தமிழ் சினிமாவின் 'இளமை' தளபதி நடிகர் விஜயின் கார் கலெக்ஷன்: சிறப்பு பகிர்வு

இளமை தளபதியாக ரசிகர்கள் நெஞ்சில் குடியிருக்கும் நடிகர் விஜய் சமீபத்திய படங்கள் மூலமாக மக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார். இந்த நிலையில், தமிழ் சினிமா உலகின் மிக முக்கிய கலைஞனாக போற்றப்படும், நடிகர் விஜய் கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

அதனை அவர் வைத்திருக்கும் கார்கள் மூலமாக தெரிந்துகொள்ளலாம். அவருக்கான மாஸ் நடிகர் என்ற அடையாளம் அவரை ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் எளிதாக இணைய வைத்ததற்கான காரணம். வாருங்கள் நடிகர் விஜய் கராஜிற்கு ஒரு விசிட் அடிக்கலாம்.

01. நிசான் எக்ஸ்- ட்ரெயில்

01. நிசான் எக்ஸ்- ட்ரெயில்

நடிகர் விஜய் கராஜில் இருக்கும் ஓர் அற்புதமான எஸ்யூவி மாடல் நிசான் எக்ஸ்- ட்ரெயில். தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின் ஆகியவற்றின் மூலம் நடிகர் விஜய்யை கவர்ந்துவிட்டது. இது மிகச்சிறந்த ஆஃப் ரோடு எஸ்யூவி மாடல் என்பதே விஜய்யை கவர்ந்ததற்கு காரணம். அதாவது, விஜய்க்கு ஆஃப்ரோடு ஆர்வம் இருப்பதை வெளிக்காட்டும் தன்மை கொண்டதாக அவரது கராஜில் இருக்கும் மாடல்.

 நிசான் எக்ஸ்- ட்ரெயில் தொடர்ச்சி...

நிசான் எக்ஸ்- ட்ரெயில் தொடர்ச்சி...

5 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதி கொண்ட இந்த எக்ஸ்- ட்ரெயில் எஸ்யூவியில் மிகச்சிறப்பான லெக் ரூம் கொண்டது. இந்த எஸ்யூவியில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வழங்கும். அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. இப்போது விற்பனையில் இல்லை.

ஆடி சொகுசு கார்

ஆடி சொகுசு கார்

ஆடி இல்லாத சினிமா நட்சத்திரம் இல்லை எனும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், நடிகர் விஜய்யிடம் ஆடி ஏ8எல் சொகுசு கார் ஒன்று உள்ளது. ஆடம்பர கார்களுக்கு இணையான அம்சங்கள் பொருந்திய கார் மாடல் இது. இடவசதியிலும், வசதிகளிலும் ஈடு இணையற்ற இந்த மாடலை நடிகர் விஜய் வைத்திருக்கிறார்.

ஆடி ஏ8எல் தொடர்ச்சி...

ஆடி ஏ8எல் தொடர்ச்சி...

இந்தியாவில் ஆடி ஏ8 கார் Long Wheelbase என்பதை குறிக்கும் வகையில், ஆடி ஏ8எல் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. ஆடி ஏ8எல் கார் ரூ.1.17 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நடிகர் விஜய் விரும்பி தினசரி பயன்படுத்தும் மாடல்களில் ஒன்று.

பிஎம்டபிள்யூ எக்ஸ்5

பிஎம்டபிள்யூ எக்ஸ்5

தான் ஒரு பிஎம்டபிள்யூ பிரியர் என்று நடிகர் விஜய் ஒருமுறை தெரிவித்துள்ளார். அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன் பிஎம்டபிள்யூவின் இரண்டாம் தலைமுறை எக்ஸ்5 சொகுசு எஸ்யூவி மாடல் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வருகிறார். அதனை தானே ஓட்டுவதிலும் அவருக்கு அலாதி பிரியம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 தொடர்ச்சி...

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 தொடர்ச்சி...

நடிகர் விஜய் வைத்திருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் உள்ளது. மேலும், எக்ஸ்- ட்ரைவ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது. தனித்துவமான வடிவமைப்பும், செயல்திறனும் விஜய்யை கவர்ந்துவிட்டது.

