வந்தே பாரத், மெட்ரோ ரயிலுக்கு சவால் விடும் வசதிகளுடன் ஐசிஎஃப்-ல் தயாரான ஏசி டிரெயின்! இந்த ஜாக்பாட் சென்னைக்கா

வந்தே பாரத் மற்றும் சென்னை மெட்ரோ ரயில்களுக்கு சவால் விடும் வகையில் லோக்கல் இஎம்யூ ரயில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஏசி வசதி மற்றும் பல அட்வான்ஸ்டு வசதிகளுடன் இந்த ரயில் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையிலேயே இந்த ரயில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. தென் இந்தியாவில் தயார் செய்யப்படும் முதல் ஏசி வசதிக் கொண்ட லோக்கல் இஎம்யூ ரயில் இதுவே ஆகும்.

இப்போதைய நிலவரப்படி லோக்கல் இஎம்யூ ரயில் ஏசி வசதியுடன் மேற்கு ரயில்வேஸில் மட்டுமே இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மும்பையில்தான் அது இயங்கி வருகின்றது. இப்போது ஐசிஎஃப்-இல் தயார் செய்யப்பட்டு இருக்கும் இந்த ரயில் சென்னை பீச் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் என கூறப்படுகின்றது.

First ac emu train unveiled in south india

எனவே தென் இந்தியாவிலேயே ஏசி வசதிக் கொண்ட லோக்கல் இஎம்யூ ரயிலை பெறும் முதல் வழித் தடமாக சென்னை பீச் - செங்கல்பட்டு வழித் தடம் அமைய இருக்கின்றது. இந்த புதிய ஏசி வசதிக் கொண்ட லோக்கல் ரயில் 12 கோச்சுகளைக் கொண்டிருக்கும்.

சுமார் 1,116 பேர் அமர்ந்துக் கொண்டும், 3,798 பேர் நின்றவாறும் இதில் பயணிக்க முடியுமாம். ஆகையால், ஓர் மெட்ரோ ரயிலில் பயணிப்பதைக் காட்டிலும் அதிக பயணிகளால் இந்த ரயிலில் பயணிக்க முடியும் என தெரிகின்றது. ஏசி வசதிக் கொண்ட லோக்கல் இஎம்யூ ரயில் இந்தியாவில் 2017 ஆம் ஆண்டில் இருந்தே பயன்பாட்டில் இருக்கின்றது.

First ac emu train led sign board

மும்பையிலேயே முதல் ஏசி லோக்கல் இஎம்யூ ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையிலேயே இப்போது முதல் முறையாக தென்னிந்தியாவில் ஏசி இஎம்யூ ரயில்கள் அறிமுகம் செய்வதற்கான பணிகள் தொடங்கி இருக்கின்றன. இன்னும் ஒரு சில நாட்கள் அல்லது வாரங்களில் இந்த ரயில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என கூறப்படுகின்றது.

இந்த ரயில் மணிக்கு அதிகபட்சமாக 110 கிமீ வேகத்தில் இயங்குமாம். இந்த ரயிலை புதிய தலைமுறை போகிக்களைக் கொண்டு தயார் செய்திருப்பதாக ஐசிஎஃப் தெரிவித்திருக்கின்றது. வழக்கமான இஎம்யூ ரயில்களைக் காட்டிலும் அதிக சௌகரியமான டிராவல் அனுபவத்தை வழங்க வேண்டும் என்கிற நோக்கிலேயே புதிய தலைமுறை போகிக்கள் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

First ac emu train seat

Source: TOI மிக முக்கியமாக அலுங்கள், குலுங்கள் மற்றும் அதிர்வுகள் இல்லா பயணம் இதில் கிடைக்கும் வகையிலேயே ஐசிஎஃப் தயார் செய்திருக்கின்றது. இதற்காக ஏர் ஸ்பிரிங் வகை சஸ்பென்ஷன் ரயில் பெட்டிகளின் அடியில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகளையும் ஐசிஎஃப் வழங்கி இருக்கின்றது.

இது பாதுகாப்பான நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமாதிரியான அம்சங்களை வந்தே பாரத் ரயிலிலும் காண முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், பயணிகளுக்கு தகவலை வழங்கும் விதமாக ஜிபிஎஸ் அடிப்படையிலான எல்இடி லைட்டுகள், அடுத்து வரும் நிறுத்தம் பற்றிய அறிவிப்பை வழங்கும் வசதி, ஓட்டுநருடன் உரையாடுவதற்கான டாக்-பேக் வசதி மற்றும் சிசிடிவி கேமிராக்கள் உள்ளிட்டவையும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

இதுமட்டுமல்ல இந்த ரயிலின் உட்பக்கத்தை மிகவும் பிரீமியமானதாக ஐசிஎஃப் தயார் செய்திருக்கின்றது. இருக்கைகள் மிகவும் மிருதுவானதாகவும், நீளமானதாகவும் உள்ளன. ஆகையால், சொகுசான டிராவல் அனுபவம் இந்த ரயிலில் நிச்சயம் கிடைக்கும். இதேபோல், பெரிய ஜன்னல்களையும் இது கொண்டிருக்கின்றது. ஆகையால், வெளிப்புறத்தை ரசிப்பதிலும் எந்த தடையும் இருக்காது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் மற்றும் சென்னை மெட்ரோ ரயில்களில் காணப்படுவதைப் போலவே இந்த ரயிலிலும் தானாக திறந்து மூடக் கூடிய டோர்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆகையால், பயணிகளுக்கு பாதுகாப்பான பயணமும் இந்த ரயிலில் உறுதியாகி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், வந்தே பாரத் மற்றும் சென்னை மெட்ரோ ரயில்களுக்கே சவால் விடும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 13, 2025, 18:15 [IST]
English summary
Icf unveils south india s first air conditioned emu train for southern railway
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X