இந்தியாவிற்கு மீண்டும் கோப்பையை கொண்டு வந்த வீரர்களிடம் இவ்வளவு காஸ்ட்லி காரெல்லாம் இருக்குதா?

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதி போட்டி துபாயில் இந்திய அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையே சென்றது. இந்த போட்டி மிக பரபரப்பாக இருந்த நிலையில் இறுதியாக இந்திய அணி இறுதியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணியின் வீரர்கள் குறித்து தான் தற்போது இந்தியா முழுவதும் பேசி வருகின்றனர். இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களிடம் உள்ள காஸ்ட்லியான கார்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காஸ்ட்லியான கார்களில் ஒன்றான லாம்போர்கினி உரூஸ் (lamborghini urus) காரை சொந்தமாக வைத்துள்ளார். இந்த கார் கஸ்டமைஸ்டு கலரான ரோஸாலா (Roseola) என அழைக்கப்படும் செர்ரி ரெட் மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கிறது. இது ஒரு டுயல் டோன் ரக காராகும். இந்த கார் 4 லிட்டர் டுவின் டர்போ சார்ஜ்டு வி8 பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்குகிறது. இந்த கார் 850 என்எம் டார்க் திறனில் இயங்குகிறது.

Icc Champions Trophy

அடுத்தாக அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியிடம் ஆடி (Audi) நிறுவனத்திடம் ஆர்8 ரக கார் இருக்கிறது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 5.7 லிட்டர் வி10 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது இந்த காருக்கு 570 எச்பி பவரையும் 540 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுத்தாக ஹார்திக் பாண்டியாவை பொருத்தவரை லாம்போர்கினி ஹராகேன் இவோ (Lamborghini Huracan evo) என்ற காரை சொந்தமாக வைத்துள்ளார். இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 5.2 லிட்டர் வி 10 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 631எச்பி பவரையும் 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Icc Champions Trophy

அடுத்த வீரரான கேஎல் ராகுலை பொருத்தவரை இவரிடம் மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூபே (Mercedes AMG GLE 53 Coupe) ரக காரை சொந்தமாக வைத்துள்ளார். இந்த காரை பொருத்தவரை 3.0 லிட்டர் இன்லைன் 6 டர்போசார்ஜ்டு இன்ஜின் மூலம் இயங்குகிறது. இது 429 எச்பி பவரையும் 520 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஸ்லீக் கூபே வடிவ சொகுசு உட்கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் கடைசியில் 4 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்த ரவீந்திர ஜடேஜாவை பொருத்தவரை சொந்தமாக ஆடி க்யூ7 (Audi Q7) காரை சொந்தமாக வைத்துள்ளார். இ்நத காரின் இன்ஜினை பொருத்தவரை 3.0 லிட்டர் வி6 டிடிஐ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளுது. இந்த கார் சொகுசு கார்களில் ஒன்றாக விற்பனையாகிறது.

Icc Champions Trophy

அடுத்தாக இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் ஐயர் சமீபத்தில் தான் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி (Mercedes AMG) கார் ஒன்றை வைத்திருக்கிறார். இந்த கார் காஸ்ட்லியான காராக இருந்தாலும் இதை விட காஸ்ட்லியான லாம்போர்கினி ஹராகேன் (Lamborghini Huracan) காரும் இவருக்கு சொந்தமாக உள்ளது. இந்த கார் ரூ3.21 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பை போட்டியில் கடந்தாண்டு கோப்பையை கைப்பற்றிய நிலையில் தற்போது சாம்பியன்ஸ் கோப்பையையும் கைபற்றியுள்ளது. தற்போது இந்த அணியில் உள்ள வீரர்கள் குறித்து பலர் தேடி வரும் நிலையில் இந்த செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை தரும்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 9, 2025, 22:17 [IST]
English summary
Icc champions trophy indian cricket players car collection
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X