இவரோட அப்பா யார்னு ஊருக்கே தெரியும்... ஆனா அம்மா? உண்மையா அந்த நடிகைதான் இவரை பெத்தவங்களா!

இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கு (Mercedes Benz Cars) என மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டம் உள்ளது. குறிப்பாக மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் (Mercedes Benz EQS) கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இது ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் காரின் விலை 1.62 கோடி ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 1.66 கோடி ரூபாய் வரும்.

ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அது மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் 580 4மேட்டிக் (580 4Matic) ஆகும். இந்த காரில், 107.8 kWh திறன் கொண்ட பேட்டரி (Battery) வழங்கப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் (Range) 857 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ibrahim Ali Khan Spotted In Mercedes Benz EQS

அதாவது ஒரு முறை பேட்டரியை முழுமையாக நிரப்பினால், 857 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும். 200 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் வெறும் 30 நிமிடங்களில் பேட்டரியை 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.

இது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு கார் என்பதால் அதிநவீன வசதிகளுக்கு (Features) பஞ்சம் இல்லை. வசதிகளை பொறுத்தவரையில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 9 ஏர்பேக்குகள், 56 இன்ச் MBUX ஹைப்பர்ஸ்க்ரீன், ஆம்பியண்ட் லைட்டிங், மல்டி ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

Ibrahim Ali Khan

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் எலெக்ட்ரிக் காரை கோடீஸ்வரர்கள் தற்போது அதிகளவில் வாங்கி கொண்டுள்ளனர். இந்த வரிசையில் இப்ராஹிம் அலி கான் (Ibrahim Ali Khan) தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இப்ராஹிம் அலி கானை நடிகர் (Actor) மற்றும் சயீஃப் அலி கானின் (Saif Ali Khan) மகனாக மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால் இவர் பிரபலமான ஒரு நடிகையின் மகன் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் ஆகும். அதாவது சயீஃப் அலி கானின் முதல் மனைவியின் மகன்தான் இப்ராஹிம் அலி கான்.

சயீஃப் அலி கானை பற்றி யாருக்கும் அறிமுகமே தேவையில்லை. அவர் இந்தியா முழுக்க மிகவும் பிரபலமாக உள்ள நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் கடந்த 1991ம் ஆண்டு அம்ரிதா சிங்கை (Amrita Singh) திருமணம் செய்தார். இவர்கள் இருவருக்கும் பிறந்த மகன்தான் இப்ராஹிம் அலி கான்.

இதில் அம்ரிதா சிங்கும் ஒரு காலத்தில் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு நடிகைதான். குறிப்பாக 1980கள் மற்றும் 1990களில் அம்ரிதா சிங் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். ஆனால் கடந்த 2004ம் ஆண்டு, சயீஃப் அலி கான் - அம்ரிதா சிங் தம்பதியினர் விவாகரத்து பெற்றனர்.

இதற்கு பிறகுதான் மற்றொரு பிரபல நடிகையான கரீனா கபூரை (Kareena Kapoor), சயீஃப் அலி கான் திருமணம் செய்து கொண்டார். சயீஃப் அலி கான் - கரீனா கபூர் திருமணம் கடந்த 2012ம் ஆண்டில் நடைபெற்றது. சயீஃப் அலி கான் - கரீனா கபூர் ஆகிய இருவரின் சொத்து மதிப்பு (Net Worth) சுமார் 1,600 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ள இப்ராஹிம் அலி கான், வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவருக்கு தற்போது 23 வயதாகிறது. அவர் வாங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் காரானது, ஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி (Audi RS e-tron GT) மற்றும் போர்ஷே டைகன் (Porsche Taycan) போன்ற கார்களுக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 13, 2024, 14:24 [IST]
English summary
Ibrahim ali khan spotted in mercedes benz eqs electric car viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+