பூவை தேடி வரும் வண்டுகளை போல.. இந்த ஐந்து உங்க காரில் இருந்தா போலீஸ் தேடி வந்து செல்லாணை கொடுத்துட்டு போவாங்க!

பூத்துக் குலுங்கும் பூக்களை எங்கெங்கிருந்தோ வண்டுகளும், தேனீக்களும் தேடி வருவதைப் போல, வாகனங்கள் விஷயத்திலும் போலீஸ் அபராத செல்லாண்கள் ஒரு சில காரணங்களுக்காக வெவ்வேறு விதமான வழிகளில் தேடி வரும் சூழல் உள்ளது. அப்படியாக போலீஸ் அபராதத்தைத் தேடி வர செய்யக் கூடிய ஐந்து வீணாபோன கார் பாகங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கும் பொருட்டு பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறுபவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக வாகன மாடிஃபிகேஷன் செயலுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மிக மிகக் கடுமையான இருக்கின்றது.

Tinted windows

வாகன மாடிஃபிகேஷன் என்ற உடன் வாகனத்தின் உருவத்தை மாற்றுவது மட்டுமே வாகன மாடிஃபிகேஷன் என நினைத்துக் கொள்ள வேண்டாம். வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஆஃப்டர் மார்க்கெட் பொருட்களை பயன்படுத்துவதும் வாகன மாடிஃபிகேஷன் செயலுக்கு இணையானதானதே ஆகும். எனவேதான் இந்த விஷயத்தில் போக்குவரத்து காவல்துறை அதிக கெடுபிடியைக் காட்டுகின்றது.

வாகன அழகிற்காக மற்றும் கெத்துக்காக என நாம் பயன்படுத்தும் ஒரு சில பொருட்கள் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக இந்தியாவில் பன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், இதை உணராமல் பலர் தடை செய்யப்பட்ட சந்தைக்கு பிறகான வாகன அணிகலன்களை வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இவற்றின் பயன்பாட்டை தவிர்க்கவே போலீஸார் அதனைக் கண்ட உடனேயே அதிரடி நடவடிக்கையில் களமிறங்கிவிடுகின்றனர். குறிப்பாக, ஒரு சில பாகங்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் அதற்கு அபராதம் வழங்கப்படுவதோடு, அந்த பகத்தை சம்பவ இடத்திலேயே அகற்றை அழித்து விடுவார்கள். அப்படியான டாப் 5 பாகங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Bull bars

புல் பார் (Bull Bars): விபத்தின்போது ஏற்படும் கடுமையான சேதங்களைத் தவிர்க்க இந்த அம்சம் உதவுகின்றது. இந்தியாவின் குறிப்பிட்ட சில நகரங்களில் பம்பர்-டூ-பம்பர் டிராஃபிக் நிலவுகின்றது. இந்த மாதிரியான சாலையில் பயணிக்கும்போது சின்ன உரசல்கள் வாகனங்களுக்கு இடையில் ஏற்படும். இத்தகைய உரசல்களைத் தவிர்க்கவும் இந்த புல் பார்கள் பயன்படுத்தப்பட்டன.

ஆனால், இதனை பயன்படுத்தக் கூடாது என அதிரடி உத்தரவு நாட்டில் போடப்பட்டு இருக்கின்றன. இதற்கு பின்னால் இருக்கும் ஒரே காரணம் ஏர் பேக். மிக மோசமான விபத்துகளின்போது ஏர் பேக்கை திறக்க விடாமல் செய்வதில் புல் பார்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன.

எனவேதான் இவற்றின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏர் பேக்கை திறப்பதற்கான சென்சார்கள் காரின் முகப்பு பகுதியிலேயே இடம் பெற்றிருக்கும். குறிப்பிட்ட வேகத்தில் கார் மோதும்போது அந்த சென்சார்கள் தானாக இயங்கி ஏர் பேக்கை ஆக்டிவேட்டை செய்யும். ஆனால், இந்த செயலுக்கு தடையாக புல் பார்கள் இருக்கின்றன. எனவேதான் அதை பயன்படுத்த நாட்டில் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது.

Additional light

கூடுதல் மின் விளக்குகள்: ஒரு சிலர் வாகனங்களில் வழங்கப்படும் ஹெட்லைட்டுகளைத் தாண்டி கூடுதல் லைட்டுகளை பயன்படுத்துகின்றனர். அலங்காரத்திற்காகவும், அழகிற்காகவும் பயன்படுத்தப்படும் இந்த லைட்டுகள் பிற வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வெளிச்சத்தை வேளியேற்றும். இதனால், பார்வையில் பிரச்னை ஏற்பட்டு விபத்துகள் அரங்கேறலாம். எனவேதான், இந்த கூடுதல் லைட்டுகள் விஷயத்திலும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

Air horn

ஏர் ஹாரன்கள்: ஒலி மாசுப்படுத்துவதில் இந்த வகை ஹாரன்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இருப்பினும், ஒரு சிலர் சாலையில் செல்லும்போது பிறரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இத்தகைய ஹாரன்களை பயன்படுத்துகின்றனர். இது ஒலி மாசை மட்டுமல்ல கேட்கும் திறனையும் பாதிக்கச் செய்யும். எனவேதான் ஏர் ஹாரன்களை பயன்படுத்த நாட்டில் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது.

பெரிய அளவுள்ள டயர் மற்றும் வீல்கள்: வழக்கமான அளவைக் காட்டிலும் பெரிதாக காட்சியளிக்கும் வீல் மற்றும் டயர்களைப் பயன்படுத்துவதற்கு பின்னால் பேராபத்து நிலவுகின்றது. குறிப்பிட்ட அந்த வாகனத்திற்கு மட்டுமின்றி பிறருக்கும் ஆபத்து ஏற்படக் கூடும். இதனால்தான் கேரளா போன்ற மாநில அரசுகள் இந்த ஆஃப்டர் மார்க்கெட் பெரிய வீல் மற்றும் டயர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன.

Number plate

ஆடம்பர மாற்றங்கள்: ஆடம்பர மாற்றங்கள் என வரும்போது வாகனத்தின் வெளிப்புற தோற்றத்தை மாற்றம் செய்யக் கூடிய அனைத்து மாற்றங்களும் இதில் அடங்கும். அடர் கருப்பு நிற ஸ்டிக்கர்களை ஜன்னல் கண்ணாடிகளில் பயன்படுத்துவது தொடங்கி பாடி கிட்களை கூடுதலாக சேர்ப்பது வரை என அனைத்தும் ஆடம்பர மாற்றங்கள் மாற்றம். இதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், டேமேஜான நம்பர் பிளேட் இருந்தாலும் அபராதம் உங்களை தேடிவரும் என்பதை மறவாதீர்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த இந்த ஐந்து விஷயங்களை நீங்கள் உங்கள் காரில் செய்து இருந்தால் அதற்காக நீங்கள் எப்போது வேண்டுமானலும் அபராத செல்லாணை போலிஸாரிடத்தில் இருந்து பெற நேரிடலாம். இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மேலே பார்த்த எந்தவொரு அணிகலன் வாகனங்களில் காணப்பட்டாலும் அவை உடனடியாக அகற்றப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 31, 2023, 15:32 [IST]
English summary
If these five are in your car it can attract challan
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X