஃபேல் விமானங்கள் தரை இறக்கப்பட்டு பின்னர் இந்தியா வர இருக்கின்றன. தொழில்நுட்ப பரிசோதனை, விமானிகளை மாற்றம் செய்வது மற்றும் விமானிகளின் ஓய்வு உள்ளிட்டவற்றிற்காக இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.

அம்பாலா விமானப் படை தளத்தில் வரும் 29ந் தேதி நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட உள்ளன. மேலும், சீனா அத்துமீறி வரும் லடாக் கிழக்குப் பகுதி பாதுகாப்புப் பணியில் ரஃபேல் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்படும்.

பிரான்ஸிலிருந்து இந்தியா வரும் ரஃபேல் போர் விமானங்கள்... பயணம் பற்றிய சுவாரஸ்யத் துளிகள்

ரஃபேல் போர் விமானத்தின் முதல் படையணி அம்பாலா தளத்தில் நிறுவப்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. கார்கில் போர் மற்றும் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பாலகோட் தாக்குதல்களில் அம்பாலா விமானப் படை தளம் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், டெல்லியில் இருந்து 220 கிமீ தூரத்தில் இருப்பதும், தலைநகர் பாதுகாப்பிலும் இந்த விமானப் படை தளம் கொள்கை ரீதியில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

பிரான்ஸிலிருந்து இந்தியா வரும் ரஃபேல் போர் விமானங்கள்... பயணம் பற்றிய சுவாரஸ்யத் துளிகள்

அம்பாலா விமானப் படை தளத்தில் முதல் ரஃபேல் படையணியும், மேற்கு வங்க மாநிலம், ஹசிமராவில் மற்றொரு ரஃபேல் போர் விமானங்கள் படையணியும் நிறுவப்பட உள்ளது. மொத்தம் வாங்கப்படும் 36 விமானங்களில் தலா 18 ரஃபேல் போர் விமானங்கள் இந்த இரண்டு விமானப் படைதளங்களிலும் நிறுத்தப்படும்.

பிரான்ஸிலிருந்து இந்தியா வரும் ரஃபேல் போர் விமானங்கள்... பயணம் பற்றிய சுவாரஸ்யத் துளிகள்

இரட்டை எஞ்சின் கொண்ட ரஃபேல் போர் விமானங்களை எதிரியின் இலக்கு மற்றும் சூழ்நிலைகளை பொறுத்து 780 கிமீ தூரம் முதல் 1,650 கிமீ தூரம் வரையில் தாக்குதல் பணிகளில் ஈடுபடுத்த முடியும். காஷ்மீர் உள்ளிட்ட கடும் குளிர் பிரதேசங்களில் இதனை இயக்க முடியும். அத்துடன், மலைப்பாங்கான பகுதிகளின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் மிகவும் திறன் வாய்ந்ததாக இருக்கும். வரும் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆர்டர் செய்யப்பட்டுள்ள அனைத்து ரஃபேல் போர் விமானங்களும் இந்தியா வந்துவிடும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 25, 2020, 17:30 [IST]
English summary
According to reports, IAF Pilots Will Be Flying The Rafale Fighter Jets From France To India
மேலும்... #ராணுவம் #military
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+