நிலாவுக்கு ரோடு போட்டு கார்ல போனா எவ்வளவு நேரம் ஆகும்? இப்படி ஒன்னு நடக்க வாய்ப்பு இருக்கா?

இஸ்ரோ விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய சாதனையாக சந்திரயான்3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறக்கி உள்ளனர். தற்போது இது குறித்து தான் இந்தியா முழுவதும் பேச்சு இருந்து வருகிறது. இந்நிலையில் பூமியிலிருந்து நிலாவிற்கு ரோடு போட்டு அதில் கார்கள் சென்றால் நிலவிற்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்ற ஒரு விசித்திரமான கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கான விடையை தான் இங்கே காண போகிறோம்.

இஸ்ரோ சந்திரனை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சரியாக திட்டமிட்டபடி நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறக்கியுள்ளது. இதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் உலக அளவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனைக்கு தற்போது உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

chandrayaan 3

நிலவின் தென் துருவப் பகுதியில் தனது விண்கலத்தை தரை இயக்கிய உலகின் முதல் நாடாக இஸ்ரோ மாறி உள்ளது. இதுவரை எந்த நாடும் இந்த முயற்சியில் வெற்றி பெறவில்லை. அனைத்து நாடுகளும் தோல்வியே சந்தித்துள்ளன. அந்த அளவுக்கு சவாலான விஷயத்தை இஸ்ரோ அசால்டாக செய்துவிட்டது. இதோடு நிற்கவில்லை அடுத்ததாக தற்போது ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்வெளிக்கு அனுப்பி உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள பல தற்போது விண்வெளி குறித்தும் நிலவு குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். விண்வெளி ஆய்வில் மக்களின் ஆர்வம் தற்போது அதிகமாகியுள்ளது. இந்நிலையில் பூமியிலிருந்து நிலவிற்கு சாலை அமைத்து அதில் காரில் சென்றால் எவ்வளவு நேரம் ஆகும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.

chandrayaan 3

இந்த கேள்வியை பார்க்கும் போதே நமக்கு விசித்திரமாக இருக்கும். பலருக்கு இந்த கேள்விக்கு என்ன பதில் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால் இப்படியாக பூமியிலிருந்து நிலவுக்கு சாலை அமைத்து கார் விடும் அளவிற்கு இதுவரை விஞ்ஞானம் வளர்ச்சியடையவில்லை. உலகில் எந்த நாட்டிடமும் இதற்கான தொழிற்நுட்பமும் ஐடியாவும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் பூமியிலிருந்து நிலவுக்கு சாலை அமைப்பது கார் விடுவது என்பது சாத்தியமா என்பதே தெரியவில்லை. பூமியும் நிலவும் ஒரே இடத்தில் நிற்கக்கூடிய விஷயம் அல்ல இரண்டும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமி சூரியனையும் நிலவு பூமியையும் சுற்றி வருகிறது. இரு விஷயங்களையும் சாலை மூலம் இணைப்பது என்பது தற்போது உள்ள அறிவியல் படி சாத்தியமே இல்லாத ஒரு விஷயமாகும்.

chandrayaan 3

இந்த லாஜிக்கை எல்லாம் ஒரு ஓரமாக வைத்துவிட்டு ஒரு வேலை நிலவுக்கும் பூமிக்கும் இடையே சாலை அமைத்து அதில் ஒரு காரில் பயணம் செய்கிறோம் என்றால் பூமியிலிருந்து நிலவுக்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என ஒரு கணக்கீடு செய்வோமா? பூமிக்கும் நிலவுக்கும் இடையே தற்போது 3,84,400 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது.

ஒரு வேளை பூமியிலிருந்து நிலவிற்கு சாலை அமைக்க வேண்டும் என்றால் இவ்வளவு தூரத்திற்கும் சாலை அமைக்க வேண்டும். இவ்வளவு தூரம் சாலை அமைத்த பின்பு இதில் ஒரு காரில் பூமியிலிருந்து கிளம்பி நிலவிற்கு செல்ல வேண்டும் என வைத்துக்கொண்டால் கார் குறைந்தபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும் கார் நிலவுக்கு செல்ல 3844 மணி நேரம் ஆகும்.

அதாவது பூமியிலிருந்து கிளம்பி 160 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்தால் தான் நிலவிற்கு சென்றடைய முடியும். இது தான் தற்போது இருக்கும் நிலைமை இது எல்லாம் சாத்தியமே இல்லை தொடர்ந்து 160 நாட்கள் வாகனம் தொடர்ந்து 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பது சாத்தியமில்லாததுதான். இருந்தாலும் ஒரு ஆர்வத்திற்காகவும் ஒரு கற்பனைக்காகவும் மட்டுமே இதை நாம் கணக்கிடோம்.

நிலவிற்கு பூமியிலிருந்து ராக்கெட் மூலம் மனிதர்கள் அடிக்கடி சென்று வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. இஸ்ரோ உள்ளிட்ட பல விண்வெளி ஆய்வு மையங்கள் எல்லாம் தற்போது நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் முயற்சியில் இறங்க உள்ளனர். முதல் கட்ட சோதனையாகவே இஸ்ரோ நிலவுக்கு சென்ற சந்திரயான் 3 விண்கலத்தில் அங்கிருந்து ஒரு சோதனையை செய்து நிலவிலிருந்து மனிதன் மீண்டும் பூமிக்கு வர முடியுமா என டெஸ்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய புதிய விஷயங்கள் எல்லாம் கற்பனையில் இருந்து முதலில் தொடங்குகிறது. அதனால் நிலவிற்கு பூமியிலிருந்து சாலை அமைத்து காலில் செல்ல வேண்டும் என்பது ஒரு கற்பனையாக இருந்தாலும் இப்படியாக பூமியில் இருந்து மனிதர்கள் அடிக்கடி நிலவுக்கு சென்று வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்தியாவே விரைவில் மனிதர்களை நிலவிற்கு அனுப்பி சோதனை செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.

Article Published On: Monday, September 4, 2023, 16:40 [IST]
English summary
If a road existed to the moon how long would a car trip take
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X