அமைச்சர் வைத்துள்ள காரில் சுத்தனது அவங்களோட பொண்ணு, பையனா... ஹோட்டலுக்கு ஒன்னா வந்தப்ப சிக்கீட்டாங்க...
நடிகர், நடிகைகள் என்றாலே கிசுகிசுக்களுக்கு சற்றும் பஞ்சமிருக்காது. அந்த வகையில் பாலிவுட் (Bollywood) திரையுலகை ஒரு கிசுகிசு தற்போது வலம் வந்து கொண்டுள்ளது. இப்ராஹிம் அலி கானும் (Ibrahim Ali Khan), பலக் திவாரியும் (Palak Tiwari) காதலிக்கிறார்கள் என்பதுதான் அந்த கிசுகிசு.
இப்ராஹிம் அலி கான் இளம் நடிகர் ஆவார். மறுபக்கம் பலக் திவாரியும் இளம் நடிகைதான். நடிகர், நடிகை என்பதால் மட்டும் இவர்களது கிசுகிசு கவனம் பெறவில்லை. கூடவே இவர்கள் இருவரும் பிரபலமான மனிதர்களின் மகன், மகள் என்பதும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது.

நாம் இங்கே பேசி கொண்டுள்ள இப்ராஹிம் அலி கான், பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் (Saif Ali Khan) மகன் (Son) ஆவார். மறுபக்கம் பலக் திவாரி, பிரபல நடிகையான ஸ்வேதா திவாரியின் (Shweta Tiwari) மகள் (Daughter) ஆவார். இதன் காரணமாகவே இவர்களது நெருக்கம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இப்ராஹிம் அலி கானும், பலக் திவாரியும் டேட்டிங் (Dating) செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை நிரூபிப்பது போல், இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாகவே வந்து செல்கின்றனர். இந்த வரிசையில் ரெஸ்டாரென்ட் (Restaurant) ஒன்றுக்கு ஒன்றாக வந்தபோது, அவர்கள் இருவரும் கேமராவின் கண்களில் சிக்கியுள்ளனர்.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இவர்கள் இருவரும் ரெஸ்டாரென்டிற்கு வர பயன்படுத்தியது பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் (BMW iX) கார் ஆகும். இது எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்தது.
இந்த எலெக்ட்ரிக் காரில், 76.6 kWh பேட்டரி (Battery) பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 425 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் விலை, 1.21 கோடி ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-road Price) இன்னும் கூடுதலாக வரும். மிகவும் விலை உயர்ந்த காராக இருந்தாலும் கூட, பல்வேறு அதிநவீன வசதிகளை (Features) எல்லாம் இந்த எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.
இதில், 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், மெமரி மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள், பனரோமிக் க்ளாஸ் ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு எலெக்ட்ரிக் கார் ஆகும். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) கூட இந்த காரை வைத்துள்ளார். இதுதவிர ரித்தேஷ் தேஷ்முக் (Riteish Deshmukh) - ஜெனிலியா (Genelia) தம்பதியிடமும் கூட இந்த கார் உள்ளது.


Click it and Unblock the Notifications








