டிரெயின் 19... படுக்கை வசதியுடன் உருவாகும் இந்தியாவின் அதிவேக ரயில்!

சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட டிரெயின் 18 அதிவேக ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் அதிவேக ரயில் என்ற பெருமையை பெற்றிருக்கும் டிரெயின் 18 ரயில் சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 180 கிமீ வேகத்தை தொட்டு அசத்தியது.

டிரெயின் 19... படுக்கை வசதியுடன் உருவாகும் இந்தியாவின் அதிவேக ரயில்!

தற்போது டெல்லி- வாரணாசி இடையில் இயக்கப்படும் இந்த ரயில் வணிக ரீதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட பகுதிகளில் மணிக்கு 160 கிமீ வேகம் வரை இயக்கப்படுகிறது. இரு நகரங்களுக்கும் இடையிலான 758 கிமீ தூரத்தை 8 மணிநேரத்தில் கடக்கிறது.

டிரெயின் 19... படுக்கை வசதியுடன் உருவாகும் இந்தியாவின் அதிவேக ரயில்!

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வெறும் 18 மாதங்களில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த ரயில் ரூ.100 கோடி மதிப்பில் தயாரிக்கப்படுகிறது. இந்த ரயிலில் இரண்டு வகுப்பு கட்டணத்துடன் இருக்கைகள் கொண்டுள்ளது.

டிரெயின் 19... படுக்கை வசதியுடன் உருவாகும் இந்தியாவின் அதிவேக ரயில்!

இந்த நிலையில், டிரெயின் 18 ரயிலின் அடிப்படையில் புதிய டிரெயின் 19 என்ற குறியீட்டுப் பெயரில் புதிய ரயில் தயாரிக்கப்பட இருக்கிறது. இது படுக்கை வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட இருக்கிறது. இதனை, ரயில்வே துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

டிரெயின் 19... படுக்கை வசதியுடன் உருவாகும் இந்தியாவின் அதிவேக ரயில்!

படுக்கை வசதியுடன் கூடிய டிரெயின் 19 ரயில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றாக, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. டிரெயின் 19 ரயிலிலும் ரயில் பெட்டியிலேயே கேபின் மற்றும் ரயில் பெட்டிகளிலேயே மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கும். அதாவது, தனி எஞ்சின் தேவைப்படாது.

டிரெயின் 19... படுக்கை வசதியுடன் உருவாகும் இந்தியாவின் அதிவேக ரயில்!

இதனால், மிக விரைவான பிக்கப்பையும், பிற ரயில்களை விட துரிதமாகவும், குறைந்த தூரத்தில் நிறுத்துவதற்கான வாய்ப்பையும் இந்த ரயில் வழங்கும். இதனால், தனி எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில்களைவிட இந்த ரயிலின் பயண நேரம் 15 சதவீதம் வரை குறையும்.

டிரெயின் 19... படுக்கை வசதியுடன் உருவாகும் இந்தியாவின் அதிவேக ரயில்!

தனி மின்சார எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த ரயில் மின் சேமிப்பிலும் சிறப்பானதாக இருக்கும். மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகளும், அதிக பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டிருக்கும். இந்த ரயிலில் சவுகரியமான படுக்கைகள், சிசிடிவி கேமரா, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கும்.

டிரெயின் 19... படுக்கை வசதியுடன் உருவாகும் இந்தியாவின் அதிவேக ரயில்!

ராஜ்தானி ரயில்களின் சவுகரியத்தை இந்த ரயில்கள் ஒருபடி மேலே கொண்டு செல்லும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட இருக்கிறது. டிரெயின்- 18 ரயில் போன்றே, டிரெயின் 19 ரயில் மூலமாக பயண நேரம் வெகுவாக குறையும் வாய்ப்பு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 6, 2019, 12:20 [IST]
English summary
After successfully developing Train 18, now named Vande Bharat Express, the Integral Coach Factory (ICF) in Chennai, has now decided to take up the design, development and production of Train 19, a sleeper version of Train 18.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+