விலங்குகளின் பெயர்களில் கார்கள் - ஓர் சுவாரஸ்ய தொகுப்பு

கார்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை முதலில் கார் நிறுவனங்களின் முதலாளிகள், தலைமையகத்தை அடிப்படையாகக் கொண்டு பெயரிடும் நடைமுறை துவங்கியது. காலப் போக்கில் போட்டியும், கார் மாடல்களின் எண்ணிக்கையும் அதிகமானபோது தங்களது தயாரிப்பை முன்னிறுத்தும் விதத்தில் விலங்குகளை உவமைப்படுத்தி பெயர் வைக்கும் நடைமுறை துவங்கியது.

இது வாடிக்கையாளர்களை ஈர்த்ததோடு, கார்களின் சிறப்பம்சங்களை சிம்பாலிக்காக எடுத்துரைக்கும் விதத்தில் கையாளப்பட்டன. அதுபோன்று விலங்குகளின் பெயர்களில் பெயர் வைக்கப்பட்ட கார் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

செவர்லே இம்பாலா கூபே

செவர்லே இம்பாலா கூபே

1965ம் ஆண்டுகளில் பிரபலமான கார் மாடல்தான் செவர்லே இம்பாலா கூபே. இந்த காரின் அழகை உணர்த்தும் வகையில், தென் ஆப்ரிக்காவில் அதிக அளவில் காணப்படும் இம்பாலா மான் இனத்தின் பெயரை தழுவி இந்த காருக்கு இம்பாலா என பெயரிடப்பட்டது. அப்போது, காஸ்ட்லியான கார் என்ற பெருமையுடன் வலம் வந்தது.

ஜாகுவார் இ - டைப்

ஜாகுவார் இ - டைப்

ஜாகுவார் இ - டைப் கார் உலக அளவில் ரசிகர்களால் போற்றப்படும் கார் மாடல். டிசைன், பெர்ஃபார்மென்ஸ் என அனைத்து விதத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்த இந்த காரை இங்கிலாந்தை சேர்ந்த மால்கம் சேயர் என்ற டிசைனர் 1960ம் ஆண்டில் வடிவமைத்தார். இந்த காரின் தோற்றத்தையும், சக்தியையும் எளிதாக எடுத்துக்காட்டும் வகையில் ஜாகுவார் (சிறுத்தை) என பெயரிட்டப்பட்டது.

 ஃபோர்டு மஸ்டாங்

ஃபோர்டு மஸ்டாங்

வட அமெரிக்காவின் மேற்கு பகுதியில் காணப்படும் குதிரைகளின் பெயர்தான் மஸ்டாங். சுதந்திரத்தை பொருள்படுத்தும் விதமாக இந்த காருக்கு மஸ்டாங் என்று பெயரிட்டது ஃபோர்டு. 1964ம் ஆண்டில் அறிமுகமான இந்த காருக்கு தற்போது உலக அளவில் பெரும் ரசிக பட்டாளம் இருக்கிறது.

சன்பீம் டைகர்

சன்பீம் டைகர்

இங்கிலாந்தை சேர்ந்த சன்பீம் கார் நிறுவனம் தனது அதிக சக்திவாய்ந்த கன்வெர்ட்டிபிள் கார்களுக்கு டைகர் பெயரை சேர்த்து வைத்தது. தனது கார்களின் பராக்கிரமத்தை உணர்த்தும் விதத்தில் அவ்வாறு பெயர் வைத்தது. இந்த இங்கிலாந்து நிறுவனத்தின் டைகர் பிராண்டில் வெளிவந்த கார்களை பிரபல அமெரிக்க கார் டிசைனர் காரோல் ஷெல்பிதான் வடிவமைத்தவர்.

