டாடா நிறுவனத்திற்குக் கிடைத்த மகுடம்... ராணுவ விமானத்தைக் கட்டமைக்க ஆர்டர் வந்தாச்சு...
இந்திய விமானப்படை தனக்குத் தேவையான விமானத்தை தாங்களே கட்டமைக்கும் ஆலையை அமைக்கப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தை அறிவித்தது. அதாவது இந்தியாவிற்குத் தேவையான விஷயங்களை வெளிநாடுகளிலிருந்து வாங்காமல் இந்தியாவிலேயே அதை உற்பத்தி செய்ய வைக்க இந்த திட்டம் வழி வகை செய்கிறது.

இந்திய ராணுவத்தில் விமானங்கள் எல்லாம் வெளி நாடுகளிலிருந்து வாங்கப்பட்டு வந்தது. போர் விமானங்கள், ராணுவத்தினரை ஏற்றிச் செல்லும் விமானங்கள் எல்லாம் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவிலேயே சொந்தமாக விமானங்களைத் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதையடுத்து குஜராத் மாநிலம் வதோதராவில் இந்தியா விமானப்படைக்காக விமானங்களைத் தயாரிக்க புதிய ஆலையைக் கட்டுவதற்காகப் பிரதமர் மோடி நாளை (அக். 30ம் தேதி) அடிக்கல் நாட்டுகிறார். இந்த ஆலையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானங்களுக்கான உதிரிப் பாகங்கள் வாங்கப்பட்டு அதைக் கொண்டு விமானங்கள் கட்டுமானம் செய்யப்படவுள்ளது.

முதற்கட்டமாக இந்த ஆலையில் C-295 MW விமானத்தைக் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 16 விமானங்கள் பறக்கும் கண்டிஷன் வரையிலும் இந்த ஆலையிலேயே கட்டமைக்கப்படும். இந்த விமானம் கட்டமைக்கும் பணிவரும் 2023 செப்டம்பர் மாதம் துவங்கி 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின்பு இந்த விமானம் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முற்றிலும் இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்ட இந்தியா ராணுவத்திற்கான முதல் "மேட் இன் இந்தியா" விமானம் தயாராகும்.

இந்த விமானம் மொத்தம் 5-10 டன் கொள்ளளவு கொண்டதாகவும், கண்டெம்பிரரி தொழிற்நுட்பத்துடன் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் தற்போது இந்திய ராணுவத்திடம் உள்ள அவ்ரோ விமானத்திற்கு மாற்றாக உருவாக்கப்படவுள்ளது. அவ்ரோ விமானங்கள் தனது ஆயுள் காலத்தை எட்டவிருக்கும் நிலையில் இந்த விமானங்களுக்கு மாற்றை உருவாக்க மத்திய அரசு இந்த திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

இந்த C-295 MW விமானம் ரியர் ரேம்ப் டோர் வசதி கொண்டதாக அமையவுள்ளது. இந்த டோர் வசதி உடனடியாக ரியாட் செய்ய உதவும், முக்கியமான ராணுவ வீரர்கள் பாரா டிராபிக் முறையில் தரையில் இறங்க இந்த வசதி உதவியாக இருக்கிறது. பொருட்களையும் பாரா டிராப்பிங் முறையில் கீழே இறக்கலாம்.

இது மட்டுமல்ல இந்த விமானம் டேக் ஆஃப் ஆகவும் லேண்ட் ஆகவும் சிறிய ரன் வே இருந்தாலே பொதுமானாது ஒரளவுவிற்கு விமானம் ஓடும் தளத்திலேயே எந்த பிரச்சனையும் இல்லாமல் இதைத் தரையிறக்கவும், டேக் ஆஃப் செய்யவும் முடியும்.

இந்த விமான கட்டுமானத்திற்கு இந்திய விமானப்படை டாடா கன்சல்டன்ஸி லிமிட்டெட் நிறுவனத்திற்குச் சொந்தமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் லிமிட்ட் நிறுவனத்தின் டாடா கன்சார்டியம் அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்திய ராணுவத்திற்கான கட்டுமானத்தில் தனியார் நிறுவனம் ஈடுபடுவது இதுவே முதல் முறை. தற்போது முதல் கட்டமாக 16 விமானங்களையும் மொத்தமாக 40 விமானங்களையும் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ரூ21,935 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானங்களுக்கான உதிரிப்பாகங்களை வாங்க ஸ்பெயின் நாட்டில் உள்ளது. ஏர்பஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி அந்நிறுவனத்திடம் 13400 தனித்தனி உதிரிப் பாகங்கள், 4600 பாதி கட்டமைக்கப்பட்ட பாகங்கள் மற்றும் 7 முக்கியமான கருவிகள் வாங்கப்படவுள்ளது. இதுபோக விமானத்தைக் கட்டமைக்கத் தேவையாகக் கருவிகள், குறிப்பிட்ட கருவி வேலை செய்கிறதா என டெஸ்ட் செய்யும் இயந்திரங்களையும் வாங்கவுள்ளனர்.

இந்த விமானத்திற்குத் தேவையான இன்ஜின் லேண்டிங் கியர், ஏவியானிக்ஸ், இடபிள்யூ சூட் ஆகியவற்றை ஏர்பஸ் நிறுவனமே வழங்குகிறது. இந்த உதிரிப்பாகங்களை வைத்து டாடா கன்சார்ட்டியம் நிறுவனம் இந்த விமானத்தைக் கட்டமைத்து டெஸ்ட் செய்யவுள்ளது. ஏற்கனவே சொன்னது போல 16 விமானங்கள் ராணுவ பயன்பாட்டிற்கும் அடுத்ததாகவுள்ள 40 விமானங்கள் சிவிலியன் பயன்பாட்டிற்கும் என மொத்தம் 56 விமானங்கள் தயாரிக்கப்படவுள்ளவர்.

இது போக இந்த விமானங்களில் அரசுக்குச் சொந்தமான பெல் நிறுவனம் தயாரித்த தயாரிப்புகள், மற்றும் எலெக்ட்ரானிக் வார்ஃபேர் சூட், ஆகிய இந்திய ராணுவத்திற்காகத் தயாரிக்கப்படும் விமானங்களில் பொருத்தப்படவுள்ளன. மீதம் உள்ள 40 விமானங்களை ஏர்பஸ் நிறுவனமே வேறு மற்ற விமான நிறுவனங்கள் கோரும் பட்சத்தில் அதை இந்திய அரசிடமிருந்து வாங்கி கொடுக்கும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த 40 விமானங்கள் சிவிலியன் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படைக்காகப் பிரதமர் மோடி இந்த விமான தயாரிப்பு ஆலையை அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சிவில் ஏவியேஷன் அமைச்சர் ஜோதிர்ஆதித்யா, குஜராத் மாநில முதல்வர் புபேந்திரபாய் படேல் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications








