ஐஏஎஸ் அதிகாரிக்கே இப்படி ஒரு நிலைமையா? விமான டிக்கெட்டை கேன்சல் செய்தவருக்கு பிச்சை காசுதான் ரீஃபண்ட் ஆச்சு!
ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ₹13820க்கு புக் செய்த விமான டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது அவருக்கு வெறும் ரூபாய் 20 தான் ரீஃபன்ட்டாக கிடைத்துள்ளது. இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து நகைச்சுவையான கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். விமான டிக்கெட் விலை கேன்சல் செய்யும் போது ஏன் குறைவான தொகையை ரீஃபன்ட்டாக கிடைக்கிறது? அதிக தொகை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? என விரிவாகக் காணலாம் வாருங்கள்.
ஐஏஎஸ் அதிகாரியான ராகுல் குமார் என்பவர் சமீபத்தில் விமான பயணம் செய்வதற்காக ஆன்லைன் மூலம் விமான டிக்கெட் ஒன்றை புக் செய்துள்ளார். அந்த டிக்கெட்டிற்காக அவர் ₹ 13,820 கட்டணமாகச் செலுத்தியுள்ளார். தவிர்க்க முடியாத சூழ்நிலையின் காரணமாக இவரால் விமான பயணம் செய்ய முடியவில்லை.

இதனால் முன்கூட்டியே தனது டிக்கெட்டை கேன்சல் செய்ய ஆன்லைனிலேயே அப்ளை செய்தார். ₹13,820 கொடுத்து டிக்கெட் வாங்கியவருக்கு கேன்சலேஷன் கட்டணம் போகப் பாக்கி தொகையாக வெறும் ₹20 மட்டுமே ரீஃபன்ட்டாக கிடைத்துள்ளது. இதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். கேன்சலேஷன் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக கருதினார்.
இது குறித்த ஸ்கிரீன் ஷாட்டை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார். அதன்படி ஏர்லைன் கேன்சலேஷன் கட்டணம் ₹11, 800, ஜிஐ கேன்சலேஷன் கட்டணம் ₹1200 ஜிஐ கன்வின்ஸ் ஃபீஸ் திருப்பி வழங்கப்படாததால் ₹800 ஆக மொத்தம் ₹13800 கழிக்கப்பட்டு ₹20 ரீஃபன்ட்டாக கிடைத்துள்ளது.

இதை அவர் பகிர்ந்து தனக்குக் கிடைத்த ரிஃபண்ட் பணத்தை நல்ல இடத்தில் முதலீடு செய்ய ஒரு ஐடியாவை தரும்படி கிண்டலாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பலர் இதற்குக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் கிண்டலாகவும் சிலர் ஏன் விமானத்தில் இவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பும் வகையிலும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
விமான டிக்கெட்டை கேன்சல் செய்வதால் அதிகப் பணம் பிடிக்கப்படும் பிரச்சினை இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கிறது. விமான டிக்கெட்களை கேன்சல் செய்யும் போது அதிகப் பணம் பிடிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. விமான பயணத்தை எக்காரணத்தைக் கொண்டும் மனிதர்கள் தவிர்க்கக் கூடாது என்பதைக் கருதி இதனை விமான நிறுவனங்கள் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
ரயில்களில் தொடர்ந்து பயணிப்பவர்களை நாம் பார்க்கும் போது அவர்கள் பயணம் செய்கிறார்களோ இல்லையோ அவர்கள் பயணம் செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கருதும் நாட்களில் எல்லாம் டிக்கெட் விலை புக் செய்து விடுவார்கள். அவர்கள் பயணம் செய்யவே முடியாது என்ற சூழ்நிலை ஏற்படும் போது டிக்கெட்டை கேன்சல் செய்து விடுவார்கள். பயணம் செய்யும் முடிந்தால் ரத்து செய்யாமல் பயணம் செய்தவர்கள்.
இதனால் இந்திய ரயில்வேக்கு பெரும் நஷ்டம் ஆகிறது. ஒருவர் பயணிப்பதாக புக் செய்த டிக்கெட் லாக் ஆகிவிடும் நிலையில் மற்ற பயணி இந்த டிக்கெட்டை புக் செய்ய முடியாது. இறுதியில் இவர் கேன்சல் செய்யும் போது மற்ற பயணிகள் இதை புக் செய்யாமல் போகக் கூட விட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்திய ரயில்வேக்கு பெரும் நஷ்டம் தான் ஏற்படும்.
இந்த நஷ்டத்தை ஈடு செய்ய இந்திய ரயில்வேயும் குறிப்பிட்ட தொகை பணத்தை கேன்சல் செய்யும் போது பிடித்தம் செய்கிறது. ஆனால் ரயில்களில் ஒருவர் கேன்சல் செய்த டிக்கெட்டை மற்றவர் புக் செய்ய அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் விமானங்களில் அப்படியான வாய்ப்புகள் மிகக்குறைவு தான். ஒருவர் விமானம் கிளம்பும் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே டிக்கெட்களை கேன்சல் செய்தாலும் அந்த டிக்கெட்டுகளை மற்றவர் வாங்க வருவார்களா என்பது சந்தேகம் தான்.
இதனால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தைத் தவிர்க்கப் பயணிகள் டிக்கெட்களை கேன்சல் செய்ய அதிகமான கட்டணத்தை வசூலிக்கின்றனர். பயணிகள் டிக்கெட்களை கேன்சல் செய்ய முயற்சித்தாலும் அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கணக்கிடும்போது அந்த டிக்கெட்டை கேன்சல் செய்யாமலேயே விட்டு விடலாம் என நினைக்கத் தோன்றும் அளவிற்கு கேன்சல் கட்டணம் இருக்கும்.
இதைத் தவிர்க்கவும் ஒரு சில வழிகள் உள்ளது. சில விமான நிறுவனங்கள் இப்படியாகப் பயணிகள் பயணிக்கலாமா இல்லையா என்ற சந்தேகம் இருக்கும்படியான பயணத்திட்டங்களுக்காக டிக்கெட் புக் செய்யும் போது அதில் கேன்சல் செய்யப்பட்டால் அதிக கட்டணம் வசூலிக்காமல் இருப்பதற்கான ஆப்ஷன் ஒன்று இருக்கிறது.
அந்த ஆப்ஷனை தேர்வு செய்வதன் மூலம் டிக்கெட் விலையுடன் உடன் சேர்த்துக் குறைவான பணத்தையும் அதிகமாகச் செலுத்த வேண்டும். அதைச் செலுத்தினால். நாம் டிக்கெட்டை கேன்சல் செய்யும் போது அதிகமான தொகை நமக்கு ரிட்டன் கிடைக்கும். இதற்காக டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாகக் கொஞ்சம் பணச்செலவு செய்ய வேண்டும்.
சில விமான நிறுவனங்கள் தங்கள் டிக்கெட் பெற்ற பயணிகளுக்குப் பயண தேதியை மாற்றும் ஆப்ஷனை வழங்கியுள்ளன. அதன்படி நீங்கள் குறிப்பிட்ட நாளில் பயணம் செய்யாமல் வேறு ஒரு நாளில் பயணம் செய்ய விரும்பினால் உங்கள் டிக்கெட்டை குறைவான கட்டணம் செலுத்தி வேறு ஒரு தேதி பயணத்தை மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் இது எல்லா விதமான விமானங்களிலும் கிடையாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விமான டிக்கெட்களை புக் செய்யும் போது நாம் உறுதியாகப் பயணம் செய்கிறோம் எனத் தெரிந்த பின்பு டிக்கெட் புக் செய்வதுதான் நல்லது. அதே நேரம் சந்தேகத்திற்குரிய பயணம் என்றால் கொஞ்சம் அதிகம் பணம் கொடுத்து விமான டிக்கெட் கேன்சல் செய்தால் அதிக தொகை வரும்படி அல்லது தேதியை மாற்றிக் கொள்ளும் ஆப்ஷனையோ தேர்வு செய்து புக் செய்து கொள்வது தான் புத்திசாலித்தனம்.


Click it and Unblock the Notifications








