அதிக வேகம் கொண்ட ரேஸிங் காரை தயாரித்து ஐ.ஐ.டி மாணவர்கள் சாதனை

Written By:

பாதுகாப்பான ரேஸிங் இந்தியாவில் நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி கௌஹாத்தி ஐ.ஐ.டி கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் புதிய ரேஸிங் கார் ஒன்றை தயாரித்துள்ளனர்.

ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய இந்தியாவின் முதல் ரேஸிங் கார்!

60 கிலோ.மீட்டர் தூரத்தை 5 முதல் 6 நொடிகளில் அடையக் கூடிய திறன் பெற்ற இந்த ரேஸிங் காருக்கு மாணவர்கள் ‘டாகியன்' என பெயரிட்டுள்ளனர்.

ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய இந்தியாவின் முதல் ரேஸிங் கார்!

அறிவியல் துறையில் ஒளியைக் காட்டிலும் அதிக வேகத்தில் நகரும் துகள்களை ‘டாகியன்' என அனுமானமான பெயரில் குறிப்பிடுவர். அதன் காரணமாக அதி வேகத்தில் செல்லும் திறன் பெற்ற இந்த ரேஸிங் காருக்கு மாணவர்கள் ‘டாகியன்' என பெயரிட்டுள்ளனர்.

ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய இந்தியாவின் முதல் ரேஸிங் கார்!

இந்தியாவில் தயாரிக்கபப்ட்ட முதல் ரேஸிங் காரன இதில் 600சிசி பவரை வழங்கும் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு மணிநேரத்தில் அதிகப்பட்சம் 110 முதல் 120 கிலோ மீட்டர் தூரத்தை சென்றடையும் திறன் பெற்றது.

மேலும் காரின், அக்செல்ரேஷன் தொழில்நுட்பம் மிகவும் வலிமை உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய இந்தியாவின் முதல் ரேஸிங் கார்!

ஃபார்மூலா ரேஸிங் போன்று பெரிய கார் பந்தயங்கள் இந்தியாவில் நடத்த வாய்ப்புகள் இல்லை என்றும், அதற்கான ஒரு பாதுகாப்பான இடத்தை இந்தியாவில் தேர்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த புதிய ரேஸிங் காரை உருவாக்கியுள்ளதாக ஐ.ஐ.டி மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய இந்தியாவின் முதல் ரேஸிங் கார்!

பொறியல் படிப்பை பாடமாக மட்டும் படிக்காமல், தற்போதைய காலத்தில் அதிலிருக்கும் செய்முறைகளையும் பயில்வதே எதிர்கால தொழிநுட்ப உலகிற்கு ஏற்றது என்பதும் மாணவர்களின் கருத்தாக உள்ளது.

ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய இந்தியாவின் முதல் ரேஸிங் கார்!

சமீபத்தில் கோயமுத்தூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரி நடத்திய ஒரு ஸ்போர்ட் ஈவெண்டில், ஐ.ஐ.டி மாணவர்களின் ரேஸ் கார் 2வது இடம் பிடித்துள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
IIT students of guwahati made high speed racing car. This racing car is probably the first ever sports car made in India

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark