லம்போர்கினி எல்லாம் ஓரமா நில்லு; சென்னை மாணவர்களை வியந்து பார்க்கும் உலகம்! என்ன செஞ்சாங்கன்னு தெரியுமா?

சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்கள் இணைந்து முதல் எலெக்ட்ரிக் ரேஸ் காரை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர். இந்த காரை அவர்கள் விரைவில் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் ரேஸ்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இந்த செய்தி குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

கல்வி நிறுவனங்களிலேயே இந்தியாவில் உயர்வான நிலையில் இருக்கும் நிறுவனம் ஐஐடி தான். சென்னையில் ஐஐடி கல்வி நிறுவனம் இந்தியாவில் முக்கியமான ஒன்று இங்கு ஏராளமான சாதனையாளர்கள் எல்லாம் படித்தனர். இங்குப் படிக்கும் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் எல்லாம் உலக அளவில் பெரும் சாதனைகளை எல்லாம் படைத்திருக்கிறது. தற்போது இந்த பட்டியலில் புதிய சாதனை ஒன்று இணைந்துள்ளது.

லம்போர்கினி எல்லாம் ஓரமா நில்லு; சென்னை மாணவர்களை வியந்து பார்க்கும் உலகம்! என்ன செஞ்சாங்கன்னு தெரியுமா?

ஐஐடி பேராசிரியர் சத்யநாராயணன் சேஷாத்திரியின் ஆலோசனையின் கீழ் இயக்க மாணவர்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த குழுவிற்கு மாணவர்களின் ஒருவரான கார்த்திக் கருமாச்சி என்பவர் தலைமை வகித்தார். இந்த குழுவில் சென்னை ஐஐடியில் உள்ள 10 வித விதமான துறைகளிலிருந்து 45 மாணவர்கள் இணைந்தனர். இந்த குழு முழுவதுமாக எலெக்ட்ரிக்கில்இயங்கும் ரேஸ் கார் ஒன்றைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆய்வுப் பணிகள் துவங்கியது.

இந்த பணிகளைத் துவங்கிய நிலையிலேயே கொரோனா தொற்று பரவியதால் இந்த குழு பெரிய அளவில் செயல்பட முடியாமலிருந்தது. இருந்தாலும் இந்த குழு கொரோனா காலகட்டத்திலும், விடாது ஆன்லைனிலேயே இந்த காருக்கான வடிவமைப்பை சிமுலேஷன் முறையில் செய்து முடிக்க முயற்சி செய்து வெற்றி பெற்றனர். அதன்படி சிமுலேசனும் தயாரானது, அது வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட நிலையில் கொரோனா முடிந்த பின்பு இதற்குச் செயல்வடிவம் கொடுக்க முயற்சி செய்யப்பட்டது.

ஐஐடி மாணவர்கள் குழு இந்த எலெக்ட்ரிக் ரேஸ் காருக்கு வடிவம் கொடுத்து இதை வெற்றிகரமாகச் சாதித்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ரேஸ் காரை பொது பார்வைக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியொன்று நடந்தது. ஐஐடி கல்வி நிறுவன இயக்குநர் காமகோடி இந்த காரை பொது பார்வைக்காக அறிமுகப்படுத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசும் போது : "எந்த தொழிற்நுட்பமாக இருந்தாலும் அதை முழுமையாக ஸ்டிரஸ் டெஸ்ட் செய்ய வேண்டும். அப்படியாக இந்த காருக்காக பேட்டரியில் ஸ்டிரஸ் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. " எனக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் "இன்று உலகமே எலெக்ட்ரிக் வாகனத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகன துறை புதிதாகப் பிறந்த குழந்தை தான். இதற்கான வளர்ச்சி மற்றும் மேம்பாடு இன்னும் பல காத்திருக்கிறது. வருங்காலத்தில் சாலைகளில் பெரும்பாலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் இருப்பதை பார்க்க முடியும்"என கூறினார்.

ஐஐடி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய இந்த முதல் எலெக்ட்ரிக் ரேஸ் கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4 நொடிகளில் எட்டி பிடிக்கும் திறன் கொண்டது. இது மட்டுமல்ல இந்த கார் அதிகபட்சமாக 160 கி.மீ வேகம் வரை செல்லும் என கூறப்பட்டுள்ளது. இந்த காரில் சக்தி என்ற மைக்ரோ புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட புரோசஸர், இது வாகனத்தின் அனைத்து பாகங்களையும் கண்ட்ரோல் செய்யும் திறன் கொண்டது.

இது மட்டுமல்ல இந்த கார் பாதுகாப்பான, அதிக நிலைத் தன்மை கொண்ட, நீடித்த உழைப்பை வெளிப்படுத்தும் ஒரு காராக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக எலெக்ட்ரிக் வாகன துறையில் நீண்ட கால பிரச்சனையான பேட்டரி சூடாவதைத் தடுக்க தெர்மல் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தை இந்த குழு உருவாக்கியுள்ளது. இது பேட்டரி சூடாகி வெடிப்பதைத் தடுக்கும். இது மட்டுமல்ல இந்த காரை சார்ஜ் செய்வதையும் கட்டுப்படுத்த பல புதிய தொழினுட்பங்களைப் புகுத்தியுள்ளனர்.

இந்த காரை வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் கோவை காரி மோட்டார் ஸ்பீடுவேயில் நடக்கவுள்ள கார் பந்தயத்தில் கலந்து கொள்ள வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தாக அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியில் நடக்கவுள்ள ஃபார்முலா ஸ்டூடென்ட் ஜெர்மனி போட்டியிலும் இந்தியா சார்பில் இந்த காரை பங்கேற்ற வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கு தற்போது RFR23 எனப் பெயர் வைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இந்த காருக்கான செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
IIT madras unveiled its first electric racing car
Story first published: Tuesday, November 29, 2022, 16:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X