வேவு பார்க்க மட்டுமல்ல உயிர்களை காப்பாற்றவும் இனி ட்ரோன்கள் பயன்படும்... ஐசிஎம்ஆரின் அதிரடி மூவ்..
ட்ரான்கள் மருத்துவ உலகில் மிகப் பெரிய சாதனையைப் படைக்க இருக்கின்றன. எதிர்காலத்தில் பறக்கும் டாக்சிகள் ஆம்புலன்ஸ்களாக பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதுபோன்ற தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில், இந்தியாவில் விரைவில் ட்ரான்கள் அவசர மருத்து தேவைகளுக்கு பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரத்தங்களை உரிய இடத்தில் டெலிவரி செய்யும் வாகனங்களாகவே ட்ரான்கள் இந்தியாவில் பயன்படுத்தப்பட இருக்கின்றன. சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research), ஐ-ட்ரான் (iDrone initiative) எனும் திட்டத்தின்கீழ் ட்ரோன் (Drone)-கள் வாயிலாக ரத்தங்களை வேறு இடங்களுக்கு டெலிவரி கொடுக்கும் முயற்சியை சோதனையோட்டமாக செய்தது.

அதில் தற்போது ஐசிஎம்ஆர் வெற்றியும் கண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே விரைவில் இந்த திட்டத்தை நாடு முழுவதிற்கும் விரிவுப்படுத்த இருப்பதாக இந்தியன் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து இருக்கின்றது. ஆகையால், விரைவில் ட்ரோன்கள் வாயிலாக ரத்தங்கள் டெலிவரி செய்யும் சேவை நாடு முழுவதும் கூடிய சீக்கிரமே தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போதைய நிலவரப்படி ஆம்புலன்ஸ்கள் அல்லது பிற வாகனங்கள் வாயிலாகவே ரத்தங்கள் டெலிவரிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவையில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதாக புகார்கள் எழும்பிய வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையைப் போக்கும் பொருட்டே விரைவில் ரத்தங்களை டெலிவரி செய்ய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

ட்ரோன்கள் வாயிலாக ரத்தங்களை உரிய நேரத்தில் எந்த தடையும் இன்றி நாட்டின் எந்த மூலைக்கும் டெலிவரி கொடுக்க முடியும். அடர்ந்து காடுகள், வாகனங்கள் பயணிக்க போதிய பாதை வசதி இல்லாத பகுதிகளுக்கும் ட்ரோன்களால் பயணிக்க முடியும். எனவேதான் ட்ரோன்கள் ரத்த டெலிவரி சேவையில் உட்படுத்தப்பட இருக்கின்றன.
இதனை இந்திய மருத்துவ கவுன்சிலின் மூத்த அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தி உள்ளார். முன்னதாக இந்த ஐ-ட்ரோன்கள் கோவிட் தடுப்பூசியை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்க பயன்படுத்தப்பட்டன. தொடர்பில்லா டெலிவரி சேவையை வழங்க இந்த முறை கையாளப்பட்டது. இந்த நிலையிலேயே ரத்தங்களை டெலிவரி செய்வதற்கும் ஐ-ட்ரோன்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
ட்ரோன்களில் எடுத்துச் செல்வதனால் ரத்தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என அஞ்ச வேண்டாம். ஏனெனில், ரத்தங்களை பத்திரமாக எடுத்துச் செல்வதற்கு ஏற்ப அமைப்பு அந்த ட்ரோனில் வழங்கப்பட்டிருக்கும். அது அதிக வெயில் உள்ளிட்டவற்றில் இருந்து ரத்தத்தை பாதுகாக்கும். ஆகையால், ட்ரோன்கள் எடுத்து செல்லும் ரத்தத்தின் தரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
குறிப்பாக, ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்படும் ரத்தங்களைப் போலவே ட்ரோனில் அனுப்பி வைக்கப்படும் ரத்தமும் பாதிப்பு மற்றும் மாற்றமும் இன்றி டெலிவரி செய்யப்படும். அதேவேளையில், ஆம்புலன்ஸைக் காட்டிலும் அதிக வேகத்தில் ட்ரோன்கள் உரிய இடத்தில் சென்று சேர்ந்துவிடும். இந்த நிலையிலேயே நாடு முழுவதும் ட்ரோன்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் ஐசிஎம்ஆர் களமிறங்கி இருக்கின்றது.
உலக நாடுகள் சில இதே ட்ரோன்களைப் பயன்படுத்தி தங்களின் விவசாய பணிகளை எளிமையாக்கி வருகின்றன. உரம், யூரியா பாய்ச்சுதல் என பல்வேறு முக்கிய பணிகளுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர பாதுகாப்பு மற்றும் வேவு பார்க்கும் பணிகளிலும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே இந்தியா மருத்துவ சேவையில் ட்ரோன்களை உட்படுத்தும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. அதேநேரத்தில் கானா மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் ஏற்கனவே ட்ரோன்களை தங்களுடைய மருத்துவ சேவையில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இரத்தம், தடுப்பூசி, மருந்துகள், மருத்துவப் பொருட்கள் போன்றவற்றை உரிய எடுத்துச் செல்ல ட்ரோன்களை அந்த நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
இதுதவிர, தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகளை தொலைதூரங்களுக்கு அனுப்பி வைத்தல் மற்றும் பரிசோதனைக்கு தேவையான மாதிரிகளை (ரத்தம், யூரின் உள்ளிட்டவற்ற) சேகரிக்க மற்றும் லேப்பிற்கு அனுப்பி வைக்கவும் ட்ரோன்கள் உலக நாடுகள் சிலவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக விரைவில் மருத்துவ உலகில் ட்ரோன்கள் பெரும் புரட்சியை செய்ய இருப்பது தெளிவாக தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ட்ரோன் வகை வாகனங்கள் விரைவில் பறக்கும் டாக்சிகளாகவும் இந்த உலகில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. இதற்கான முயற்சியில் உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே உலக நாடுகள் சிலவற்றில் பறக்கும் கார்கள் சோதனையோட்டம்கூட தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