ஃபோக்ஸ்வேகன் பீட்டில்

ஃபோக்ஸ்வேகன் பீட்டில்

எத்தனை தலைமுறை கண்டாலும் பீட்டில் காரின் டிசைனுக்கு தனி மதிப்பு கொண்டிருக்கிறது. வண்டு போன்ற வடிவமைப்பை கொண்டிருந்ததால், இந்த நாமகரணத்தை சூட்டிக் கொண்டது. இந்த காரின் அடிப்படை டிசைனை தழுவி வெளிவந்த மற்றொரு கார்தான் போர்ஷே 911 ஸ்போர்ட்ஸ் கார் என்பது கொசுறு தகவல்.

 டோட்ஜ் சூப்பர் பீ

டோட்ஜ் சூப்பர் பீ

1960களில் கலக்கிய டோட்ஜ் பீ கார் லிமிடேட் எடிசனாக வெளியிடப்பட்டது. டோட்ச் கரோனெட் மற்றும் பிளைமோத் ரோடு ரன்னர் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. வண்டு போல் பறந்து செல்லும் உணர்வை ஏற்படுத்தும் விதத்தில் இந்த பீ என்ற பெயர் சேர்க்கப்பட்டது. 2007ம் ஆண்டு முதல் சூப்பர் பீ என்ற பெயரில் டோட்ஜ் சார்ஜர் லிமிடேட் எடிசன் கார்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

பிளைமோத் கார்

பிளைமோத் கார்

மிக பிரபலமான பிளைமோத் காருக்கு பராகுடா என்ற மீனின் பெயர்தான் வைக்கப்பட்டது. மிக நீளமான அந்த மீன் போன்ற டிசைன் கொண்டிருந்ததால், அந்த பெயர் வைக்கப்பட்டது. பராகுடா மீன் 6.9 அடி நீளம் வரை வளரும்.

செவர்லே கார்வெட் ஸ்டிங்ரே

செவர்லே கார்வெட் ஸ்டிங்ரே

அமெரிக்காவின் பிரபல ஸ்போர்ட்ஸ் காராக உருவெடுத்திருக்கும் செவர்லே கார்வெட் ஸ்டிங்ரேவுக்கு அதன் ஏரோடைனமிக் பாடி லைன்கள் அடிப்படையில் ஸ்டிங்ரே என்ற திருக்கை மீனின் பெயர் சேர்க்கப்பட்டது. காரின் முகப்பில் திருக்கை மீன் உருவமும் சின்னமாக பொறிக்கப்பட்டிருக்கிறது.

ஏசி கோப்ரா

ஏசி கோப்ரா

கோப்ரா என்ற பாம்பு பெயர் பல்வேறு ஃபோர்டு கார்களின் பெயர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களுக்கு சீறிச் செல்வதை குறிக்கும் வகையில் கோப்ரா பெயரை சேர்ப்பது ஃபோர்டு வழக்கம். ஆட்டோமொபைல் உலகில் கோப்ரா என்ற பெயர் 1962ல் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. ஏசி கோப்ரா என்ற ஸ்பீட்ஸ்டெர் காருக்கு முதலில் கோப்ரா பெயர் வைக்கப்பட்டது.

எஸ்ஆர்டி வைப்பர்

எஸ்ஆர்டி வைப்பர்

கிறைஸ்லரின் அங்கமான டோட்ஜ் நிறுவனம் தயாரித்த எஸ்ஆர்டி வைப்பர் அல்லது டோட்ஜ் வைப்பர் என்ற நீண்ட மூக்கு கொண்ட ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு வைப்பர் என்ற விரியன் வகை பாம்பின் பெயர் சேர்க்கப்பட்டது. வைப்பர் கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் வி10 எஞ்சின் உலக அளவில் பிரபலம் வாய்ந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 17, 2013, 14:45 [IST]
English summary
People of every generation has shared a fascination for animals. Be it cavemen, the ancient Egyptians who came later or the Aztecs. Humans have always been influenced by the enigmatic creatures with whom they shared space. This fascination and admiration has continued to this day. Only difference being that instead of animal gods and animal warriors, we now have machines with references to animals.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+