ஆயுசுக்கும் மறக்க முடியாத கார்... டாடா இண்டிகா பற்றி இதுவரை யாரும் கேள்விப்படாத விஷயங்கள்... பெருமையா இருக்கு!

வரலாற்று சிறப்புமிக்க டாடா இண்டிகா காரை பற்றி இதுவரை யாரும் கேள்விப்படாத விஷயங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஆயுசுக்கும் மறக்க முடியாத கார்... டாடா இண்டிகா பற்றி இதுவரை யாரும் கேள்விப்படாத விஷயங்கள்... பெருமையா இருக்கு!

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரலாற்று சிறப்புமிக்க கார்களை உருவாக்கியுள்ளது. இதில், டாடா இண்டிகா (Tata Indica) முக்கியமானது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இண்டிகா காரை கடந்த 1998ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தொடர்ந்து 20 ஆண்டுகள் விற்பனையில் இருந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு டாடா இண்டிகா காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

ஆயுசுக்கும் மறக்க முடியாத கார்... டாடா இண்டிகா பற்றி இதுவரை யாரும் கேள்விப்படாத விஷயங்கள்... பெருமையா இருக்கு!

எனினும் இந்திய ஆட்டோமொபைல் துறையின் வரலாற்றில் டாடா இண்டிகா காரின் பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும். வரலாற்று சிறப்புமிக்க டாடா இண்டிகா காரை பற்றி பலருக்கும் தெரியாத பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதில், பல தகவல்கள் உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம்.

ஆயுசுக்கும் மறக்க முடியாத கார்... டாடா இண்டிகா பற்றி இதுவரை யாரும் கேள்விப்படாத விஷயங்கள்... பெருமையா இருக்கு!

நம்ப முடியாத வரவேற்பு!

டாடா இண்டிகா கார் கடந்த 1998ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் முதல் முழு உள்நாட்டு பயணிகள் கார் என டாடா இண்டிகா விளம்பரப்படுத்தப்பட்டது. இதுதவிர டாடா இண்டிகா கார் வரலாற்றில் இன்னும் பல்வேறு பெருமைகள் இருக்கின்றன. டீசல் இன்ஜின் உடன் விற்பனைக்கு வந்த இந்தியாவின் முதல் ஹேட்ச்பேக் கார் டாடா இண்டிகாதான்.

ஆயுசுக்கும் மறக்க முடியாத கார்... டாடா இண்டிகா பற்றி இதுவரை யாரும் கேள்விப்படாத விஷயங்கள்... பெருமையா இருக்கு!

அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் பயணிகள் ஹேட்ச்பேக் கார் என்ற பெருமையும் இண்டிகாவிற்கு உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதற்கு முன்பாக ஸ்டேஷன் வேகன் மற்றும் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களை மட்டுமே அறிமுகம் செய்திருந்தது. இப்படி நிறைய சிறப்புகளுடன் விற்பனைக்கு வந்த காரணத்தால், டாடா இண்டிகாவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஆயுசுக்கும் மறக்க முடியாத கார்... டாடா இண்டிகா பற்றி இதுவரை யாரும் கேள்விப்படாத விஷயங்கள்... பெருமையா இருக்கு!

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட வெறும் 24 மணி நேரத்தில், டாடா இண்டிகா காருக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்தன. அன்றைய காலகட்டத்தில் இது மிகப்பெரிய விஷயம் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை. பயணிகள் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னை வலுவாக நிலை நிறுத்தி கொள்வதற்கு இண்டிகாதான் அடித்தளம் அமைத்தது என்றால் மிகையல்ல.

ஆயுசுக்கும் மறக்க முடியாத கார்... டாடா இண்டிகா பற்றி இதுவரை யாரும் கேள்விப்படாத விஷயங்கள்... பெருமையா இருக்கு!

ஏற்றுமதி!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஐரோப்பிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலும் டாடா இண்டிகா காரை விற்பனை செய்தது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு டாடா இண்டிகா காரை ஏற்றுமதி செய்யும் பணி கடந்த 2004ம் ஆண்டு தொடங்கியது. இண்டிகா கார் இங்கிலாந்தில் சிட்டி ரோவர் என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுசுக்கும் மறக்க முடியாத கார்... டாடா இண்டிகா பற்றி இதுவரை யாரும் கேள்விப்படாத விஷயங்கள்... பெருமையா இருக்கு!

சத்தியத்தை காப்பாற்றிய ரத்தன் டாடா!

