சென்னை மக்களை டார்கெட் செய்து தவிர்க்கும் ரயில்வே நிர்வாகம்! ஏசி பெட்டிகூட தரமாட்டாங்களாம்!
சென்னை ஐசிஎஃப் ஆலையில் சென்னை மாநகர பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் ரயிலில் ஏசி பெட்டிகள் பொருத்தப்பட்ட ரயில்கள் அடுத்த நிதியாண்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அடுத்த மாதம் இந்த பெட்டிகள் எல்லாம் வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் திடீரென காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த காலதாமதத்திற்கு காரணம் என்ன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னை ஐசிஎஃப் என்ற ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இதுவரை 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆடைகள் தான் தற்போது வந்தே பாரத் ரயில்களும் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தவிர இந்த ஆலையில் ஏசி எலெக்ட்ரிக் ரயில்களுக்கான பெட்டிகளும் தயாரிக்கப்படுகின்றன. இப்படியான ஏசி எலெக்ட்ரிக் ரயில்கள் எல்லாம் மும்பைக்கு ஏற்கனவே தயாரித்து அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் தெற்கு ரயில்வேக்காக 2 ஏசி எலெக்ட்ரிக் ரயில்களை தயாரிக்கும் ஆர்டரை ஐசிஎஃப் நிர்வாகம் பெற்றுள்ளது. இந்த ஆர்டர்ருக்கான பணிகள் விரைவில் துவங்கப்பட்டு வரும் டிசம்பர் மாதம் ஏசி ரயில் பெட்டிகள் எல்லாம் சென்னை எலெக்ட்ரிக் ரயில் பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்படும் என கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த பணியில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளதாக சென்னை ஐசிஎஃப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் மும்பை ரயில்வே கூட்டத்திற்கு நான்கு ஏசி எலெக்ட்ரிக் ரயில்களை தயாரிப்பதற்கான ஆர்டர் வந்துள்ளது. அதில் ஒரு ஏசி ரயில் மட்டும் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மூன்று ஏசி ரயில் தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎஃப் ஆலையில் நடந்து வருகிறது. இந்த பணி முடிந்த பிறகு தான் சென்னை எலெக்ட்ரிக் ரயிலுக்கான ஏசி பெட்டிகள் தயாரிக்கும் பணி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நிதியாண்டில் தான் சென்னைக்கான ஏசி பெட்டிகள் தயாரிக்கப்பட்டு அதை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மக்கள் பல தினமும் எலெக்ட்ரிக் ரயிலை பயன்படுத்தி வரும் நிலையில் ஏசி வசதி கொண்ட எலெக்ட்ரிக் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டால் அது நிச்சயம் மிகப்பெரிய வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு இந்த பெட்டிகளில் ஏகப்பட்ட வசதிகளும் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஐசிஎஃப் ஆலையில் சென்னை எலெக்ட்ரிக் ரயிலுக்காக உருவாக்கப்படும் ஏசி பெட்டிகளில் வந்தே பாரத் ரயில் போல ரயிலில் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரை மக்களால் பயணம் செய்து கொள்ள முடியும். இதனால் ரயிலில் எந்த பகுதியில் ஏறினாலும் எந்த பகுதிக்கும் செல்லக்கூடிய வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்படுகிறது.
இந்த ரயில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் வந்தே பாரத் ரயில் போல தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் ரயில்களில் தொங்கிக் கொண்டே பயணம் செய்வது என்பது முடியாத காரியமாகும். ரயிலில் அனைத்து கதவுகளும் மூடினால் மட்டுமே ரயில் தொடர்ந்து பயணிக்க முடியும்.
மேலும் இந்த ரயில்களில் ஜிபிஎஸ் அளப்பிடியிலான தகவல் வசதிகளும் அறிவிப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் எந்த பகுதியில் சென்று கொண்டிருக்கிறது என்ற தகவலை ரியல் டைமில் ரயில் உள்ள பயணிகள் பார்த்துக் கொள்ள முடியும். ரயிலில் உள்ள பயணிகளின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் இந்த சிசிடிவி கேமராக்கள் இடம் பெறுகிறது.
இவ்வளவு வசதி கொண்ட இந்த ஏசி வசதி கொண்ட எலெக்ட்ரிக் ரயில் சென்னையில் பயன்பாட்டிற்கு வருவது தற்போது காலதாமதமாகி உள்ளது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ரயிலுக்காக நீண்ட நாட்களாக மக்கள் காத்திருந்த நிலையில் தற்போது இந்த ரயில் வருவது காலதாமதம் ஆகும் என்பதால் பலர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். 202ம் ஆண்டு முதல் பாதியிலேயே இந்த ரயில் பயன்பாட்டிற்கு வந்தால் நிச்சயம் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் உள்ள எலெக்ட்ரிக் ரயிலை நம்பி ஏகப்பட்ட மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். பலர் அலுவலகத்திற்கு செல்வதற்கு கூட இந்த ரயிலைதான் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது இதில் ஏசி வசதி கொண்ட ரயில்கள் அறிமுகமானால் நிச்சய மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் தொடர்ந்து அனைத்து ரயிலையும் ஏசி ரயிலாக மாற்றுவதற்கு கூட வாய்ப்புகள் ஏற்படும்.


Click it and Unblock the Notifications








