நம்பர் பிளேட் ஒண்ணும் அவ்வளவு ஃபேன்சியா இல்லையே! பஹல்காம் தாக்குதலை மறக்கடிக்க எப்படி எல்லாம் யோசிக்குறாங்க!

மோகன்லால் (Mohanlal), பிரபல மலையாள நடிகர் (Actor) என்பது நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயம். மலையாள சினிமா (Cinema) துறையை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கார் & பைக்குகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பதை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். இதில் நடிகர் மோகன்லால் மட்டும் என்ன விதிவிலக்காகவா இருக்க போகிறார்... இவரிடமும் பல விலையுயர்ந்த கார்கள் உள்ளன.

அதேபோல், தனது திரைப்படங்களிலும் கார் மற்றும் பைக்குகளை பரவலாக பயன்படுத்தக்கூடியவர் நடிகர் மோகன்லால் ஆவார். இவரது நடிப்பில் 1994ஆம் ஆண்டில் வெளிவந்த 'பின்கமி' (Pingami) திரைப்படம் கேரள மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆகும். ஆக்‌ஷன் திரில்லர் (Action Thriller) திரைப்படம் என்பதால் குறிப்பாக கேரள இளம் தலைமுறையினர் மத்தியில் அந்த சமயத்தில் பின்கமி திரைப்படம் பெரிதும் கவனத்தை பெற்றது.

iconic kl-11-3433 number plate

கேப்டன் விஜய் என்கிற கதாபாத்திரத்தில் இராணுவ அதிகாரியாக இந்த படத்தில் நடித்த மோகன்லால் ராயல் என்ஃபீல்டு புல்லட் (Royal Enfield Bullet) பைக் ஒன்றை படம் முழுக்கவே பயன்படுத்துவது போன்று காட்சிகள் இருக்கும். பின்கமி திரைப்படம் வெற்றி பெற்ற பின், அதற்கு இணையாக மோகன்லால் பயன்படுத்திய புல்லட் பைக்கும் கேரளாவில் கவனத்தை பெற்றது.

இன்னும் சொல்லப்போனால், இந்த திரைப்படத்தில் மோகன்லால் பயன்படுத்திய புல்லட் பைக்கில் பொருத்தப்பட்டு இருந்த '3433' என்கிற பதிவெண்ணை கொண்ட நம்பர் பிளேட்டை (Number Plate) போன்று கேரளாவில் நிறைய பேர் தங்களது பைக்கிற்கும் '3433' வாகன பதிவெண்ணை பெற ஆரம்பித்தனர். இதனாலேயே கேரளாவில் இப்போதும் பரவலாக நிறைய பேரது பைக்குகளில் இந்த பதிவெண்ணை காணலாம்.

iconic kl-11-3433 number plate

குறிப்பாக, கேரளாவில் ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கை வைத்திருக்கும் 10இல் 5 பேர் '3433' பதிவெண்ணை கொண்டுள்ளனர். இந்த நிலையில், சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மோகன்லால் கலந்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சி ஆனது பஹல்காம் (Pahalgam) தாக்குதலினால் அந்த பகுதிக்கு செல்ல அச்சப்படும் மக்களுக்கு தைரியம் அளிக்கும் விதமாக, பஹல்காம் பகுதிக்கு கேரளாவில் இருந்து சாலை வழியாக செல்லும் பைக் ரைடர்களின் பயணத்தை துவங்கி வைக்கும் நிகழ்ச்சி ஆகும்.

பைக் ரைடர்கள் பலர் தங்களது பைக்குகள் உடன் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பைக் பயணத்தை மோகன்லால் துவங்கி வைத்தார். அப்போது, ரைடர்கள் சிலர் தங்களது பைக்கின் '3433' என்கிற நம்பர் பிளேட்டை மோகன்லாலிடம் காண்பித்து மகிழ்ந்தனர். அவ்வாறு, ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக் உரிமையாளர் ஒருவர் தனது பைக்கின் '3433' நம்பர் பிளேட்டை மகிழ்ச்சியுடன் காண்பித்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

மோகன்லாலிடம் '3433' நம்பர் பிளேட்டை காண்பித்து மகிழ்ந்த அந்த புல்லட் 350 பைக் ஓனர் வேறு யாருமில்லை, மலையாள திரைப்பட தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பவூர் ஆவார். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இவர் நீண்ட வருடங்களாக இந்த நம்பர் பிளேட் உடன் புல்லட் பைக்கை பயன்படுத்தி வருகிறாராம். ஆனால், இந்த வீடியோவை பார்த்த பலரும் நடிகர் மோகன்லால் '3433' நம்பர் பிளேட் உடன் புதியதாக ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கை வாங்கி உள்ளதாக புரளியை கிளப்பிவிட்டனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு சினிமா திரைப்படத்தால் மக்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு நடிகர் மோகன்லாலின் பின்கமி திரைப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த திரைப்படத்தில் இராணுவ அதிகாரியாக நாட்டை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருந்ததாலேயே, பஹல்காம் நோக்கிய இந்த நாட்டுப்பற்று மிக்க பயணத்தை துவங்கி வைக்க மோகன்லால் அழைக்கப்பட்டுள்ளார். '3433' நம்பர் பிளேட்டை பற்றி பேசும் அதேநேரத்தில் நாம் புல்லட் 350 பைக்கின் தரத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.

Source: Cartog (https://www.cartoq.com/)

More from DriveSpark

Article Published On: Thursday, July 24, 2025, 5:00 [IST]
English summary
Iconic kl 11 3433 number plate again spotted with actor mohanlal check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+