டாடா இண்டிகா காரின் வடிவமைப்பில் ரத்தன் டாடா அதிக ஆர்வம் காட்டினார். டாடா இண்டிகா அவருடைய மனதுக்கு மிகவும் நெருக்கமானது. ''மாருதி ஜென் காரின் பரிமாணங்களையும், அம்பாஸிடர் காரின் கேபின் அளவையும், மாருதி 800 காரின் எரிபொருள் சிக்கனத்தையும் கொண்டிருக்கும்'' என ரத்தன் டாடா கூறியிருந்தார். இந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவும் செய்தார்.

ஆயுசுக்கும் மறக்க முடியாத கார்... டாடா இண்டிகா பற்றி இதுவரை யாரும் கேள்விப்படாத விஷயங்கள்... பெருமையா இருக்கு!

தூள் கிளப்பிய விற்பனை!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததால், டாடா இண்டிகா காரின் விற்பனை தூள் கிளப்பியது. 2006-07ம் ஆண்டில் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1,44,690 இண்டிகா கார்களை விற்பனை செய்தது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள், 9.10 லட்சத்திற்கும் மேற்பட்ட இண்டிகா கார்களை டாடா உற்பத்தி செய்தது.

ஆயுசுக்கும் மறக்க முடியாத கார்... டாடா இண்டிகா பற்றி இதுவரை யாரும் கேள்விப்படாத விஷயங்கள்... பெருமையா இருக்கு!

ஒட்டுமொத்தமாக பார்த்தால் 20 ஆண்டு காலத்தில் சுமார் 15 லட்சம் இண்டிகா கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. இதில், சுமார் 9 லட்சம் கார்கள் முதல் 10 ஆண்டுகளில் விற்பனையானவை ஆகும். எஞ்சிய 6 லட்சம் கார்கள் கடைசி 10 ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்டவை. நாளடைவில் விற்பனை குறைந்த காரணத்தால்தான், 2018ம் ஆண்டு இண்டிகா காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

ஆயுசுக்கும் மறக்க முடியாத கார்... டாடா இண்டிகா பற்றி இதுவரை யாரும் கேள்விப்படாத விஷயங்கள்... பெருமையா இருக்கு!

இண்டிகா விஸ்ட்டா!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இண்டிகா காரில் அவ்வப்போது மாற்றங்களை செய்து விற்பனைக்கு கொண்டு வந்தது. இதன்படி 2003 மற்றும் 2007ம் ஆண்டுகளில் காஸ்மெட்டிக் அப்டேட்களுடன், டாடா இண்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் 2வது தலைமுறை இண்டிகா காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விஸ்ட்டா என்ற பெயரில் கடந்த 2008ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

ஆயுசுக்கும் மறக்க முடியாத கார்... டாடா இண்டிகா பற்றி இதுவரை யாரும் கேள்விப்படாத விஷயங்கள்... பெருமையா இருக்கு!

முற்றிலும் புதிய பிளாட்பார்ம் அடிப்படையில் இண்டிகா விஸ்ட்டா உருவாக்கப்பட்டது. முந்தைய தலைமுறை மாடலுடன் இது எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. அத்துடன் முந்தைய இண்டிகா உடன் ஒப்பிடும்போது, இண்டிகா விஸ்ட்டா உருவத்தில் பெரிதாகவும் இருந்தது. ஆனால் இண்டிகா விஸ்ட்டா காரின் விற்பனை கடந்த 2015ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

ஆயுசுக்கும் மறக்க முடியாத கார்... டாடா இண்டிகா பற்றி இதுவரை யாரும் கேள்விப்படாத விஷயங்கள்... பெருமையா இருக்கு!

இதன்பின்னர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உடன் இண்டிகா இவி2 (Indica eV2) காரை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வந்தது. ஆனால் விற்பனை மிகவும் மந்தமடைந்த காரணத்தால் கடந்த 2018ம் ஆண்டு இண்டிகாவின் வரலாற்றுக்கு முடிவுரை எழுதப்பட்டது. ஆனால் இந்திய சாலைகளில் இன்னமும் கூட ஏராளமான இண்டிகா கார்களை நம்மால் பார்க்க முடியும்.

ஆயுசுக்கும் மறக்க முடியாத கார்... டாடா இண்டிகா பற்றி இதுவரை யாரும் கேள்விப்படாத விஷயங்கள்... பெருமையா இருக்கு!

குறிப்பாக டாடா இண்டிகா கார்கள் இன்னமும் டாக்ஸிகளாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நம் அனைவருக்கும் டாடா இண்டிகா காருடன் ஏதாவது ஒரு வழியில் நிச்சயமாக தொடர்பு இருந்திருக்கும். நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டிய இந்திய தயாரிப்பான டாடா இண்டிகா உடனான உங்களது நினைவுகளை கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Iconic Car: Interesting Unknown Facts About Tata Indica. Read in Tamil
Story first published: Wednesday, July 7, 2021, 14:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X