 டொயோட்டா இன்னோவா

டொயோட்டா இன்னோவா

சொகுசு கார்களுக்கான இணையான இடவசதி, சொகுசை வழங்கும் டொயோட்டா இன்னோவாவுக்கு ரஜினி, விஜய் போன்றவர்கள் ரசிகர்களாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆம், நடிகர் விஜய்யிடம் டொயோட்டா இன்னோவா காரும் உள்ளது.

டொயோட்டா இன்னோவா தொடர்ச்சி...

டொயோட்டா இன்னோவா தொடர்ச்சி...

டொயோட்டா இன்னோவா காரின் இருக்கை அமைப்பு மிகச்சிறப்பானதாக இருக்கிறது. இந்த காரில் 100 பிஎச்பி பவரையும், 200என்எம் டார்க்கையும் வழங்கும் 2.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஸ்யூவியில் 6 பேர் சாவகாசமாக அமர்ந்து பயணிக்க முடியும் என்பதும் நடிகர் விஜய் வாங்கியதற்கான கூடுதல் காரணம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்6

பிஎம்டபிள்யூ எக்ஸ்6

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மட்டுமின்றி, பிஎம்டபிள்யூ எக்ஸ்6 சொகுசு எஸ்யூவி மாடலும் நடிகர் விஜய்யிடம் உள்ளது. இதன் தனித்துவமிக்க டிசைன்தான் நடிகர் விஜய்யை கவர்ந்ததற்கு காரணம்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்6 தொடர்ச்சி...

பிஎம்டபிள்யூ எக்ஸ்6 தொடர்ச்சி...

இந்த க்ராஸ்ஓவர் மாடலில் 6 சிலிண்டர் கொண்ட 3 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் உள்ளது. உயர்வகை சொகுசு வசதிகள், சிறப்பான கையாளுமை ஆகியவை இந்த காரை விஜய் தேர்வு செய்ததற்கான காரணங்களாக இருக்கும்.

ரோல்ஸ்ராய்ஸ் கார்

ரோல்ஸ்ராய்ஸ் கார்

ரோல்ஸ்ராய்ஸ் குடும்பத்தில் இணைவது அவ்வளவு லேசு பட்ட காரியமல்ல. அதில், தமிழ் திரையுலகினில் இருந்து மெகா இயக்குனர் ஷங்கருக்கு அடுத்ததாக, நடிகர் விஜய் இணைந்துள்ளார். ஆம், ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரை சில ஆண்டுகளுக்கு முன் வாங்கி தனது கராஜின் மதிப்பை கூட்டினார் விஜய்.

 ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் தொடர்ச்சி...

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் தொடர்ச்சி...

ரூ.3.5 கோடியில் இந்த காரை விஜய் வாங்கியுள்ளார். இந்த காரில் 570 பிஎச்பி பவரையும், 780 என்எம் டார்க்கையும் வழங்கம் 6.6 லிட்டர் வி12 எஞ்சின் உள்ளது. அதேநேரத்தில், இதுதான் ரோல்ஸ்ராய்ஸ் விற்பனை செய்யும் மாடல்களில் குறைவான விலை கொண்டது.

மினி கார்

மினி கார்

ஜில்லா படத்தில் நடித்தபோது இந்த மினி கூப்பர் எஸ் காரை வாங்கியதுடன், அதனை சூட்டிங் ஸ்பாட்டிற்கும் எடுத்து வந்திருந்தார். அப்போதே, ஜில்லாவுக்கு மினியில் வந்த விஜய் என்ற தலைப்பில் செய்தியாக வழங்கியிருந்தோம். அடக்கமான வடிவத்தில் அனைவரையும் அசரடிக்கும் டிசைன் கொண்டதாக இருந்தது.

 மினி கூப்பர் எஸ் தொடர்ச்சி

மினி கூப்பர் எஸ் தொடர்ச்சி

மினி கூப்பர் எஸ் காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 184 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க்கையும் வழங்கும். இதன் செயல்திறன்தான் விஜய்யை கவர்ந்ததாக இருக்கிறது.

கூடுதல் செய்திகள்

கூடுதல் செய்திகள்

More from DriveSpark

Article Published On: Monday, June 22, 2015, 12:53 [IST]
English summary
Ilaya Thalapathy Vijay Car Collection.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+